02 டிசம்பர், 2016

கிறிஸ்துவின் தொலைந்து போன சமாதி

கிறிஸ்துவின் தொலைந்து போன சமாதி
சமீபத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஒரு தொலைக்காட்சி ஒலி ஒளிப் படம் இது. வழக்கம் போல பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற கிறிஸ்துவ மதச் சார்புள்ள நாடுகளில் வெளியிடப்பட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
1980களில் ஜெருசலம் நகரில் பல கட்டிடங்கள் கட்டப்படுகின்றன, அப்போது அந்த ஊரில் ஆங்காங்கே இருக்கும் பல பழமையான சமாதிகள் இடிக்கப் படுகின்றன. தீவிர மத நம்பிக்கைகள் கொண்ட நாடான இஸ்ரேலில் இது போன்ற சமாதிகள் இடிக்கப்படுவதால் முணுமுணுப்புகள் எழுந்தன.
ஆகவே அந்த பழங்காலத்து சமாதிகளை காக்க அந்த சமாதிகளில் உள்ள பொருட்களை இஸ்ரேல் அருங்காட்சியகத்துறை பல குடோன்களில் அடைத்து வைக்க ஆரம்பித்தது.
இங்கு சமாதி என்ற சொல் சரியானது அல்ல என்றே சொல்ல வேண்டும். இவை நம் ஊரில் இருக்கும் சமாதிகள் போன்றவை அல்ல.
ஒரு குகை அதில் வைக்கப்பட்டிருக்கும் 1x1 அடி நீளமுள்ள சில பெட்டிகள். இவைதான் அந்த காலத்து யூத சமாதிகள்.
இந்த யூத சமாதிகள் வைக்கும் பழக்கம் மிகக் குறைவான காலமே இருந்து வந்தது. சுமார் 100 ஆண்டுகள் மட்டுமே இந்த பழக்கம் நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. அதற்கு பின்னால் படையெடுப்புகள் போன்ற காரணங்களால் இவை முற்றிலுமாக குறைந்து போய் விட்டது.
யூத மத பழக்கத்தின் படி ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட சமாதி குகைகள் இருந்து வந்தன. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் இறந்தவுடன் இறந்தவரின் உடலை அந்த குகைக்குள் சென்று வைப்பார்கள். ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்து அந்த உடலில் மிஞ்சி இருக்கும் எலும்புகளை ஒரு பெட்டியில் வைத்து அந்த குகையில் ஒரு பகுதியில் வைத்து விடுவார்கள். இது தான் அந்தக் காலத்து யூத சமாதிகள்.
குடும்பத்தினர் யாருடைய பெட்டியில் யாருடைய எலும்புகள் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு கொள்ள இறந்தவரின் பெயரை பெட்டியில் எழுதி வைப்பார்கள்.
இந்த பெட்டிகளை Ossuary(ஆஸூவரிகள்) என்று சொல்லுவார்கள். இந்த ஆஸீவரிகளில் உள்ள பெயர்கள் இஸ்ரேல் அருங்காட்சியகத்துறை தொகுத்து வைத்துள்ளது.
இந்த ஒளி ஒலிப் படத்தை எடுத்த இயக்குனர் அந்த தொகுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளை படிக்கும் சமயம் அதில் உள்ள ஒரு பெயர் அவரை ஈர்த்தது. அந்தப் பெயர்தான்
யேசுவா பார் யகோசே
ஹீப்ரூவில் இருக்கும் இந்தப் பெயரை ஆங்கிலப்படுத்தினால் நமக்குக் கிடைப்பது
Jesus son of Joseph
இந்தப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது 1980களில்.
இங்கு சற்று வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறது.
புனித மேரிக்கும் ஜோசப் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட வேளையில், புனித மேரி பரிசுத்த ஆவியால் தனக்கு குழந்தை உண்டானதாக அறிவித்தார். ஜோசப் அவரை திருமணம் செய்து கொண்டு கிறிஸ்துவையும் தத்தெடுத்துக் கொண்டார். ஆகவே கிறிஸ்து அவர்களின் வளர்ப்புத் தந்தை பெயர் ஜோசப். மேரிக்கும், ஜோசப்புக்கும் வேறு குழந்தைகளும் உண்டு. அதாவது கிறிஸ்து அவர்களுக்கு மரியாம்னே, சலோமி என்ற இரண்டு தங்கைகளும் ஜோசப், ஜேம்ஸ், சைமன், ஜுடாத் என்ற நான்கு தம்பிகளும் உண்டு.
