24 ஏப்ரல், 2017

நட்சத்திரங்களும் நாமும் - பகுதி-1


நட்சத்திரங்களும் நாமும்
சூரியனை சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வருவது எமக்கு தெரிந்த விடயம். ஆனால் இன்று நாம் வாழும் பூமியானது ஒரு காலத்தில் பிரபஞ்சத்தின் மையமாக கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்?
இன்றைக்கு ஏறக்குறைய 2000 வருடத்திற்கு முன்னர் எழுந்த கோட்பாடு இது. ஆரம்பகாலத்தில் எந்தவித நவீன தொலை நோக்கிகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் எந்தவித செய்மதிகள் விண்ணுக்கு ஏவப்படாத நிலையிலும், பூமிக்கு அப்பால் என்ன இருக்கும்? எத்தனைகிரகங்கள்இருக்கும்என்றஊகங்கள்பரவலாககிளம்பலாயின.
உலகத்தின்மிகப்பிரசித்தமானதத்துவவியலாளரான அரிஸ்ட்டோட்டில் வாழ்ந்த காலம் அது. அவரது கொள்கைகளும், கண்டுபிடிப்புக்களும் பிரபஞ்சத்தின் மையம் பூமி என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தும் கணித சூத்திரங்களாக இருந்தன. எப்பிசைக்கில்ஸ்' எனப்படும் வட்ட ஒழுக்களினூடே சுமார் 55 வளையங்களில் அக்காலத்தில் அறியப்பட்டிருந்த 6 கிரகங்களும் சூரியனும் வலம் வருவதாக அரிஸ்ட்டோட்டில் கருதினார்.
6 கிரகங்களும் சூரியனும் பூமியை சுற்றிவலம் வரும் ஒழுங்கானது பின்வருமாறு
1. சந்திரன்
2.புதன்
3.வெள்ளி
4.சூரியன்
5.செவ்வாய்
6.வியாழன்
7.சனி

விண்ணில் தெரியும் பொருட்கள் பூமியை சுற்றி வலம் வருகின்றனவா? அல்லது பூமிஅவற்றைசுற்றிவலம்வருகிறதா என்பதனை அக்காலத்தில் அறிவது கடினமான காரியமாக இருந்தது.
பரலக்ஸ்எனப்படும்அசையும்பொருட்களில்ஏற்படும் தடுமாற்றம் பூமியில் இருந்து அவதானிக்கும் போது விளங்கினால், பூமியே விண்பொருட்களை சுற்றி வருவதும்தன்னைதானேசுற்றுவதும், தெளிவாகநிரூபிக்கப்படும். ஆனால்விண்ணில்தெரியும்நட்சத்திரங்களின்அசைவில்ஏற்படும்தடுமாற்றம்மிகச்சிறியதாகஇருப்பதானால்இதைநிரூபிக்கவழியில்லை.கிரகங்களின்இயக்கத்தைகொள்கையளவில்வரையறுப்பதுஅக்காலத்தில்கடினமானகாரியமாகஇருந்தது.

வானத்தில்நிலையாகநிற்கும்நட்சத்திரங்களுடன்கிழக்குத்திசையில்பயணிக்கும்கிரகங்களின்இயக்கம், அவற்றின்வேகம் என்பன கேத்திர கணித ரீதியில் சமச்சீரானவையாக (Uniform motion) கணிக்கப்பட்டன.
கிரகம்என்றசொல், 'வேண்டரர்' (Wanderer)  என்றகிரேக்கபதத்தில்இருந்துவந்தது. இதற்கு அர்த்தம் அதிசயிக்கத்தக்க பொருள் என்பதாகும்.
இக்கிரகங்களின்இயக்கத்தினைநவீனகாலத்தில்பயன்படுத்தப்படும்வானவியல்கருவிகள்எதன்துணைகொண்டுமல்லாதுகணிதரீதியாகமட்டுமேஆராய்ந்து, இப்படியான தகவல்களை அளித்த அக்காலத்து மாமேதைகளான தொலமியும், அரிஸ்ட்டோட்டிலும் மெச்சத்தக்கவர்கள் தானே.
அக்காலத்தில்இந்தவானவியல்கோட்பாடுகளைமையமாககொண்டுவரையப்பட்டகணிதசூத்திரங்கள்தான், இன்றைய நவீன வானவியலின் வளர்ச்சிக்கும் அடிப்படை என்பது உங்களில் எத்தனை பேருக்கு நம்பமுடிகிறது.
உயிர்வர்க்கங்களில்மிகஉயர்ந்தவனானமனிதன்தன்னைப்பற்றியும்சுற்றியுள்ளசூழல்பற்றியும்தனக்கிருக்கும்பகுத்தறிவைப்
பயன்படுத்திஎப்போதும்ஆராய்ந்தவண்ணமேஇருக்கிறான்.பரிணாமத்தின்ஏறுபடிகளைவழிநடத்திச்செல்பவன்அவனே.
இன்றையவிஞ்ஞானயுகத்தில்பூமியின் அருங்கொடையானமனிதனின்அறிவுவளர்ச்சியில்முதற்படியில்நிற்பதுவான்வெளிதொடர்பானஅவனதுவேட்கையேஎனலாம்.உலகில்பண்டைய நாகரீகங்கள்தோற்றம்பெற்றதிலிருந்துஇன்று வரை அண்டவெளி தொடர்பான அறிவு பலபரிணாமங்களைக் கடந்து விருத்தியாகி வருகிறது.
பிரபஞ்சத்தின்அடிப்படைத்துகள்பற்றி விரிவாகஅறிவதற்குஆய்வுகூடத்தில்அணுவைப்பிளந்து புரோட்டோன் கற்றைகளை மோதவிட்டு சூரியனை விட பலமடங்கு அதிகவெப்பத்தை உருவாக்கும் பரிசோதனைகளில் எல்லாம் இன்று ஈடுபட்டு வரும் நாம் ஒருகாலத்தில் பூமியே பிரபஞ்சத்தின் மையம் என நம்பிக் கொண்டிருந்தோம் என்றால் அது ஆச்சரியமாகவில்லை?
(அதுவும் இந்தியாவில் இல்லை, அக்காலத்திலேயே வானியலிலும் ஆன்மிகத்திவலும் பன்மடங்கு தேர்ந்திருந்தார்கள். இன்று பூமியின் வடக்கு அச்சு துருவ நட்சத்திரத்தை நோக்கி இருக்கின்றது என்பதினை 6000 வருடங்களுக்கு முன்பே சொன்னவர்கள். ஈர்ப்பலை என்ற ஒன்று இருப்பதினை நவீன அறிவியல் 1954 ஆம் ஆண்டு கண்டு பிடித்தார்கள் ஆனால் அதைன 2016 ஆம் ஆண்டு தான் நிருப்பிக்க முடிந்தது. இதனை நாம் 6000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து கூறியிருக்கின்றோம். இதனை நாம் அறிவியல் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் சமயம் சார்ந்த சம்பிரதாயங்களாகத் தான் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு காசினி செயற்கைக்கோள் சனி கிரகத்தினை ஆராய்ந்த பிறகுதான் நாம் அதன் கதிர்வீச்சு மற்றும் ஈர்ப்பலைத் தாக்கம் பூமியில் செயல்படுவதாக அறிய முடிந்தது. ஆனால் இந்தியாவில் இதனை ஜோதிட சாஸ்திரம் என்ற பெயரில் நமது உடல் மற்றும் மனதில் பாதிப்பினை ஏற்படுத்த முடியும் என்று கூறியிருக்கின்றார்கள். அவ்வளவு ஏன் கிறிஸ்துவ மதத்தில் கூறப்படும் எதிர் கிறிஸ்து என்று அழைக்கப்படும் லூசிப்பர் இருப்பிடம் மற்றும் லூசிப்பரின் வடிவமாக கருதப்படுவதும் சனி கிரகம் தான் இன்னும் நிறைய செய்திகள் உண்டு ஆனால் நாம்தான் அதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை.)
முற்காலத்தில்வானியல்என்பது, வெறும்கண்ணால்பார்க்கக்கூடிய விண் பொருட்களின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்குவதையும், எதிர்வு கூறலையும் உள்ளடக்கியிருந்தது. நாகரிகங்கள் வளர்ச்சியடைந்த போது, சிறப்பாக, மெசொப்பொத்தேமியா, கிரீஸ், எகிப்து, பாரசீகம், மாயா, இந்தியா, சீனாஆகியஇடங்களிலும், இஸ்லாமிய உலகிலும் பிரபஞ்சத்தின் இயல்புகள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன.
சிலகுறிப்பிடத்தக்கவானியல்கண்டுபிடிப்புக்கள், தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்குவர முன்னரே நிகழ்த்தப்பட்டன. எடுத்துக்காட்டாக சூரியப்பாதையின் சரிவு, கிமு 1000 ஆண்டுக் காலத்திலேயே சீனரால் கணக்கிடப்பட்டு இருந்தது. (சீனரால் பயன்படுத்தும் பழக்கவழக்கங்கள் சாஸ்திரங்கள் இந்திய தென்திராவிட பழக்கவழக்கங்கள் தான்)
சந்திரகிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் திரும்பத்திரும்ப நடைபெறுவதைக் கால்டியர் அறிந்து இருந்தனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் சந்திரனின் அளவையும், பூமியில் இருந்து அதன் தூரத்தையும் ஹிப்பார்க்கஸ் மதிப்பீடு செய்திருந்தார்.

1473ம் ஆண்டு முதன் முதலில் போலந்து நாட்டைச் சேர்ந்த நிக்காலஸ் கோப்பர் நிக்கஸ், சூரியமண்டலத்துக்கான, சூரியனை மையமாகக் கொண்ட மாதிரி ஒன்றை முன் மொழியும் வரைபுவிமையக் கோட்பாடே உலகம் முழுதும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த கலிலியோ கலிலி, ஜொகான்னஸ் கெப்ளர் ஆகியோர், இவரது முடிவுகளை ஏற்றுக் கொண்டு அதனைத் திருத்தியும், விரிவாக்கியும் மேம்படுத்தினர்.
