10 ஏப்ரல், 2017

திட்டமிட்டு கட்டப்பட்ட ‘நிலவு’

பூமி கிரகத்தின் நிலவானது முற்றிலும் வேறுபட்ட ஒரு விண்வெளி பொருள் என்றும், அதனுள் பல புதிரக்ளும் மர்மங்களும் இருகின்றன என்றும் நம்பப்படுகிறது. அதில் மிகவும் அசாத்தியமான ஒரு சதியாலோசனை கோட்பாடு பற்றியது தான் இந்த தொகுப்பு..!
அதாவது, பூமி கிரகத்தின் நிலவானது தூசி மற்றும் பாறைகளை கொண்டு 3 மைல் தடிமனான வெளி அடுக்கு கொண்ட ஒரு விண்வெளி பொருளாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என்றும், மேலும் நிலவிற்குள் சுமார் 20 மைல் சுற்றளவில் திடமான ஷெல் அமைப்பு உள்ளது என்றும், அந்த ஷெல் மிகவும் எதிர்ப்பு நிறைந்த பொருட்களான டைட்டானியம், யுரேனியம் 236, மைக்கா, நெருப்பியம் 237 போன்ற கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறன சதியாலோசனை கோட்பாடுகள். அதற்கான சாத்தியமான ஆதாரங்களும் முன்வைக்கப்படுகின்றன..! முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.
ஏலியன் மற்றும் யூஎப்ஒ நம்பிக்கையாளர்கள், நிலவு என்பது மனிதர்களையும் பூமி கிரகத்தையும் கண்காணிக்கும் ஒரு ஏலியன் தளம் (Gaint Base) என்றும் நம்புகின்றனர்.  நிலவின் இருப்பை விட, நிலவு என்று ஒன்று கிடையாது என்பதை நிரூபிப்பது தான் மிகவும் எளிமையானது" என்கிறார் நாசா விஞ்ஞானியான ராபின் பிரட்..!
 7 ஆதாரங்கள் :
 நிலவை சுற்றிய மர்மங்களுக்கும் குழப்பங்களுக்கும் அடித்தளமாய் இருப்பது, நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள் தான்..! ஆதாரம் #1 :
1969 நவம்பரில், நாசா வேண்டுமென்றே சந்திரனில் ஒரு டன் வெடிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த தனது லூனார் மாடூலை (lunar module) நிலவின் மேல் மோத செய்தது. அதிர்வொலி : அந்த மோதலில் இருந்து அதிர்ச்சி அலைகளை உருவாக்கி நிலவில் என்ன நேர்கிறது என்பதை ஆராயப் பார்த்தது மோதலையும் நிகழ்த்தியது. மோதலுக்கு பின்பு சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் சுமார் 30 நிமிடங்களுக்கு நிலவில் மணி அடிப்பது போல அதிர்வொலி ஏற்பட்டுள்ளது.  பிரம்மாண்டமான நீரியல் தடை : மோதலின் போது நிலவு அதிர்வொலி மட்டும் வெளிக்கிடவில்லை, அதனுள் இருக்கும் பிரம்மாண்டமான நீரியல் தடையை நிரூபிக்கிறது என்று கூறுகிறார் கென் ஜான்சன் (தரவு மற்றும் புகைப்படம் கட்டுப்பாட்டு துறை மேற்பார்வையாளர்). இதன் மூலம் சந்திரன் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒன்றாக தெரிகிறது என்கின்றன கோட்பாடுகள்.!