மேலும் கிறிஸ்து அவர்கள் சிலுவையில் அறைந்து இறந்த உடன் அவரை ஒரு குகையில் சென்று வைத்ததாகவும் அந்த குகைக்கு மூன்று நாளுக்கு பின்னால் சென்ற மேரி மதலான்(மேரி மங்க்டாலின்) அங்கு கிறிஸ்துவின் உடலைக் காணாமல் தேட கிறிஸ்து உயிர்தெழுந்து மேரி மதலான் அம்மையாருக்கு காட்சியளித்தார்.
இவை அனைத்தும் பைபிளின் பழைய ஏற்பாடுகளில் இருந்து நமக்குத் தெரிய வரும் தகவல்.
இந்த சரித்திர உண்மைகளைப் ஒருவர் அறிந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அவருக்கு, ஜோசப் மகன் இயேசுவின் சமாதி என்ற செய்தியைக் கேட்டவுடன், இந்த சமாதி இயேசு கிறிஸ்துவுடையதாக இருக்கலாமோ என்ற கேள்வி தோன்றி இருக்க வேண்டுமல்லவா? ஏன் இந்தக் கேள்வி இந்த சமாதி கண்டுபிடிக்கப்பட்ட 1980களில் எழவில்லை?
ஏனெனில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சமாதி இவ்வளவு சாதாரணமாக கண்டுபிடிக்கப் பட்டிருக்க முடியாது என்று மக்கள் நினைத்ததால் இருக்கலாம்.
இல்லை இயேசு என்ற பெயரும், ஜோசப் என்ற பெயரும் பழங்காலத்து ஜெருசலத்தில் மிக அதிகமாக புழக்கத்தில் இருந்த பெயர். அந்த காலத்து ஜெருசலம் தெருவில் நின்று இயேசு என்று கூப்பிட்டால் 10% சதவீதம் பேர் திரும்பிப் பார்ப்பார்கள். ஆகவே இது அவருடைய சமாதியாக இருக்க முடியாது என்று தீர்மானித்து விட்டார்கள்.
ஆனால் இந்த ஒளி ஒலிப் படத்தில் இயக்குனரால் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் இதனை மேலும் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தார்.
முதலில் இஸ்ரேல் அருங்காட்சியகத்துறைக்கு சென்று அந்த சமாதியில் உள்ள மற்ற பெயர்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்.
அங்கு கிடைத்த அடுத்தப் பெயர்
மரியா
அதாவது புனித மேரி அல்லது மரியம்.
இயேசு, ஜோசப், மேரி இந்த மூன்று பெயரும் ஒரு குடும்ப சமாதிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கிடைக்கிறது. நமக்குத் தெரிந்த இயேசுவை விடுத்து வேறு ஒரு இயேசு கிறிஸ்து, மேரி, ஜோசப் என்ற மூவர் இருந்திருக்க முடியுமா? இந்தக் கேள்விகளுடன் மேலும் அதே சமாதியில் உள்ள வேறு பெயர்கள் ஆராய ஆரம்பிக்கிறார். அப்போது அவருக்கு கிடைத்த இன்னொரு பெயர்
யோசே
இந்தப் பெயரையும் நாம் பைபிளின் பழைய ஏற்பாடுகளில் காண்கிறோம். இயேசுவின் தம்பி ஜேம்ஸை குறிப்பிடும் ஒரிடத்தில் இந்தப் பெயரை குறிப்பிடுகிறார்கள்.
சரி இப்போது ஜெருசலம் நகருக்கு செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த நகரில் சுமார் ஒரு 60,000 பேர் வசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரையும் ஒரிடத்தில் கூப்பிட்டு வைத்து இயேசு என்பவர்கள் எல்லோரும் எழுந்து நில்லுங்கள் என்றால் 6,000 பேர் எழுந்து நிற்பார்கள். ஜோசப் என்று கூப்பிட்டால் 12,000 பேர் எழுந்து நிற்பார்கள் மேரி என்று கூப்பிட்டால் 15,000 பேர் எழுந்து நிற்பார்கள்.
இப்போது இயேசு என்று கூப்பிடுகிறோம் 6,000 பேர் எழுந்து நிற்பார்கள், இயேசு ஜோசப்பின் மகன் என்று கூப்பிட்டால் அதில் பாதி பேர் 3,000 பேர் இருக்கிறார்கள் என்று வைப்போம். இந்த இயேசு என்பவருக்கு மேரி என்ற பெயரில் ஒரே இடத்தில் சமாதி அமைக்கும் அளவுக்கு நெருக்கமான சொந்தக்காரர்கள் இருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள் என்றால் எத்தனை பேர் மிஞ்சுவார்கள். அதோடு யோசே என்ற பெயரையும் எடுத்துக் கொண்டால் எத்தனை பேர் இருப்பார்கள்?