கோள்களின் இயக்கம் தொடர்பான பரிசோதனைகளையும் அவற்றின் முடிவுகளை யும் தொலைக்காட்டி மூலம் அவதானித்து கணித முறையில் பகுப்பாய்வு செய்வதை தொடக்கி வைத்ததன் மூலம், நவீன வானியலின் பிறப்புக்கு வித்திட்டவர் என்ற வகையில் அறிஞர் குழாமில் கலீலியோவுக்கு உயர்ந்த இடம் உண்டு.
ஆயினும்சூரியமண்டலம்பற்றியகருத்துகளால்வத்திக்கனின்கத்தோலிக்கதேவாலயத்தால்தண்டிக்கப்பட்டுவீட்டுக்காவலில்அடைக்கப்பட்டகலிலியோவின்இறுதிக்காலத்தில்அவரதுகண்கள்குருடாகிவிட்டன. அறிவியல்வளர்ச்சிஉன்னதஇடத்திலிருக்கும்இன்றைய 21ம்நூற்றாண்டிலேயேஅதாவது 1992 ம்வருடம்கலிலியோமறைந்து 350 ஆண்டுகள்கழித்துஅவரைத்தண்டித்ததுதவறுஎனபோப்ஏற்றுக்கொண்டுமன்னிப்புக்கோரியிருந்தார்என்பதுகுறிப்பிடத்தக்கது.
நமதுகண்ணுக்குதெரியும்பிரதானவான்பொருட்களானசூரியன்மற்றும்கிரகங்கள்என்பனவற்றின்மையம்பூமிஅல்லசூரியனேஎன்றமுடிவுக்குவந்துசுமார்நானூறுஆண்டுகள்ஆகிவிட்டன.
இதன்பிண்ணனியில்சென்றதொடரில்நவீனவானவியல்எவ்வாறுதோற்றம்பெற்றதுஎனவரலாற்றுக்குறிப்புக்களுடன்ஆராய்ந்தோம்.இத்தொடரில்பிரபஞ்சம்எவ்வாறுதோற்றம்பெற்றது?என்பதைப்பற்றிஅலசுவோம்.பிரபஞ்சத்துக்குஆரம்பமும்இல்லை; முடிவும்இல்லைஅதுமெய்யாகவரையறைக்குஉட்படாததுஎன்றகருத்துக்கள்முன்புநிலவிவந்தன.ஆயினும் 21ம்நூற்றாண்டில்அறிஞர்களால்விவாதிக்கப்பட்டுவரும்பிரபஞ்சத்தின்தோற்றம்பற்றியகருதுகோள்களில்ரஷ்யஅமெரிக்கவிஞ்ஞானிஜார்ஜ்காமாவ்ஊகித்த "பெருவெடிப்புக்கோட்பாடு" (Big Bang Theory) அமெரிக்கவிஞ்ஞானிஎட்வின்ஹப்பிளால்நிரூபணமாகி 20 ஆம்நூற்றாண்டிலேஉலகவிஞ்ஞானிகள்பலரால்ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
பிரபஞ்சத்தின்அடிப்படைவிதிகள்மிகஎளிமையாகவும்அழகாகவும்இருக்கவேண்டும்எனஇந்தநூற்றாண்டின்தலைசிறந்தவிஞ்ஞானியானஆல்பர்ட்ஐன்ஸ்டீன்கூறியிருக்கிறார். பிரபஞ்சத்தின்தோற்றத்தைவிளக்கும்முக்கியமானகொள்கைகள்இரண்டு.
அதில் முதலாவது ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கை. அடுத்தது குவாண்டம் கொள்கை.
இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளானது வெளியினை வளைக்கும் தன்மை கொண்டது என்பதே ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற்தத்துவம். அதேபோல் இயற்கையின் அடிப்படைக் கூறுகளான ஒளி,இடம், காலம் போன்றவை தொடர்ந்து பிரிக்கக்கூடியவை அல்ல என்பதே குவாண்டம் கொள்கை.
இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பெருவெடிப்புக் கொள்கை சொல்வது என்ன வென்றால் இப்பிரபஞ்சத்தில் உள்ள பொருள் மற்றும் சக்தி இரண்டும் இணைந்து இறுகி நம்மால் கற்பனை செய்து கொள்ள முடியாத அளவு அடர்த்தியுடன் சில மில்லிமீட்டர்கள் விட்டமே உடைய ஒரு பந்தாக சூரியனை விட பல பில்லியன் மடங்கு வெப்பத்துடன் ஆதியில் இருந்தது என்பதாகும். சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இன்னமும் கண்டறியப்படாத ஏதோ ஒரு காரணத்தால் இப்பந்து வெடித்துச் சிதறியதில் முதல் அணுக்களான ஐதரசன், ஹீலியம் உட்பட இன்றுள்ள காலக்ஸிகள், கருந்துளைகள், குவாசர்கள், நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தும் தோற்றம் பெற்றன. மேலும் இத்தொகுதிகள் யாவும் அழிந்தும் சிதைந்தும் வேறொன்றாக மாறியும்எல்லையற்றகாலப்பெருவெளியில்மேலும்விரிவடைந்துகொண்டேசெல்கின்றன.
தற்போது கண்ணால் அவதானிக்கக் கூடிய பிரபஞ்சவெளியை அடைக்கும் பொருள், சக்தி என்பவற்றில் 70 வீதம் கரும் சக்தியும், 25 வீதம் கரும் பொருளும், 4 வீதம் காலக்ஸிகளுக் கிடையில் சிதறிக் கிடக்கும் ஐதரசன், ஹீலியம் வாயுக்களும், 0.5 வீதம்நட்சத்திரங்களும்,0.3 வீதம் நியூட்ரினோக்களும், 0.03 வீதம் கடின மூலகங்களும் அடங்கியிருக்கின்றன.
பிரபஞ்சத்தின் கட்டமைப்பு சடப்பொருள் மற்றும் சக்தி வீதங்கள் இதில் கரும்பொருள் என்பது அது வெளியிடும் கதிரியக்கத்தின் மூலம் வானியல் உபகரணங்களால் அவதானிக்க முடியாத ஆனால் அண்ட வெளியிலுள்ள விண்பொருட்களைத் தள்ளும் ஈர்ப்பு விசையால் இணங்காணப்படும் சடப்பொருளாகும். கரும் சக்தி என்பது பிரபஞ்சத்தின் விரிவைஒவ்வொருகணமும்துரிதப்படுத்திக்கொண்டிருக்கும்ஒப்புக்கொள்ளமுடியாதசக்தியாகும்.
இவற்றுடன்பிரபஞ்சத்தில்உள்ளகாலக்ஸிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் யாவும் பெருவெடிப்பின் பின்னர் படிப்படியாக எப்படித் தோற்றம் பெற்றன என்பதை இப்போது பார்ப்போம்.
பெருவெடிப்பு ஏற்பட்ட முதலாவது செக்கனில் ஏற்பட்ட மூலக்கூற்று நிலையிலான மாற்றங்களை பிரபஞ்சவியலாளர்கள் ஆறு பகுதிகளாகப் பிரித்து விளக்கியுள்ளனர். இதில் முதலாவது ப்ளாங் இப்போ எனப்படுகிறது. இது பெருவெடிப்பு ஏற்பட்டு 10 இன் -43ம் அடுக்கு செக்கனின் பின்னர் நிகழ்ந்த மாற்றங்களைக் குறிப்பது. இதன் போதே விண்வெளியிலுள்ள நான்கு அடிப்படை விசைகளான மின்காந்த விசை,  நுண்ணிய அணு விசை, கடின அணு விசை, ஈர்ப்பு விசை என்பன தோற்றம் பெற்றன.
அடுத்தது கிராண்ட்யுனிபிக்கேஷன் இப்போவாகும். பெருவெடிப்புநிகழ்ந்து 10 இன் -43 ம் அடுக்கிற்கும் 10 இன் -36 ம் அடுக்கிற்கும் இடைப் பட்ட செக்கனில் நிகழ்ந்த மாற்றத்தை இதுகுறிக்கிறது. இக்காலப் பகுதியிலிருந்தே விரியத் தொடங்கிய பிரபஞ்சம் குளிரத் தொடங்கியது.
மேலும் கடின அணு விசையும் நுண்ணியஅணு விசையும் இணைந்து ஹிக்ஸ்போசொன் எனப்படும் நிறையுடைய அடிப்படைத் துணிக்கையை இந்த குறுகிய காலத்திலேயே உருவாக்கியது. கடவுள் துணிக்கை என்று கருதப்படும் அணுக்கருவின் உள்ளே இருக்கும் ஆறுமூலத் துணிக்கைகளில் ஒன்றான ஹிக்ஸ்போசொன் பிக்பாங் கொள்கையை நிரூபிப்பதற்காக தற்போது ஜெனீவாவிலுள்ள சேர்ன் அணுவாராய்ச்சி நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அடுத்தகட்டமான 10 இன் -36ம் அடுக்கிற்கும் 10 இன் -32ம் அடுக்கிற்கும் இடைப் பட்டகாலத்தில் நிகழ்ந்த மாற்றங்களை இன்ப்ளேசனரி இப்போஎனவும் 10 இன் -12ம் அடுக்கு செக்கன் வரையான பகுதியை எலெக்ட்ரோ வீக் இப்போ எனவும் அழைப்பர்.
இன்ப்ளேசனரி இப்போவின்போதே இன்று விண்வெளியியலாளர்கள் தலையைச் சுற்ற வைத்துக் கொண்டிருக்கும் டார்க் எனெர்ஜி எனப்படும் கரும்சக்தி பிரபஞ்ச விரிவாக்கத்தைத் துரிதப்படுத்ததொடங்கியது. மேலும் எலெக்ட்ரோ வீக் இப்போவின் போது வெப்பநிலை 10 இன் 28ம் அடுக்குகெல்வின்வரைகுறைவடைந்ததால்கதிரியக்கம்ஆரம்பமாகிஅணுக்களின்அடிப்படைத்துணிக்கைகளான குவார்க்குகள், எலெக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரினோக்கள் உருவாகத் தொடங்கின.