ஆதாரம் #2 :
சந்திரனில் கிடைக்கப்பெற்ற சில கூறுகள் (elements) ஆனது, நிலவிற்கு துளியும் தொடர்பில்லாத கூறுகள் ஆகும்..! மேல் பகுதி : முதலில் சோவியத் அறிவியல் அகாடமி,நிலவின் மேல் பகுதி மிகவும் தடினமாக இருப்பது எதனால்?, உடன் நிலவில் டைட்டானியம் போன்ற கனிமங்கள் கொண்டிருப்பது என்ன? போன்ற பல கேள்விகளை கிளப்பியது. பதப்படுத்தப்பட்ட உலோகங்கள் : சில நிலவு பாறைகளில் பதப்படுத்தப்பட்ட மற்றும் இதுவரை எங்குமே இயற்கையாக கிடைக்கப் பெறாத உலோகங்கள் ஆன பிராஸ், மைக்கா,யுரேனியம் 236 மற்றும் நெருப்பியம் 237 ஆகியவைகளின் கூறுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன. அணுசக்தி : யுரேனியம் 236 ஆனது அணுசக்தி மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட யுரேனியத்தில் காணப்படும் கதிரியக்க அணு கழிவாகும். இதெப்படி நிலவில் கிடைக்க பெறுகிறது..? கதிரியக்க மாழை : அணு உலை தயாரிப்பு மற்றும் புளுட்டோனியம் தயாரிப்பு ஆகியவைகளின் மூலமாக கிடைக்கும் கதிரியக்க மாழை தான் நெருப்பியம் 237. இதெப்படி நிலவில் கிடைக்கப்பெறுகிறது..? இது போன்ற மிகவும் சிக்கலான கேள்விகள் நிலவு கட்டமைக்கப்பட்ட ஒன்று தான் என்ற சந்தேகத்தை கிளப்புகின்றன.
ஆதாரம் #3 :
பிற கிரக பொருட்கள் மிகவும் திடமான மைய பாகம் கொண்டவைகள் ஆகும் ஆனால் பூமியின் நிலவிற்கு திடமான மையப்பகுதி கிடையாது. குறைந்த தீவிரம் : நிலவின் உட்பகுதியானது வெற்று பகுதியாக அல்லது குறைந்த தீவிரம் (very low-intensity interior) கொண்டதாக இருப்பது 100 சதவிகிதம் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூறுகிறர்கள். தொடர் புள்ளிகள் : நிலவின் பெருந்திரள் செறிவானது மிகவும் விசித்திரமாக, நிலவின் மேற்பரப்பின் கீழே ஒரு தொடர் புள்ளிகளாய் அமைந்திருப்பதும், அது கட்டமைக்கப்பட்ட ஒன்று என்ற சந்தேகத்தை தூண்டுகிறது.
ஆதாரம் #4 :
சந்திரன் பூமியை விட மிகவும் பழைமையானதாகும். பிரபஞ்சத்தில் இதுவரை அறியப்பட்ட நிலவு போன்ற செயற்கைக்கோள் விண்வெளி பொருள் போல் வேறெந்த பொருளும் இல்லை, நிலவு மிகவும் விசித்திரமானது..! 800,000 ஆண்டுகள் : விஞ்ஞானிகள் கருத்துப்படி, நிலவு கிட்டத்தட்ட 800,000 ஆண்டுகள் பூமியை விட பழைமையானது ஆகும். இந்தவொரு விடயமும் நிலவின் மீது ஏகப்பட்ட புதிர்களை திணிக்கிறது..!
ஆதாரம் #5 :
நிலவின் நம்பமுடியாத சுற்றுப்பாதை. சூரிய மண்டலத்திலேயே மிகவும் துல்லியமான ஒரு வட்ட கோளப்பாதையில் (perfect circular orbit) உள்ள ஒரே விண்வெளி பொருள் நிலவு தான்..! பிற நிலவின் பண்பு : அதாவது நிலவு ஒரு இயற்கையான ஒரு விண் உலக பொருள் போல் செயல்படவில்லை. அது மட்டுமின்றி சூரிய குடும்பத்தில் காணப்படும் பிற எந்தவொரு நிலவின் பண்புகளோடும் பூமி கிரக நிலவு ஒற்றுப்போகவில்லை. ஒரு புறம் மட்டும் : எல்லாவற்றிற்கும் மேலாக பூமியில் எங்கிருந்து நிலவை பார்த்தாலும் நிலவின் ஒரு புறம் மட்டும் தான் தென்படுகிறது, இதெல்லாம் சேர்ந்து நிலவு இயற்கையாக உருவான ஒன்றில்லை என்ற சந்தேகத்தை கிளப்புகின்றன.
ஆதாரம் #6 :
சில சந்திர பாறைகளில் பூமியில் கிடைக்கும் "டைட்டானியம் மிகுதி" பாறைகள் காட்டிலும் பத்து மடங்கு அதிக டைட்டானியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விண்கலம் தயாரிக்க : பூமியில், நாம் சூப்பர்சோனிக் ஜெட் விமானங்கள் , ஆழமான டைவிங் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் விண்கலம் தயாரிக்க டைட்டானியம் பயன்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. உருவானது எப்படி : நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறை மாதிரிகளில் டைட்டானியம் உருவானது எப்படி என்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட முடியவில்லை.