இந்த சமாதியில் கிடைத்த மற்றொரு பெயர் தான்
மாரா மரியம்னே
இந்தப் பெயர் இது வரை இஸ்ரேலில் கிடைத்துள்ள ஆஸ்சுவரிகள் அனைத்திலும் ஒரே இடத்தில் தான் கிடைத்துள்ளது.
இங்கு மாரா என்பது இன்றும் பூசாரிகளுக்கு கொடுக்கப் பட்டு வரும் பெயர். இந்தப் பெயரை ஆங்கிலப்படுத்தினால் கிடைப்பது
Master Mariamne
இந்தப் பெயர் பைபிளின் எந்த இடத்திலும் உபயோகப் படுத்தப்படவில்லை. ஆனால் இந்தப் பெயரை வேறு ஒரு மிக முக்கியமான இடத்தில் காண முடிகிறது. 1930களில் கிடைத்த Dead sea scrollsகளில் தான் அது.
அதில் மேரி மதலான் அம்மையாரை இதே பட்டத்துடன் மாரா மரியம்னே என்று பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள்.
அதே பெயர் இந்த சமாதியிலும் இருக்கிறது.
இது ஒரு மிக அரிய விஷயம். யோசித்துப் பாருங்கள் கிறிஸ்து, புனித மேரி, ஜோசப், யோசே என்ற அனைத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் அந்த குடும்பத்தைச் சேராத ஆனால் கிறிஸ்துவின் மிக நெருக்கமான சீடர்களில் ஒருவரான மதலான் அம்மையாரின் பெயரும் குறிப்பிடப்படுகிறது.
இது மிக மிக அரிதான ஒரு விஷயம் என்று குறிப்பிடுகிறார்கள் இயக்குனர்.
மேலும் இந்த சமாதிகள் மேல் கட்டிடங்கள் கட்டபட்டதாக நினைத்திருந்தார் இந்த் ஒளி ஒலிப் படத்தின் இயக்குனர். ஆனால் இந்த சமாதியைத் தேடிச் சென்ற இடத்தில் அவருக்கு அந்த சமாதிக்குள்ளே செல்லவும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்த சமாதியில் அவர் இன்று அமெரிக்க டாலரில் உள்ள முக்கோண வடிவத்தை அந்த சமாதியின் நுழைவாயிலில் கண்டு பிடிக்கிறார்.
இந்த முக்கோணம் knights templar என்பவர்களுடன் சம்பந்தப்பட்ட ஒரு குறியீடு ஆகும். Davinci code படித்தவர்களுக்கு knights templar என்பவர்களுக்கும் வாடிகன் நகருக்கு இருந்த பகை போன்றவையும், வாடிகன் நகரம் மூலமாக இவர்கள் மிகப் பெரிய பணக்காரர்கள் ஆனதும், பின் வாடிகனாலேயே படுகொலை செய்யப்பட்டதும் தெரியவரும்.
ஆனால் அந்த சமாதியை மேலும் பார்வையிட முடியாமல் இஸ்ரேல் அருங்காட்சியகத்துறை இவர்களை வெளியேறச் சொல்லி விட்டது.
இந்தப் படத்தின் இயக்குனர் இந்த ஒளி ஒலிப் படத்தை முடிக்கும் முன் இந்த சமாதி இயேசு கிறிஸ்துவுடையது இல்லையென்றால், பின் யாருடையது, எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம், இவரின் சமாதியைப் போல் மிக முக்கியமான ஒரு சர்ச்சைக்குரிய செய்தி நோவாவின் பேழை அதையும் துருக்கியின் மலைப்பகுதியில் கண்டுபிடித்துள்ளார்கள், அதைப்பற்றி பின்பு பார்ப்போம்,
இயேசு கிறிஸ்துவிற்கு திருமணமாகிவிட்டது அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவர் ஒரு சராசரி மனிதன், கடவுளின் நேரடிக் குழந்தை அல்ல. ஒரு தீர்க்கதரிசி மட்டுமே. டான் பிரவுன் அவர்களின் நாவலான டாவின்வி கோட் நாவலில் ராபர்ட் லாங்டன் என்ற கதாபாத்திரம் சோபியா என்ற பாத்திரத்திடம் இவ்வாறு கூறும் சமயம் சோபியா மட்டும் அல்ல எனக்கும் தூக்கிவாரிப் போட்டது.
என்னை முதன் முதலில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை வித்தியாசமான ஒரு கோணத்தில் பார்க்க வைத்தது டாவின்சி கோட் நாவல்தான்.