மேலும்தற்போதுபிரபஞ்சம்முழுதும்பரவியிருக்கும்பின்புலக்கதிர்வீச்சுஇதன்போதேஉருவானது.இக்கதிர்வீச்சேபிரபஞ்சத்தின்தோற்றத்துக்குக்காரணமாகபெருவெடிப்புஒன்றுநிகழ்ந்திருக்கலாம்எனஇன்றுவிஞ்ஞானிகள்கருதக்காரணமாகும்.
இறுதியாக கருதப்படும் இரு பகுதிகள் குவார்க் இப்போ மற்றும் ஹட்ரொன் இப்போ என்பவை ஆகும். பெருவெடிப்பின் பின்னர் நாம் பார்த்த பகுதிகளில் இன்னமும் சடப்பொருளான அணுக்கருக்கள் உருவாகவில்லை. 10 இன் -12ம் அடுக்கிற்கும் 10 இன் -6ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட குவார்க் இப்போவின்போதே நான்கு அடிப்படை விசைகளும் பிரிக்கப்பட்டு தனியாக்கப்படுகின்றன.
இதனால் குவார்க்குகள் வலுப்பெற்று புரோட்டன் எனும் அணுக்கருவை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. ஆனால் வெப்பநிலை மிகமிக அதிகமாக இருந்ததால் இக்கருத்தாக்கம் சாத்தியமாக வில்லை. அடுத்துவரும் 10 இன் -6ம் அடுக்கிற்கும் 1 செக்கனுக்கும் இடைப்பட்ட ஹெட்ரோன் இப்போகாலப் பகுதியிலேயே நிறையுடைய சடப்பொருள் உருவாகிறது.
அதாவதுகுவார்க்-குளுவோன் பிளாஸ்மா மூலம் வெப்பநிலை வீழ்ச்சியடைந்த பின்னர் ஹட்ரோன்கள் என அழைக்கப்படும் அணுக்கருவை ஆக்கும் நேர்த்துணிக்கையான புரோட்டன்களும், நடுநிலைத் துணிக்கையான நியூட்ரோன்களும் தோற்றம்பெறுகின்றன. இதன்மூலம்பல மில்லியன் நட்சத்திரங்களின் தொகுதியான காலக்ஸிகள் அதாவது அண்டங்கள் முதல் நாம் வாழும் பூமி போன்ற கிரகங்கள் வரை உருவாக வழிஏற்பட்டது
முந்தையதொடரில்பிரபஞ்சத்தின்தோற்றம்பற்றிஅலசுகையில்பிக்பாங்எனும்பெருவெடிப்புநிகழ்ந்தமுதலாவதுசெக்கனில்நிகழ்ந்தமாற்றங்களைகருக்கள்மற்றும்துணிக்கைரீதியாகஆராய்ந்துதகவல்களைவெளியிட்டிருந்தோம். இந்த அடிப்படையில் இறுதியாக பெருவெடிப்பின் முதல் செக்கனின் பின் குவார்க்குளுவோன் சக்தி திடர் குளுமையடைவதன் மூலம் கருவின் உள்ளே உள்ள புரோட்டன் மற்றும் நியூட்ரோன் துணிக்கைகளை உள்ளடக்கிய ஹெட்ரோன் கூட்டு உருவாகி பிரபஞ்சவெளியில் நியூட்ரினோக்கள் சுதந்திரமாக நடமாட வழி ஏற்பட்டது.
இதைஅடுத்துபெருவெடிப்பின் 1-10 செக்கனுக்கு இடையில் லெப்டோன் இப்போ நிகழ்கின்றது. பிரபஞ்சத்தில் அதிகபட்சமாக காணப்படும் ஹெட்ரோன்களும், இதன் எதிர்த்துணிக்கையான ஆண்டி ஹெட்ரோன்களும் தமக்கிடையே தாக்க முற்று ஒன்றை இன்னொன்று அழித்த பின்னர் லெப்டோன்கள் உருவாகின்றன. இவைபிரபஞ்சத்தின்அதிகபட்ச நிறையை தமதாக்கிவிடும். அடுத்த கட்டமாக லெப்டோன்களும் அண்டி லெப்டோன்களும் தாக்க முற்று ஒன்றையொன்று அழித்தபின் மிகச் சிறிய லெப்டோன்களே எஞ்சிநிற்கும்.
இக்கட்டத்தின் பின்னர் அதாவது 10 செக்கனுக்கும் 380 000 வருடங்களுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே மிக நீண்டதாக்கம் நடைபெறுகிறது.இக்காலப்பகுதிபோட்டோன் இப்போ எனப்படுகின்றது. அதாவது துணிக்கை என்று கருத முடியாத எனினும் துணிக்கையின் இயல்பும், மின்காந்த அலைகளின் இயல்பும் சேர்ந்த போட்டோன் எனும் நிறையற்ற ஒளிக்கற்றை போன்ற பொருள் அணுக் கருவுடனும் புரோட்டன் மற்றும் எலெக்ட்ரோனு டனும் தாக்க முற்று பிரபஞ்ச உற்பத்தியை நிகழ்த்துகின்றன.
முதல் 10 செக்கனுக்கு பின்னர் நிகழும் போட்டோன் இப்போவின்போதே பிரபஞ்சத்தின் வெப்பநிலை நன்கு வீழ்ச்சியடைந்து நியூக்ளி எனப்படும் அணுக்கருக்கள் உற்பத்தியாகின்றனபெருவெடிப்பின் 3-20 இடைப்பட்ட நிமிடங்களில் நிகழும் இந்தகருத்தாக்கம், பிரபஞ்ச வெளியில் உள்ள சடப்பொருளின் அடர்த்தி, வெப்பநிலை என்பன மேலும் வீழ்ச்சியடையும் வரை நிகழும். இது 17 நிமிடங்களில் நிறைவுறும். அதன் பின் பிரபஞ்ச வெளியில் ஹீலியம் 4 அணுக்களும் அதைவிட 3 மடங்கு அதிகமாக ஐதரசன் அணுக்களுமே அதிகபட்சமாக நிரம்பியிருக்கும்.

பிரபஞ்சதோற்றத்தின்காலகட்டங்கள்
பெருவெடிப்பின் 70 000 வருடங்களுக்குப் பின்னர் அணுக்கருக்களின் அடர்த்தியும், போட்டோன் கதிரியக்கமும் சமப்படும். இந்நிலையில்ஈர்ப்புவிசைமற்றும்சடப்பொருளின்அழுத்தம்என்பவற்றின்போட்டிகாரணமாக நிகழும்மிகச்சிறியஅணுக்கட்டமைப்புக்களின் உற்பத்தி வீழ்ச்சியடையும் இது ஜீன்ஸ்லெந்த் எனப்படுகின்றது.
அடுத்ததாக பெருவெடிப்பின் 377 000 வருடங்களுக்குபின்னர்பிரபஞ்சத்தின்அடர்த்தி வீழ்ச்சியடைவதால்ஐதரசன்அணுக்களும் ஹீலியம்அணுக்களும்உருவாகின்றன.மேலும் பிரபஞ்சம் குளிர்வடைந்து எலெக்ரோன்கள் யாவும் கருவுடன் இணைந்து நடுநிலையான அணுக்கள் உண்டாகின்றன. ஆரம்பத்தில் ஐதரசன், மற்றும் ஹீலியம்4 அணுக்கள் உண்டாக எடுத்த நேரத்தைவிட இது வேகமாக நிகழ்வதுடன் மறுஇணைப்பு அல்லது ரீகம்பினேசன் எனவும் இது அழைக்கப் படுகின்றது. அணுக்கருக்கள் நடுநிலையாக்கப் பட்டதால் போட்டோன்கள் சுதந்திரமாக வெளியில் பயணஞ் செய்யும் வாய்ப்பும் உருவாகின்றது. இதனால் சடப்பொருளுக்கும் அலைகளுக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி பிரபஞ்சம் வெளி, ஊடகம், பொருள் மற்றும் அலை என்பன இணைந்த ஒன்றாக மாற்றமடைகின்றது.
இன்னும்எஞ்சியிருக்கும்கட்டங்களாக, பிரபஞ்சத்தின்இருண்டயுகம், கட்டமைப்பின் தோற்றம், மறுஅயனாக்கம், நட்சத்திரங்களின் தோற்றம்,அண்டங்களின்தோற்றம்,அண்டங்களின்கூட்டு,கிளஷ்டர்ஸ்,சுப்பர்கிளஷ்டர்ஸ்என்பவற்றின்தோற்றம்,சூரியகுடும்பத்தின்தோற்றம்மற்றும் 13.7 பில்லியன் வருடம் கழித்து ஹபிள் தொலைக் காட்டியால் எடுக்கப்பட்ட புகைப்படம் அடுத்த பக்கத்தில் உள்ளதை காண்க.
முதலாவதாக பிரபஞ்சத்தின் அடிப் படைத் துகள்கள் பரிணாமமடைந்து உருவாகும் திணிவுடைய துணிக்கைகள், பின்புலக்கதிர், மூலக்கூறுகள் என்பன பிரிக்க முடியாது ஒரு கலவையாக காணப்பட்ட காலத்தை எடுத்துக் கொள்வோம். இக்காலப் பகுதியில் என்ன என்றே இணங்கான முடியாத திண்மமாக பிரபஞ்சம் இருந்ததாகவும் இது இருண்டயுகம் எனவும் வானியல் அறிஞர்கள் கூறுகின்றனர். போட்டோன்கள் அணுக்களுடன் இணைந்து பாய்மமாக காணப்பட்டதால் பிரபஞ்சம் நம் கண்ணால் காணும் ஒளியின்றி இருண்டிருந்தது என்பதே இவர்களின் கூற்று.