 ஆதாரம் #7 :
நிலவின் துல்லியமான நிலை. பூமி கிரகத்தின் செயல்பாடுக்கு ஏற்ற வண்ணம் மிகவும் துல்லியமான நிலையில், நிச்சயமான வேகத்தில் நிலவு நிலை கொண்டுள்ளது.
புதிர் :
நிலவை துல்லியமாக செயல் பட வைப்பது எது என்பது இன்று வரையிலாக ஒரு புதிர் தான்..! இதுபோன்ற நிலவின் இயற்கைக்கு மாறான சுற்றுப்பாதை மற்றும் ஒழுங்கற்ற தொகுப்பு ஆகியவைகள், நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்ற நூற்றுக்கணக்கான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி கொண்டே தான் இருக்கின்றன..!
மேலும் இதனை வலுவூட்ட அமெரிக்காவின் அப்போலோ 11 மூன் லேண்டிங் ஆனது முழுக்க முழுக்க ஒரு போலியான சம்பவம் என்று சீன விண்வெளி திட்ட உயர் அதிகாரிகள் பெய்ஜிங் டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கைகு பேட்டி அளித்துள்ளனர்
1959-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி நிலவை அடைந்த சோவியத் ஒன்றியத்தின் லூனா 2 (Luna 2) விண்கலம் தான் நிலவை சென்றடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாகும். அதன் பின்பு சரியாக 10 ஆண்டுகள் கழித்து, அதாவது 1969 ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலமானது மனிதர்களை நிலவில் தரை இறக்கியது, பின்பு ஜூலை 24, 1969ல் அப்போலோ 11 பூமிக்கு திரும்பியது - இதுதான் நாம் அறிந்த 'மூன் லேண்டிங்' வரலாறு..!
இந்த குறிப்பிட்ட வரலாறு அதாவது, அமெரிக்கா நிலவுக்கு போன சம்பவம் ஆனது முழுக்க முழுக்க ஒரு நாடகம், ஒரு போலியான கதை என்றும் அமெரிக்கா நிலவிற்கு போகவே இல்லை என்றும் இன்றுவரையிலாக பெரும்பாலானோர்களால் நம்பப்படுகிறது. அதற்கு ஏகப்பட்ட பலமான ஆதரங்களும், சதியாலோசனை கோட்பாடுகளும் உண்டு. அவைகளை மேலும் பலப்படுத்தும் வண்ணம் அதிரடியான ஆதாரம் ஒன்றை சீனா அம்பலப் படுத்தியுள்ளது..!
சீனாவின் லூனார் ரோவர் மூலம் கிடைக்கப்பெற்ற நிலவு புகைப்படங்களை வைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தான் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்க அரசாங்கத்திடமும், நாசாவிடமும் நிலவில் இறங்கியதற்க்கான துல்லியமான விளக்கம் கேட்டு மனு ஒன்றில் 200 சீன விண்வெளி மையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
அதாவது அமெரிக்கா நிலவிற்கு வந்ததற்கான எந்த விதமான 'அடையாளமுமே' அங்கு இல்லை என்பது சீன லூனார் ரோவர் (Lunar Rover) ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தாங்கள் நிலவில் கால் தடம் பதித்தது போலியான நிகழ்வு இல்லை என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா இருக்கிறது என்றும் சீன விண்வெளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
சீன லூனார் ரோவர் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து, அங்கு வரலாறு கூறுவது போல அமெரிக்கா தரை இறங்கியதற்கான எந்த விதமான அடையாளமும் இல்லை என்பதை சீனா உறுதி செய்துள்ளது.
நிலவில் இருந்து புகைப்படங்களை அனுப்பியது யூட்டு (Yutu) விண்கலம் என்பதும். இது 2013-ஆம் ஆண்டு நிலவில் தரை இறங்கியது என்பதும் குறிபிடத்தக்கது.