பெருவெடிப்பின் 150-800 மில்லியன் ஆண்டுகளில் நிலவிய இக்காலத்தில் போட்டோன்கள் எலெக்ரோன் மற்றும் புரோட்டன்களுடன் இணைந்து போட்டோன்-பர்யோன்பாய்மமாக சடப்பொருள் திகழ்ந்ததாக கருதப்படுகின்றது. பர்யோனிக்சடம் எனும் இப்பொருள் அயன்களுடன் கூடி உருவாகும் ஐனைசைட்பிளாஸ்மாரீகம்பினேஸன்நிகழும்போதுஇலத்திரன்களைகவர்ந்துநடுநிலையாக்கப்பட்டபின்ஒளியைஉண்டாக்கும்போட்டோன்களைவெளிவிடும். பிரபஞ்சத்தைஅளவிடஉதவும் CMB வரைபடம் இந்த போட்டோன்களாலேயே சாத்தியமாகின்றது.
பெருவெடிப்பின் 480 மில்லியன் வருடங்கள் கழிந்த நிலையில் இருண்டயுகத்தின் பின்னர் உருவானதாக கருதப்படும் சூரியனைவிட பல்லாயிரம் மடங்கு ஒளியுடைய UDFY-38135539 எனும்குவாசர்ஜனவரி 2011 அவதானிக்கப்பட்டபோது 13 பில்லியன் வயது உடையது எனும் செய்தி பகிரப்பட்டது.
இருண்டயுகத்தின் போது மறுஅயனாக்க காலத்தில் பிரபஞ்சத்தின் சிறிய கட்டமைப்பு முதல் மிகப்பெரிய காலக்ஸிகள், குவாசர்கள்,
கருந்துளைகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் என்பன உருவாகின்றன. இதற்கு முன்னர் பிரபஞ்சத்தை கணிப்பிட நுண் கணிதத்தின் காஸ்மொ லொஜிக்கல் நேர்கோட்டு தொடர்கள் முறையை பின் பற்றும் பெட்ருபேசன் தியரி மூலம் விளக்கங்கள் பெறப்பட்டது.
அடுத்ததாக மறு அயனாக்க காலத்தை மேலும் அலசுவோம். பெருவெடிப்பின் 150 மில்லியன் தொடக்கம் 1 பில்லியன் இடையிலான இக்காலத்தில் பிரபஞ்சத்தில் அதிக பொருள் பிளாஸ்மா எனும் செறிவு கூடிய திண்மமாக இருந்தது. ஈர்ப்பு விசையின் இடையீட்டு தாக்கங்களால் நட்சத்திரங்களும் அவற்றை விட ஒளியில் செறிந்த குவாசர்களும் இக்காலத்தில்தோன்றுகின்றன.இதன்போது 21cm மட்டுமே விட்ட முடைய கதிர்வீச்சு வெளியில் பரவுகின்றது.
மறுஅயனாக்கத்தின்போதுபெருவெடிப்பின்போதுகூடவேதோன்றியஇலகுவானமூலகங்களானஐதரசன்,ஹீலியம்,லித்தியஆகியனஅடர்த்திகூடியமூலகங்களாகமாறிபிரபஞ்சதோற்றத்தின்ஆதியில்தோன்றியமுதல்பாப்புலேசன் 3 வகைநட்சத்திரங்கள்தோன்றுகின்றன.

அடுத்த கட்டமாக பிரபஞ்சத்தில் அதிக கூடிய கொள்ளளவை எடுக்கும் சடப்பொருள் தமக்கிடையே மோதலுற்று காலக்ஸிகள் உருவாகின்றன.
இதன்போதுபாப்புலேசன் 2 மற்றும் 3 வகைநட்சத்திரங்கள்தோற்றமுறுகின்றன.வானியல்அறிஞர்களால்மிகஅதிகளவானஅதாவது 12.7 பில்லியன்ஒளியாண்டுதூரத்தில்உள்ள CFHQS 1641-3755 எனும் குவாசர் அவதானிக்கப்பட்டுள்ளது. நாம்தற்போதுகாணும்அதன்தோற்றம்பிரபஞ்சம்உருவாகிஇன்றிலிருந்து 7% வீதம் கடந்த பழையது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைவிட கலிபோர்னியாவில் உள்ள கெக் 2 தொலைகாட்டி மற்றும் ஹபிள் விண் தொலைக்காட்டியும் மிகமிக பழைய அண்டங்களை அதாவது காலக்ஸிகளை இணங்கண்டுள்ளன. இவற்றில் சில பிரபஞ்சம் தோன்றி 500 மில்லியன் வருடங்கள் கழித்து உருவானவை.மேலும்சிலபிரபஞ்சம்தோன்றிதற்போதைய நிலையிலிருந்து 5 வீதம் கழித்து உருவானவை. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிபடிக்கும் அணு வரிசை பிரபஞ்சவியல்இன் ஆராய்ச்சி முடிவுகளின் படி நமது சூரியகுடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் அண்ணளவாக 8.8 பில்லியன் வருடங்கள் பழையது. பிரபஞ்ச வெளியில் அடர்ந்துள்ள சடப்பொருள், ஈர்ப்புவிசை மற்றும் மூலக் கூற்று ரீதியான கருத்தாக்கங்கள் மூலம் நட்சத்திரங்கள் மற்றும் குவாசர்கள், காலக்ஸிகளாக மாற்றமடைகின்றன. இவை மேலும் ஈர்ப்புவிசை காரணமாக ஈர்க்கப்பட்டு அண்டங்களின் கூட்டு, மற்றும் விசேட அண்டங்களில் கூட்டு (கிளஸ்டர்ஸ்,சுப்பர்கிளஸ்டர்ஸ்) என்பன தோன்றுகின்றன.
அடுத்த கட்டமாக நமது சூரிய குடும்பத்துக்கு வருவோம். பிக்பாங் நிகழ்ந்து சரியாக 8 பில்லியன் வருடம் கழித்து சூரிய குடும்பம் உருவானதாக வானியலாளர்கள் கூறுகின்றனர். காலங்கடந்த தலைமுறை நட்சத்திரமான நமது சூரியன் அதைப் போன்ற ஏனைய தலைமுறை நட்சத்திரங்களின் சிதைவுகளில் இருந்து 4.56 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியது.
இறுதியாக பிரஞ்சத்தின் இன்றைய வயது சம்பந்தமாக அலசுவோம். பெருவெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து இன்று வரை விரிவடையும் வேகம் ஆர்முடுகிக் கொண்டு அதாவது அதிகரித்து கொண்டு வரும் பிரபஞ்சம் அண்ணளவாக 13.75 பில்லியன் வருடங்கள் பழையது ஆகும். இன்று பரிணாம மடைந்து வரும் பிரஞ்சத்தில் தற்போது காணப்படும் மிகப் பெரிய பொருள் சுப்பர்கிளஸ்டர்ஸ் எனும் விசேட அண்டங்களின் கூட்டு ஆகும். தற்போது விரிவடைந்து வரும் பிரபஞ்சம் அகவெளியில் வேறு பொருள் நுழைவதை தடுப்பதுடன் புதிதாக ஈர்ப்பு விசையுடைய பொருட்கள் உண்டாவதையும் நிறுத்துகின்றது.
பிரபஞ்சத்தின்முடிவு
பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு பெரு வெடிப்பு கோட்பாடு பிரதானமாக இருப்பதைப் போன்று இப்படித்தான் அதன் அழிவும் இருக்கும் என நிர்ணயிக்கும் உறுதியான ஒரு கோட்பாடு பிரபஞ்சத்தின் முடிவுக்கு கிடையாது. பிரபஞ்சத்தில் உள்ள சடமும் சக்தியும் ஒன்றுடன் ஒன்று தாக்கமுற்ற வண்ணம் புதிதுபுதிதாக உருமாறி விரிவடைந்து கொண்டே வரும் நிலையில் அதன் முடிவுக்கும் இவை ஏதோ ஒரு வகையில் நிலைமாற்றமைடைந்து பல எதிர்வு கூறல்களுக்கு வழி அமைக்கின்றன.
இதுவரை வானியல் அறிஞர்களால் இணங்காணப்பட்ட பிரபஞ்ச முடிவுக் கோட்பாடு களை ஒழுங்கு படுத்தினால் அவை இவ்வாறு அமையும் -
1.பாரிய உறைவு - big freeze
2.பாரிய உடைவு - big crunch
3.பாரிய உதறல்  - big rip
4.வெற்றிட ஸ்திரத் தன்மை - vacum metastability
5.வெப்ப இறப்பு  - heat death
பிரபஞ்சத்தின் அழிவு அதில் செறிந்துள்ள சடப்பொருளின் அடர்த்தி வேறுபாடு குறித்தே அடையாளப் படுத்தப் படுகின்றது. மேலே கூறப்பட்ட அழிவு வகைகளில் ஐன்ஸ்டீன் உட்பட பெரும்பாலான அறிவிய லாளர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டது பாரிய உறைவு எனும் குளிரினால் பிரபஞ்சம் உறைந்து போய் அழிவைச் சந்திக்கும் என்பதே ஆகும். இவ்வகை அழிவே மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் நிகழக்கூடியது அதாவது இன்றிலிருந்து 10 இன் 14ம் அடுக்கும் அதற்கு பிந்தியதுமான காலம் கழிந்த பின்னர் ஏற்படக்கூடியது. இக்காலப் பகுதியில் நட்சத்திரங்களில் காணப்படும் எரிபொருள் யாவும் எரிந்து தீர்ந்து போய் விடும் எனவும் பிரபஞ்சம் இருளடையும் எனவும் கூறப்படுகின்றது. 10 இன் 34ம் அடுக்கு காலம் வரை இதுதொடரும். இதன் பின்னர் ஹாவ்கிங் கதிர்வீச்சு வீதப்படி கருந்துளைகளும் காலக்ஸிகளும் ஆவியாகத் தொடங்கும். இதன் விளைவாக லெப்டோன் மற்றும் போட்டோன் ஆகிய நிறையற்ற துணிக்கைகள் மட்டுமே எஞ்சியுள்ள சடப்பொருளாக பிரபஞ்சத்தில் காணப்படும்.
மேலும் எலெக்ரோன்கள் போட்டோன்களாக நிலை மாறுவதால் கதிர்வீச்சு மிகவும் வீழ்ச்சி அடைந்து சடப்பொருட்கள் யாவும் உறைந்துபோகும்.
பாரிய உறைவில் பிரபஞ்சத்தின் பொருள் முழுவதும் சிக்கம் முன்னரே அதாவது இன்றிலிருந்து 100 பில்லியன் வருடங்களுக்கு பின்னர் பாரிய உடைவு எனும் அழிவை பிரபஞ்சம் எதிர்கொள்ளும் எனக் கூறப் படுகின்றது. இதன்போது ஊசலாடும் பிரபஞ்சம் எனும் பதம் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது அதிகரிக்கும் வேகத்தில்(ஆர்முடுகலில்) பிரபஞ்சம்விரிவடையகாரணமாகஉள்ளடார்க் எனெர்ஜி எனும் கருஞ்சக்தி ஒரு கட்டத்தில் நின்று மறுபக்கம் திரும்பும் எனவும் இதனால் பிரபஞ்சம் சுருங்கி சடப்பொருள் உடைவு ஏற்படும் எனவும் இதன் அடர்த்தி அதிகமாகி வெப்பம்அதிகரிக்கும்எனவும்கூறப்படுகின்றது. அவதானரீதியானஇக்கருதுகோளைபலஅறிவியலாளர்கள்ஏற்பதில்லைஎனவும்பிரபஞ்சம்விரிவடையும்வேகம்அதிகரிக்குக்வகையில்இதன்விரிவுமேலும்தொடரும்எனவும்உறுதியானஆதாரங்களுடன்பாரியஉடைவுகருதுகோளைஅவர்கள்மறுத்துவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
அடுத்ததாகபாரியஉதறல்கருதுகோளைநோக்குவோம்.இன்றிலிருந்து 20 பில்லியன் வருடங்களுக்குப் பின்னர் இதுநிகழும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இதன் போது டார்க் எனெர்ஜி எனும் கரும்சக்தி உக்கிரமடைந்து பேய்சக்தி எனப்பொருள் படும் பாண்டம் எனெர்ஜியாக மாறி பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் ஈர்ப்பு விசை யினின்றும் விலகி உதறப்படுகின்றன.
அதாவது காலக்ஸிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள்என்பனஈர்ப்புவிசையைஇழந்துஒன்றிலிருந்துஇன்னொன்றுவிலகிஎறியப்படும். மேலும் எல்லையில்லாமல்இச்சக்திவிரிவடையும்எனக்கூறப்படுகின்றது.இக்கடத்தில்இலத்திரன்கள்அணுக்களைவிட்டுவிலக்கப்பட்டுஈர்ப்புவிசைதனியாக்கப்படும்எனவும்கூறப்படுகின்றது.
பிக்ரிப்எனப்படும்பாரியஉதறல்நிகழ்வதால்பிரபஞ்சத்தின்அடர்த்திஎல்லையில்லாமல்வீழ்ச்சியடைந்துஒருகட்டத்தில்வெற்றிடஅதீதஸ்திரத்தன்மைஏற்படுகின்றது.இதன்போதுபிரபஞ்சம்விரிவடையும்வேகம்ஒளியின்வேகத்துக்குசமனாகும்எனவும்சடப்பொருட்கள்யாவும்அழிவைச்சந்திக்கும்எனவும்எதிர்பார்க்கப்படுகின்றது.
இறுதியாகவெப்பஇறப்பைநோக்குவோம்.இன்றிலிருந்து 10 இன் 150 ஆம் அடுக்கு காலத்தின் பின்னர் நிகழும் என எதிர்பார்க்கப்படும் வெப்ப இறப்புபிரபஞ்சத்திலுள்ளசடப்பொருள்யாவும் தீர்ந்து வெப்ப இயக்க சக்தி மட்டுமே எஞ்சி நிற்பதாகும். பெரும்பாலான அறிவியலாளர் களால் இறுதியாக நிகழக்கூடிய அழிவு இதுவென எற்கப்படுகின்றது. பௌதிக இயக்க சக்தி யாவும் தீர்ந்து போன இந்நிலையில் வெப்பம் அதிக அளவான என்ட்ரோபி எனும் கட்டத்தை அடைந்துநிற்கும். இந்நிகழ்வு பற்றி வெப்பவியலின் முதன்மையான விஞ்ஞானியான லோர்ட்கெல்வின் என அழைக்கப் படும் வில்லியன் தொம்சன் முதலில் கருத்து உரைத்திருந்தார்.
வட்ட உருளை எனும் (Disk) ஆகவும் உருளை எனப்படும் (sphere) ஆகவும் இரு பரிமாணங்களில் ஆராயப்படும் பால்வெளி அண்டம் 75 000 ஒளி வருடங்கள் நீளமான விட்டம் உடையது. கிட்டத் தட்ட 200 பில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இப்பால்வெளி அண்டம் பிரபஞ்சத்தில் உள்ள ஏனைய அண்டங்களுடன் ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது.
மேலும்நமதுபால்வெளிஅண்டத்தின்மத்தியில்விசேசநிறையுடையமிகப்பெரியகருந்துளைஒன்றுகாணப்படுவதாகவும்வானியலாளர்கள்தெரிவிக்கின்றனர்.பிரபஞ்சத்தின்தூசுஎனப்படும்அடர்ந்தவாயுப்படலத்தில்இருந்து 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நமது சூரியகுடும்பம் தோன்றியது. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்நமது சூரியனேபிரபஞ்சத்தின்மையம்எனகருதப்பட்டபோதும்ஹபிள்போன்றநவீனதொலைகாட்டிகளின்புகைப்படங்கள்மூலம்தெளிவாக்கப்படுவதுஎன்னவென்றால் பால்வெளி அண்டத் தின்மையத்தில் இருந்து அண்ணளவாக 27 200 ஒளி வருடங்கள் தூரத்தில் அதன் கரையிலேயே அமைந்து இருக்கிறது என்பதாகும்.
சூரிய குடும்பத்தில் சூரியனுடன் ஒன்பது கிரகங்கல் காணப்பட்டாலும் அவற்றில் மிகப் பெரியதும் நடுநாயகமானதும் சூரியனே ஆகும். பால்வெளி அண்டத்தைப் போலவே சூரியனும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சாதாரண நட்சத்திரமே ஆகும். சூரியனைப் பற்றிய முக்கியமான அறிவியல் தகவல்கள் பின் வருமாறு:
1.பூமியில்இருந்தானதூரம் - 1.00 AU(Astronomical unit) or (1.495979 * 10 இன்வலு 8) Km
2.பூமியில்இருந்துநோக்கும்போதுதெரியும்சராசரிகோணவிட்டம் - 0.53 பாகை
3.தன்னைத்தானேசுற்றஎடுக்கும்நேரம் - 25.38 நாட்கள்
4.விட்டம் - (6.9599 * 10 இன்வலு 5) Km
5.நிறை - (1.989 * 10 இன்வலு 30) Kg
6.சராசரிஅடர்த்தி - 1.409 g/cm3
7.மேற்பரப்பில்தப்புவேகம் - 617.7 km/S
8.ஓளிச்சக்தி - (3.826 * 10 இன்வலு 26) j/S
9.மேற்பரப்புவெப்பம் - 5800 K(கெல்வின்)
10.மையவெப்பம் - (15 * 10 இன்வலு 6) K
11.நட்சத்திரவகை - G2V
12.பார்வைத்திறன் - 4.83
சூரியனைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி மூன்று படலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு:
1.போட்டோஸ்பியர் (photosphere)
2.குரோமோஸ்பியர் (chromosphere)
3..கொரோனா(corona)
சூரியனின் கண்ணுக்குத் தெரியும் மேற்பரப்பு photosphere எனப்படுகின்றது. சூரியனை ஒரு டென்னிஸ் பந்தாக கருதினால் அதைச் சுற்றிக் காணப்படும் திசுப் பேப்பரை விட அடர்த்தி குறைந்தது இப்படை என கணிக்கப் பட்டுள்ளது. இதன் தடிப்பம் 500 Km இலும் குறைந்தது ஆகும். மேலும் இதன் வெப்பநிலை 5800 K(கெல்வின்) ஆகும். போட்டோஸ்பியருக்கு கீழே காணப்படும் பகுதியில் இருந்து அதிகளவு போட்டோன்கள் (ஒளிக்கதிர்கள்) வெளியான போதும் இதன் வாயுப்படை அதில் பெரும் பகுதியை தடுத்து விடுகின்றது. மேலும்பூமியின்வளிமண்டலத்தின்அடர்த்தியுடன்ஒப்பிடுகையில்போட்டோஸ்பியரின்அடர்த்தி 3400 மடங்குகுறைந்ததுஎனவும்கூறப்படுகின்றது.வருங்காலத்தில்மிகஉறுதியானஉலோகத்தினால்ஆக்கப்படும் விண்கலமொன்று சூரியனின் இப்படையில்  (7 * 10 இன் 4 0ஆம்வலு) Km வரை அதாவது மையத்தை நோக்கி 10 வீதம் வரை உள்ளே செல்ல முடியும் என விஞ்ஞானிகளால் கருதப்படுகின்றது.
அடுத்தபடலம்இதற்குமேலேஅமைந்துள்ளகுரோமோஸ்பியர்ஆகும்.இதுபோட்டோஸ்பியரைவிடஅடர்த்திகுறைந்தது.வெறும்கண்களால்பார்க்கமுடியாதஒளிப்படலமானஇதுசூரியகிரகணத்தின்போதுமறைக்கப்பட்டசூரியனின்எல்லைவட்டத்தில்மிகுந்தபிரகாசமாகநாவல்நிறகோட்டைஅடுத்து தென்படும். நாவல் என்பது சூரிய ஒளி யிலுள்ள சிவப்பு, நீலம், வயலெட் ஆகியவற்றின் கலவை ஆகும். குரோமோஸ்பியர் ஆனது அதன் நிறமாலை காரணமாக வானியலாளர்களால் விரும்பி ஆராயப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நாம் சுவாசிக்கும்வாயுவைவிடகுரோமோஸ்பியர் (10 இன்வலு 8) மடங்கு அடர்த்திகுறைவானது.