உலக புகழ்பெற்ற ரஷ்ய அணு பொறியாளர் யூரி இக்னாட்யெவிச் முக்ஹின் (Yuri Ignatyevich Mukhin) உட்பட மேலும் பல ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சிகளும் அமெரிக்க விளக்கத்திற்கான மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த விசயத்தில் ரஷ்ய அரசாங்கமானது, 1970 -ஆம் ஆண்டில் இருந்தே பெரிய அளவிலான ஆர்வத்தை காட்டி வருகிறது. ஏனெனில், அந்த காலகட்டத்தில் யார் முதலில் நிலவை அடைவது என்ற விண்வெளி போட்டியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றது அமெரிக்கா தான்..!
அமெரிக்காவின் 'மூன் லேண்டிங்' பொய், படம் பிடிக்கப்பட்டவைகள், புரளிகள் என்று கூறும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் (Conspiracy theorists) குறிப்பிடும் ஆதாரங்கள் தான் கீழ் வரும் இவைகள்.
காற்றில் ஆடும் அமெரிக்க கொடி
அமெரிக்கா நிலாவில் முதல் கால் தடம் பதிக்கும் நிகழ்ச்சியானது நேரடி ஒளிப்பதிவில் இருந்தது, அதில் நிலவில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்க கொடியானது காற்றில் ஆடுவதை தெளிவாக காண முடிந்தது.
பள்ளங்கள் இல்லாமை
அப்பலோ விண்கலம் நிலவில் தரை இறங்கியதற்க்கான எந்த விதமான பள்ளமும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் என எதிலும் இல்லை. இறக்கி வைக்கப்பட்டது போல் தான் காட்சியளிக்கிறது.
பல கோணங்களில் ஒளி ஆதாரம்
ஒளி ஆதாரமானது பல வகையான கோணங்களில் இருந்து கிடைப்பதின் மூலம் இது படடமக்கப்பட்டது என்கிறார்கள் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்.
வான் அலென் ரேடியேஷன் பெல்ட்
முதல் முயற்சியிலேயே 'வான் அலென் ரேடியேஷன் பெல்ட்' என்ற கடினமான பூமியின் காந்த சக்தி கதிர்வீச்சை தாண்டி எப்படி நிலாவிற்கு சென்றனர் என்பது இன்றும் கேள்வி குறி தான்..!
விளக்கமில்லாத பொருள்
வெளியான நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில், விண்வெளி வீரரின் ஹெல்மெட்டில் விளக்க முடியாத பொருள் ஒன்று பிரதிபளிக்கிறது.
மறைக்கப்பட்ட கேபிள்கள்
நிலவின் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றபடி விண்வெளி வீரர்கள் கேபிள்களில் இணைக்கப்பட்டு குதித்து குதித்து செல்லப்பட்டனர் என்றும், சில புகைப்படங்களில் கேபிள்களை தெளிவாக பார்க்க முடிகின்றது என்றும் கூறுகிறார்கள்.
 நட்சத்திரமின்மை
வெளியான முழு புகைப்பட தொகுப்பு மற்றும் வீடியோ பதிவிலும் எந்தவொரு ஒரு நட்சத்திரமும் பதிவாகவில்லை.
சி' பாறை
வெளியான நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில், இயற்கைக்கு மாறான முறையில் தெளிவாக 'சி' (C) என்ற எழுத்தை பிரதிபலிக்கும் பாறை..!
பொய்யான கிராஸ்-ஹேர்ஸ்
வெளியான நிலவில் இறங்கிய பெரும்பாலான புகைப்படங்களில் கிராஸ்-ஹேர்ஸ்கள் (Cross-hairs) 'எடிட்' (Edit) செய்யப் பட்டுள்ளன, குறிப்பிட்ட புகைப்படத்தில் கிராஸ்-ஹேர்ஸ் ஆனது விண்கலத்திற்கு பின்னால் 'எடிட்' செய்யப்பட்டுள்ளது அதற்கு சான்றாகும்.
போலியான பின்னணிகள்
ஒரே மாதிரியான பின்புலம் (Backdrop) கொண்ட பல வீடியோ காட்சிகள்..!
இதை விட ஒரு கொடுமை என்னவென்றால் அமெரிக்கா நிலாவிற்கு சென்றதை, 20% அமெரிக்கர்களே நம்பவில்லை என்கிறது ஒரு ஆய்வு.

மூன் லேண்டிங் உண்மை என நாசா வெளியிட்ட வீடியோ.