இறுதியாககொரோனா(corona) பற்றி நோக்குவோம்.  சூரியனின் மையத்தில் இருந்து மிகப் பெரிய பரப்பளவுடைய குரோமோஸ் பியருக்கு மேலாகவும் உள்ளேயிருந்து படர்ந்துள்ள பகுதி கொரோனாபடலம் எனப் படுகின்றது. கிரேக்க நாகரிக மக்களால் கிரவுன் என அழைக்கப்பட்ட ஓளி அலைகளை உள்ளடக்கியுள்ள இப்பகுதி சூரியனில் இருந்து பூமிக்கான தூரத்தின் 10 வீதத்தை உடையது என்பதுடன் 20 சூரியவிட்ட ஆரையைக் கொண்டது. மையத்தில் இருந்து புறப்படும் கொரோனோ இன் ஒளிக்கதிர்களின் சராசரி வெப்பநிலை 1 மில்லியன் கெல்வின் அதாவது போட்டோஸ்பியரைவிடபலநூறுமடங்குஅதிகமானது.அதிகளவானஇந்தவித்தியாசம்பலவிஞ்ஞானிகளைஆச்சரியத்துக்குஉள்ளாக்கியுள்ளது.இதுபற்றிமேலும்ஆராய்வதற்காகநாசாவிண்வெளிஆய்வுமையம் SOHO எனப்படும் செய்மதியை ஏவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இச்செய்மதி சூரியனின் வெளிப்படலமான போட்டோஸ்பியர் பற்றி தீவிரமாக ஆராய்ந்து பல தகவல்களை வழங்கிவருகின்றது.
சூரியனில் எவ்வகையான செயற்பாடு நிகழ்கின்றது என்பது குறித்து இப்போது நோக்குவோம். சூரியனில் நிகழும் முக்கிய கருத்தாக்கமானது ஐதரசனின் உட்கருபிளவுற்று ஹீலியம் அணுக்களாக மாறுவதே ஆகும். எனினும் மேலும் சிலதாக்கங்களும் நிகழ்கின்றன என விஞ்ஞானிகள் கருதக் காரணம் சூரியனின் மையப் பகுதியிலிருந்து வெளியாகும் சிறியளவான நியூட்ரினோக்களே ஆகும்.சமீபத்தில்சுவிட்சர்லாந்தின்சேர்ன்நகரில்மேற்கொள்ளப்பட்டகடவுள்துணிக்கைகுறித்த ஆராய்ச்சியின் போது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கண்டுபிடிப்பாக ஓளியை விட நியூட்ரினோக்கள் வேகம் கூடியவை என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சூரியனைப் போலவே ஏனைய நட்சத்திரங்களிலும் மேலே அவதானித்த மூன்று படைகளும் காணப்படும் என்ற போதும் கருத்தாக்கங்கள் வித்தியாசப்படலாம் என்பது வானியலாளர்களின் கருத்து.
பூமியின் ஒரே ஒருதுணைக் கோளான சந்திரன் சூரியகுடும்பத்தில் ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளாகும். இதுசூரியனில் இருந்துமிகஅதிகதொலைவிலுள்ளஒன்பதாவது கிரகமான புளூட்டோவை விட பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.சூரியகுடும்பத்தின்ஏனையகிரகங்களைவிடபூமிக்குமிகஅருகில்சந்திரன்உள்ளது.இதனால்தான்விண்ணில்மனிதனின்காலடிபட்ட ஒரேஇடமாகசந்திரன்விளங்குகின்றதுஎனலாம்.மேலும்விண்வெளிஆராய்ச்சிசெய்துவரும் உலகின் பல வல்லரசு நாடுகள் கடந்த 50 வருடங்களுக்கும்மேலாகபலசெய்மதிகளை ஏவி சந்திரனைப் பற்றிஆராய்ந்துள்ளன. சற்று முன்னே பார்த்தால் 1957 ஆம்ஆண்டு அமெரிக்கா வுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பூமி மற்றும் சந்திரனை மையமாகக் கொண்ட விண்வெளிப் போட்டி தொடங்கியது.
இவ்வாண்டில் ரஷ்யா, விண்வெளியில் வலம் வந்த முதலாவது செய்மதியான ஸ்புட்னிக்ஐ அனுப்பி பூமி மற்றும் விண்வெளி பற்றிய மனிதனின் தேடலுக்கு வித்திட்டது. இதன் பின்னர் சந்திரனை நோக்கி ஆளில்லா விண்கலங்களையும் 1958ம் ஆண்டு விண்ணுக்குச் சென்ற முதலாவது உயிரினமா கலைகா எனும் நாயையும் ரஷ்யா விண்ணுக்கு அனுப்பி விண்வெளி ஓட்டத்தில் முன்னிலை வகித்தது.


மேலும்ரஷ்யவிண்வெளிவீரர்யூரிககாரின் 1961ம்ஆண்டுவிண்ணுக்குச்சென்றமுதலாவதுமனிதராகவும்பின்னர் 1963 இல் ரஷ்யவீராங்கணை வலென்டினாவிலாடிமிரோவ்னாடெரெஷ்கோவாவிண்ணுக்குச்ச்சென்றமுதலாவதுவீராங்கணையாகவும்புகழ்பெற்றனர்
பதிலடியாகஅமெரிக்காரஷ்யாவுக்குஇணையாக 1960 ஆம் ஆண்டு முதல் சந்திரனை நோக்கிய தனது ஆளில்லா விண்கலங்களை செலுத்தி வந்தது. இதன் பின்னர் விண்வெளி ஆய்வின் முக்கிய மைல் கல்லாக விளங்கும் சாதனையை அமெரிக்கா நிகழ்த்தியது. அதாவது 1969 ஆம் ஆன்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் மூவர் பயணித்த அப்பொலோ 11 விண்கலம் சந்திரனில் தரை இறங்கியதுடன் இவ்வீரர்களில் இருவர் நீல்ஆம்ஸ்ட்ரோங் மற்றும் எட்வின் அல்ட்ரின் ஆகியோர் சந்திரனில் கால் பதித்து நடமாடினர். (மன்னிக்கவும் நாடகமாடினர் என்றுதான் பல நாடுகள் தெரிவிக்கின்றன. அதிலும் சீன அரசு இதனை உறுதி செய்யும் விதமான 2014ஆம் ஆண்டு தன் சந்திர பயணத்தின் போது  இதனை நிருபித்துள்ளர். இதனை நாசா மறுக்கவும் இல்லை) இதைத் தொடர்ந்து 1969 முதல் 1972 வரை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வகம் சந்திரனை நோக்கி 6 தடவை அப்பொலோ விண்கலங்களைச் செலுத்தி சந்திரனைத் தீவிரமாக ஆராய்ந்தது. இதன் போது மொத்தமாக 12 விண்வெளிவீரர்கள் சந்திரத் தரையில் தரையிறங்கி அதன் மேற்பரப்பில் அவதானங் களை மேற்கொண்டு புகைப்படங்கள் எடுத்ததுடன் விஞ்ஞான உபகரணங்களைப் பயன்படுத்தி 382 கிலோ எடையுடைய கற்கள் மற்றும் மண்ணையும் சேகரித்து வந்தனர்.
1.உபகோளின்பருமன்நிலை - சூரியகுடும்பத்தில் 5 ஆவதுமிகப்பெரியதுணைக்கோள்
2.சந்திரனின்சராசரிவிட்டம் - 1737.10 Km
3.துருவவிட்டம் - 1735.7 Km
4.கிடைவிட்டம் - 1738.14 Km
5.மேற்பரப்பின்பரப்பளவு - (3.793 * 10 இன்வலு 7) Km2
6.கனவளவு - (2.1958 * 10 இன்வலு 10) Km3
7.நிறை - (7.3477 * 10 இன்வலு 22) Kg
8.சராசரிஅடர்த்தி - 3.3464 g/cm3
9.கிடைஅச்சில்மேற்பரப்புஈர்ப்புவிசை - 1.622 m/s2
10.தப்புவேகம் - 2.38 Km/s
11.கிடைஅச்சில்சுழற்சிவேகம் - 4.627 M/s
12.பூமியைஒருதடவைசுற்றிவரஎடுக்கும்நேரம் - 27.321582 நாட்கள்
13.சராசரிசுற்றுப்பாதைவேகம் - 1.022 Km/s
14.மேற்பரப்புஅழுத்தம் - (10 இன் -7 ஆம்அடுக்கு) Pa(பாஸ்கல்)
15. பூமிக்கும்நிலவுக்கும்சராசரித்தூரம் - 384,403 Km
கிட்டத்தட்டஒருமாதத்துக்குச்சமானசந்திரமாதம் 28 நாட்களை உள்ளடக்கியது. சந்திரனில் சூரிய ஒளிபட்டுத் தெறிக்கும் பகுதி சாய்வாக ஒரு நாளைக்கு ஒரு தடவை வீதம் வேறுபடுவதால் அதில் கலைகள் உண்டாகின்றன். சந்திரன் பூமியைச் சுற்றி வருவதே இதற்குக் காரணமாகும். இதன் விளைவாக முதல் 14 நாட்கள் அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வளரும் கலையாகவும் (வளர்பிறை) இறுதி 14 நாட்கள் பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை தேயும் கலையாகவும் (தேய்பிறை) சந்திரன் தென்படுகின்றது.
மேலும்சந்திரனின்மேற்பரப்பைசாதாரணவிண்வெளித் தொலைகாட்டி மூலம் ஒளிபெருக்கி அவதானித்தாலே அதில் பாரிய குழிகள் காணப்படுவதை அடையாளங் காணலாம். இக்குழிகளே வெறுங்கண்ணால் முழு நிலவை அவதானிக்கும் போது கறைகளாக தென்படுவன.
4.6 தொடக்கம் 3.9 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் சந்திரத் தரையில் வீழ்ந்த லட்சக்கணக்கான விண்கற்களாலேயே இக்குழிகள் ஏற்பட்டுள்ளன.
மேலும் சந்திரனில் வளிமண்டலம் இல்லாத காரணத்தாலும் பூமியை விட ஆறில் ஒரு பங்கு ஈர்ப்பு சக்தியே உடையதாலும் இக்குழிகள் சேதமடையாமல் இலட்சக் கணக்கான ஆண்டுகளாக அப்படியே இருக்கின்றன. இன்னும் சில விஞ்ஞானிகள் சந்திரன் தோன்றிய புதிதில் அதில் உயிருடன் காணப்பட்ட பல எரிமலைகளின் செயற்பாடு காரணமாக இக்குழிகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். இவர்களின் கூற்றுப்படி சந்திரன் தோன்றிய புதிதில் 4.45 பில்லியன் வருடங் களுக்கு முதலில் மிகப் பெரிய பரப்பளவுடைய எரிமலைக் குழம்புக்கடல் (magma) சந்திர மேற்பரப்பில் காணப்பட்டது என்பதாகும்.
சூரியகுடும்பம்தோன்றி 30-50 மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் அதாவது 4.527 பில்லியன் வருடங்களுக்குப் பின்னர் பூமியின் மேற்பரப்பில் இருந்து பிரிந்து சென்ற பகுதியே நிலவு எனக் கருதப்படுகின்றது. சூரியகுடும்பம் தோன்றிய புதிதில் ஈர்ப்பு விசை ஒழுங்குக்கு உட்படாதகாரணத்தால்பூமியுடனும்ஏனைய கிரகங்களுடனும்மிகஅதிகளவில்விண்கற்கள் மற்றும்வால்வெள்ளிகள்மோதிவந்தன. கிட்டத் தட்ட செவ்வாய்க் கிரகத்தின் பருமனுக்கு ஒப்பான விண்பொருள் ஒன்று பூமியுடன் மோதியதால் பிளவுற்றபாகமே சந்திரன் என்பதே பெருமளவில் வானியலாளர்களால் ஒத்துக் கொள்ளப்பட்ட கருத்து.
(ஆனால், உண்மையில் அப்படி இல்லை என்றும் பல வானியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் சந்திரன் பூமியைக் கண்காணிக்க திட்டமிட்டு கட்டப்பட்ட ஒரு கண்காணிப்பு தளம் என்றும் கூறுகின்றன. அதற்கான பல கருத்துகளையும் கேள்விகளை யும் முன்வைக்கின்றனர்.
இந்திய மற்றும் கிறித்துவ மத அடிப் படையில் கடவுள்கள் பூமியில் தங்களைப் போன்றே வடிவத்தில் மனிதர்களை உருவாக்கினார்கள் என்று கூறப்படுகின்றது. அது உண்மையாகும் பட்சத்தில் அவர்களை வேற்று கிரகவாசிகள் என்றும் நாம் அழைக்கும் பட்சத்தில் சந்திரன் ஒரு கண்காணிப்பு தளமாக அமைக்கப்பட்டதில் சந்தேகமில்லை என்கின்றனர்.)
இது உண்மையா இல்லையா என்று பல கேள்விகள் எழும். அதனை நாம் ஜீரோ டிகிரி என்ற என்னுடைய இன்னுமொரு படைப்பில் பார்க்கலாம். இந்த  ஜீரோ டிகிரி படைப்பு இந்திய மற்றும் கிரேக்க புராணங்களின் அடிப்படையில் இன்றைய நவீன விஞ்ஞானம் மூலம் விளக்கப்பட்டிருக்கும்
மேலும், பூமியில் மிகப் பெரிய பரப்பளவுடைய தரைப்பகுதியான பசுபிக் சமுத்திரம் உருவானதற்கும் பூமியிலிருந்து பிரிந்து போன சந்திரனே காரணம் எனவும் ஒரு சாரார் நம்புகின்றனர்.
பூரண சந்திரன் ஒளிரும் போது பூமியில் tidal waves எனப்படும் கடலலைகள் மேலே எழும்பி கொந்தளிப்பாக காணப்படுவதற்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடலில் பாலுணர்வு மேலோங்கி காணப்படுவதற்கும் மக்களின் மனநிலை பாதிப்புற்று காணப்படுவதற்கும் சந்திரனின் ஈர்ப்புசக்தி மற்றும் ஈர்ப்பலைகள் காரணமாகின்றது என உளவியலாளர்களும் புவியியலாளர்களும் கருதுகின்றனர்.
சமீபகாலத்தில்சந்திரனைக்குறித்தஆய்வுகள்அதில்தண்ணீர்உள்ளதாஉயிர்வாழ்க்கைக்கு உகந்தசூழல்காணப்படுகின்றதாமேலும் அதன் பூமிக்கு புலப்படாத மறுபக்கத்தில் என்ன மர்மங்கள் உள்ளன ஆகிய ஆய்வுகள் குறித்த விரிவான ஆய்வுகள் அமெரிக்காவைத் தவிர ஐரோப்பா, சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளாலும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. (அவை அனைத்தும் தோல்வியிலும் முடிந்துள்ளன. குறிப்பாக இந்தியாவின் சந்திராயன் நிலவின் துருங்களின் வழியாக சுற்றுப்பாதையை அமைத்துக் கொண்டு இதன் இரு பகுதியையும் அதாவது சூரிய ஒளிபடும் மற்றும் இருண்ட பகுதியையும் ஆராயலாம் என்று கருதப்பட்டது ஆனால் அது தனது 100-வது நாளில் காணாமல் போய் சுமார் 2 வருடங்களுக்குப்பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது அதுவும் செயல்படாத நிலையில்)
இதிலும்குறிப்பாகநட்சத்திரங்களைப்பற்றிவிரிவாகஆராய்வதற்காகஅமெரிக்காவின்நாசாவிண்வெளிஆய்வுமையம்திட்டமிட்டிருந்த 2020 ஆம் ஆண்டுக்கானசந்திரபயணம்தவிர்க்கமுடியாதகாரணங்களால் 2010 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் இடைநிறுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இதே கட்டத்தில் இன்னொரு பக்கம் சீனாவும் ஜப்பானும் இணைந்து 2015 தொடக்கம் 2035 வரையிலான காலப்பகுதியில் சந்திரனில் வீரர்கள் தங்கி திறம்பட விண்ணாய்வுகளை மேற்கொள்ள வசதியாக விண்பாசறை அமைக்க திட்டமிட்டுள்ளன என்பதும் முக்கியமான தகவலாகும்.
சூரியனிடமிருந்து 3 வது இடத்தில் அமைந்துள்ள கிரகமான பூமி பிரபஞ்சத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாக விளங்குகிறது எனலாம். சூரியனைச் சுற்றி அமைந்துள்ள நிலப்பரப்பை உடைய நான்கு கிரகங்களிலும் (Terrestrial Planets) மிகப் பெரியதான பூமி, ஏனைய எல்லா கிரகங்களிலும் மிகவும் அடர்த்தி கூடியதுடன் ஐந்தாவது மிகப்பெரிய கிரகமாகவும் விளங்குகின்றது. சூரியகுடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப்படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி (acccretion) மூலம் சூரியனுடன் சேர்ந்து 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியது. (இந்திய புராணங்கள் படி சதுர யுக தொடர்ச்சி ஆரம்பிக்கும் அதே காலகட்டம்) எனினும் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி 1 பில்லியன் வருடங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் தரைப் பரப்பை பெருமளவில் ஆக்கிரமித்துள்ள சமுத்திரங்களின் காரணமாக விண்வெளி யிலிருந்து பார்க்கும் போது அழகிய நீலநிறமாகத் தென்படுவதால் 'புளூபிளானெட்' என பூமி அழைக்கப்படுகின்றது. புவிமேற்பரப்பில் 70.8% வீதம் தண்ணீரால் மூடப்பட்டுள்ளது. மேலும் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மூலகங்களின் அளவை ஒப்பிடும் போது சிலிக்கன் மிக அதிகமாக 60.2% வீதமும், அலுமினியம் 15.2% வீதமும்நீர் 1.4% வீதமும்கார்பனீரொட்சைட் 1.2% வீதமும்காணப்படுகின்றன.
பூமியின்திணிவு (5.98 * 10 இன்வலு 24) Kg ஆகும்.பூமியின்மொத்தத்திணிவில்அதிகபட்சமாகஇரும்பும் (32.1%), அதையடுத்துஆக்ஸிஜெனும் (30.1%) தொடர்ந்துசிலிக்கனும் (15.1%) காணப்படுகின்றன. நாம் வாழும் பூமி இன்னமும் 500 மில்லியன் தொடக்கம் 2.3 பில்லியன் வருடங்களுக்கு உயிர் வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மனிதன் வாழ முடியுமா என்பதினை உறுதிப்படுத்தவில்லை. உறுதிப்படுத்தவும் முடியாது.
1.பூமி தன்னைத் தானே ஒரு முறை சுழல எடுக்கும் காலம் - 0.99 நாள் அல்லது  23 மணி 56 நிமிடம் 4 செக்கன்
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 365.256366 நாட்கள்அல்லது 1.0000175 வருடம்
3.சூரியனைச்சுற்றிபயணிக்கும்வேகம் - 29.783 Km/s
4.பூமியின்சராசரிஆரை - 6371 Km
5..துருவஆரை - 6356.8 Km
6.சுற்றளவு (கிடைஅச்சில்) - 40 075.02 Km
7.நீள்கோளமேற்பரப்பளவு - 510 072 000 Km2
8.கனவளவு - 1.0832073 * 10 இன்வலு 12 Km3
9.நிறை - 5.9736 * 10 இன்வலு 24 Kg
10.சராசரிஅடர்த்தி - 5.5153 g/cm3
11.மையத்திலிருந்துஈர்ப்புவிசை - 9.780327 m/s2 அல்லது 0.99732 g
12.தப்புவேகம் - 11.186 Km/s
13.சாய்கோணம் - 23.439281 பாகை
14.எதிரொளிதிறன் - 0.367
15.மேற்பரப்புவெப்பம் - 184 K(குறைந்த), 287 K (மத்திய), 331 K (அதிகபட்ச)
16.வளிமண்டலத்தில்மேற்பரப்புஅழுத்தம் - 101.3 Pa
17. துணைக்கோள் - 1 (சந்திரன்)
பூமியானது தன் அச்சில் சுழலும் மற்றும் சூரியனையும் சுற்றி வரும் தன்மைகளைக் கொண்டு காலம் கணிக்கப்படுகின்றது. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் சராசரியாக 24 மணித்தியாலங்கள் அல்லது ஒரு நாளாகவும் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 365 1/4 நாட்கள் அல்லது ஒரு வருடமாகவும் கணிக்கப்படுகின்றது. இதில் சூரியனை சுற்றி வர எடுக்கும் காலத்தில் ஒரு நாளின் கால் பங்கை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கணிப்பிட்டு நான்காவது ஆண்டில் பெப்ரவரிமாதம் 29ம் திகதியாக சேர்க்கப்படுகின்றது. இதனையே நாம் லீப் வருடம் என்கிறோம். பண்டைய காலத்தில் சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டு மாதங்கள் கணிப்பிடப் பட்டபோதும் தற்போது அந்நடை முறை பின்பற்றப் படுவதில்லை. ஓரு மாதத்துக்கு மிக அண்மையாக அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வளர்பிறை 14 நாட்களும் பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை தேய்பிறை 14 நாட்களும் மொத்தமாக 28 நாட்களே சந்திர மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் சராசரியாக சந்திரன் ஒரு முறை பூமியைச் சுற்றி சூரியனையும் சுற்றிவரும் வீதத்துடன் ஒப்பிடுகையில் முதல் பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை 29.53 சராசரியாக 30 நாட்கள் எடுப்பதாக வானியலாளர்கள் கணித்துள்ளனர். இது சைனோடிக் மாதம் எனப்படுகின்றது.

பூமியின் அச்சுசுழற்சி அதன் கோளப்பாதையிலிருந்து 23.4 பாகை செங்குத்தாக விலகி சாய்ந்திருப்பதால் (பூமியின் காந்த அச்சில் மாற்றம் இல்லை) பருவநிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன. பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் படுவதே இதற்குக் காரணமாகும். வடதுருவம் சூரியனை நோக்கி உள்ள போது வடவரைக்கோளத்தில் கோடை காலமும் சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர்காலமும் ஏற்படுகின்றது. இதேபோன்றே தென்துருவத்திலும் எதிரிடையாக காலநிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன. துருவப்பகுதிகளின் உச்சியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வருடத்தின் ஆறுமாதம் பகல் மற்றும் ஆறு மாதம் இரவு என பருவங்கள் நிகழ்கின்றன. புவியின் சாய்வு காரணமாக சிறிது ஒழுங்கற்ற இயக்கம் நிகழ்வதாக வானியலாளர்கள் கருதுகின்றனர்.பூமிமற்றும் சந்திரனின் ஈர்ப்பு காரணமாக துருவ நகர்வுகள் நிகழ்கின்றன. இது சாண்ட்லேர் தள்ளாட்டம் எனப்படுகின்றது. மேலும் சூரியன் பூமிக்கிடையிலான தூரமும் மிகச்சிறியளவில் அதிகமாகிக் கொண்டு வருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

பூமியில் மிக உயர்ந்த இடமாக வடஇந்தியாவின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரமும் (8048 m) மிகத் தாழ்ந்த இடமாக பசுபிக் பெருங்கடலிலுள்ள மரியானா ஆழியும் (10 911.4 m or 11 Km) காணப் படுகின்றன. பூமியில் உள்ள நிலப்பரப்பு 7 கண்டங்களாகவும் 5 சமுத்திரங்களாகவும் வகுக்கப்பட்டுள்ளது.சமுத்திரங்களில்அடங்கியுள்ளநீரில் 97.5% வீதம்உப்புநீராகவும் 2.5% வீதம்தூயநீராகவும்தூயநீரில் 68.7% வீதம்பனிக்கடிகளாகவும்காணப்படுகின்றன.
பூமியின் வளிமண்டலத்தை எடுத்துக் கொள்வோம். வளிமண்டலத்தின் மேற்பகுதி ஓசோன்படலத்தால் சூழப்பட்டிருப்பதால் பிரபஞ்சபின்புலக் கதிர்கள் மற்றும் சூரியனிடமிருந்து வரும் அல்ட்ராவயலெட் எனப்படும் புறஊதாக்கதிர்கள் தடுக்கப் படுகின்றன. இதனால் உயிர்வாழ்க்கைக்கு உகந்த சூழல் பூமியில் நிகழ ஏதுவாகின்றது .புவிமேற்பரப்பில் சராசரி வளிமண்டல அழுத்தம் 8.5 Km வரை 101.325 Kpa ஆகக் காணப்படுகின்றது. பூமியில்தாவரவளர்ச்சிக்குஏதுவானசூரியஒளி மூலம் நிகழும் பச்சை வீடுவிளைவு எனும் ஒளிப்பெருக்கம் 2.7 பில்லியம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. தற்போது வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்களின் வீதத்தைப்பார்த்தால்அதிகளவாக நைட்ரஜன் 78% வீதமும் ஆக்ஸிஜன் 21% வீதமும் மிகச் சிறியளவில் நீராவி மற்றும் காபனீரொட்சைட்டு வாயுக்களும் காணப்படுகின்றன.
(இதுவரையில் நாம் புத்தகத்தில் படித்தபடி பூமியும் சரி சூரியனும் சரி ஒழுங்கான நீள் வட்டப்பாதையில் பயணிக்கவில்லை. பூமி சூரியனை சுற்றி வரும் நிகழ்வு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உதாரணமாக பூமி 2017-ம் வருடம் மார்ச் 21 –ல் இருந்த இடத்திற்கு வர 12 வருடங்கள் ஆகும். அதே நேரத்தில் சூரியனிலும் சில நகர்வு உணரப்படுகிறது. இந்த நகர்வையும் எடுத்துக் கொண்டால் இவை இரண்டும் 2017 மார்ச்-221-ல் இருந்த அதே புள்ளியை சந்திக்க 60 வருடங்கள் ஆகின்றன. இதனை தமிழ் வருடங்கள் மூலம் அறியலாம். இதேப் போல் சூரியனும் ஒரு நேர்க்கோட்டில் பால்வீதியை சுற்றவில்லை. அதுவும் வளைந்த முறுக்கிய கோட்டில்தான் பயணிக்கிறது. இந்த ஈர்ப்பும் அலையும் நமது டி.என்.ஏ-வில் பதிவாகி விட்டதுப்பால நமது DNA இந்த சூரியன் மற்றும் பூமியின் சுயற்சியை நினைவுப்படுத்தும் வகையில் முறுக்கிக் கொண்டு காணப்படுகின்றது.)
இதனை நீங்கள் நம்பவில்லை என்றால் Solar System & Galaxy Movement origin என்று google தேடிப்பாருங்கள். இன்றும் நாம் காணும் விஞ்ஞானம் முழுவதும் உண்மையானதா என்றால் இல்லை. ஒவ்வொரு செய்தியும் திரிக்கப்பட்டு, உண்மைகள் மறைக்கப்பட்டுதான் மக்களுக்குச் சொல்லப்படுகின்றது. இப்படி சொல்ல காரணங்கள் உண்டு. ஆனால் அவற்றைச் சொன்னால் நம்பும்படியாக இல்லை என்பார்கள். எல்லாம் வியாபாரம்தான். உதாரணமாக மாயன் காலண்டர் விவகாரத்தினைப் பாருங்கள் 2012-ல் உலகம் அழியும் என்று சொன்னதாகச் சொன்னார்கள் ஆனால் இன்றுவரையும் அப்படி எதுவும் இல்லை. உண்மையில் 2012-ல் உலக அழிவு என்பது ஆரம்பப் புள்ளிதான் அதன் இதன் இறுதிப்புள்ளி 2037-ல் முடிவடைகிறது. இதற்கு இடைப்பட்ட காலம் நிலையில்லாத் தன்மை (Unstable) யாக அமைந்துள்ளது. இக்கால கட்டத்தில் உலகம் முழுவதும் அழிந்துவிடாது பருவநிலை மாற்றம் என்பது ஒரு நிலைப்பாட்டிற்கு வரும். உலகின் ஒட்டு மொத்த செயல்பாடுகள், தன்மைகள் மாறும் எத்தனை ஆறுகள் இடம் பெயரும், காணாமல் போகும் என்பதினை கண்டிப்பாக நீங்கள் பார்க்கலாம். இது தீர்க்க தரிசனம் அல்ல. இதற்கு விஞ்ஞான ரீதியில் விளக்கங்கள் உண்டு. அதாவது பூமி மற்றும் சூரியனின் இடம் பெயர்வு. பால்வீதியின் சுயற்சியில் ஏற்படும் மாற்றம். விரிவடையும் பிரபஞ்சத்தின் வேகத்தில் ஏற்படும் மாற்றம்.
என்று அனைத்தும் இதில் உள்ளடங்கியுள்ளது.

ஒரு ஒழுங்கற்ற தன்மையில் தான் இப்பிரபஞ்சம் பிறந்தது. ஒழுங்கற்ற தன்மையில் தான் வளர்ந்தது. ஒழுங்கற்ற தன்மையில்தான் சூரியனின் இயக்கம் அமைந்தது. அதன் ஒழுங்கற்ற தன்மையில்தான் பூமி பிறந்தது. இப்படி அனைத்தும் ஒரு ஒழுங்கற்ற தன்மையில் பிறந்த நிலைப்பெற்று வந்ததுள்ளன. ஆனால் நமக்கு இவை அனைத்தும் ஒழுங்கான சீரான செயல்பாடுகளாகத் தான் தெரியும். காரணம் நமது காலம் என்பது பிரபஞ்சத்தின் காலத்தை விட0.0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000001 என்ற அளவில் சிறியது.

தொடரும்….