இந்த நாவலின் ஆரம்பம் லாவுரே( Louvre ) என்ற மியூசியத்தில் ஆரம்பிக்கிறது. அந்த மியூசியத்தின் மேற்பார்வையாளர் ஜாக்குவஸ் கொலை செய்யப்படுகிறார்.அவர் இறக்கும் நேரத்தில் அவர் விழுந்து கிடக்கும் இடத்தில் ராபர்ட் லாங்டன் பெயரையும் சில எண்களையும் சில வார்த்தைகளையும் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார். ராபர்ட் லாங்டனை ஹாவர்ட் பல்கலை கலகத்தில் சரித்திரம் மற்றும் கூறியீட்டியல் பேராசிரியர். சரித்திர ஆராய்ச்சி செய்து வருபவர்.
அங்கு வரும் காவல்த்துறை ராபர்ட் லாங்டன் பெயரை பார்த்து விட்டு ராபர்ட்தான் கொலை செய்தார் என்று சந்தேகம் கொண்டு ராபர்டின் பெயரை அழித்துவிட்டு சம்பவ இடத்திற்கு ராபர்டை அளைத்து வந்து விசாரணை செய்கிரார்கள். ஜாக்குவஸின் மரண வாக்குமூலத்தில் எண்கள் இருப்பதால் கிரிப்ட்டோகிராபி துறையின் உதவியை நாடுகிறார்கள் காவல் துறையினர்.
அங்கு வேலை பார்க்கும் சோபியா ஜாக்குவஸின் பேத்தி. சோபியா அந்த செய்தியைப் பார்த்தவுடனே தன்னுடய தாத்தா தனக்காகதான் இந்த செய்தி என்பதை உணர்ந்து கொள்கிறாள். இந்த செய்தியால் ராபர்ட் கைது செய்யப்படலாம் என்பதையும் உணர்ந்து இந்த செய்தியை முழுவதுமாக புரிந்து கொள்ள ராபர்டை தொடர்பு கொள்ளச் சொல்லி இருக்கிறார் தன்னுடய தாத்தா என்பதயும் புரிந்து கொள்ளும் சோபியா, இதனால் ராபர்டிற்கு ஆபத்து உள்ளது என்று உணர்ந்து ராபர்டை போலிஸில் இருந்து தப்புவிக்கிறார்.
இப்படி கொலை என்று சஸ்பென்ஸ் நாவலாக ஆரம்பிக்கும் டாவின்சி கோட் ஒரு புதையல் வேட்டையாக மாறுகிறது. ஜாக்குவஸ் இறக்கும் முன் தான் பல காலம் பாதுகாத்து வந்த ரகசியம் யாருக்கும் தெரியாமலே தொலைந்து விடக் கூடும் என்ற சூழ் நிலை உருவாகி விட்டதாலும், தன்னுடய பேத்தியான சோபியாவிற்க்கும் ஆபத்து இருக்கலாம் என்பதாலும், சோபியாவிற்கு ராபர்ட் லாங்டனை சந்திக்குமாறு விடுகதை போல ஒரு செய்தி எழுதி வைத்தார் என்பதை அறிகிறோம்.
அவர் காத்து வந்த ரகசியம் ஹோலி கிரைல்( holy grail ) எனப்படும் ஒரு கோப்பை என்று அறிகிறோம். இந்தக் கோப்பை கிறிஸ்து தன்னுடய கடைசி உணவு உண்ணும் சமயம் வைண் குடிக்க உபயோகப்படுத்திய கோப்பை என்றும் அறிகிறோம். இந்த கோப்பைதான் உலகில் உள்ள எல்லா புதையலிலும் மிக முக்கியமானது, விலை உயர்ந்தது. கிங் ஆர்தர் போன்றவர்கள் இந்த கோப்பையை கண்டு பிடிப்பதையே தன்னுடய வாழ்க்கையின் லட்சியமாக வைத்து இருந்தார்கள்.
ஆனால் சீக்கிரமே லாங்டன் ஹோலி கிரைல் என்பது உண்மையில் ஒரு கோப்பை அல்ல என்பதை விளக்கி அதன் உண்மையான அர்த்ததை விளக்கி கூறும் சமயமே நாம் முதலில் பாராவில் எழுதி இருக்கும் வசனத்தை ராபர்ட் சோபியாவிடம் கூறுகிறார்.
மேலும் கிறிஸ்து மேரி மக்தலாடின் என்ற பெண்மணியை திருமணம் செய்துள்ளார் அவர்களுடய குடும்பம் பல தலைமுறைகளை தாண்டி இன்றும் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார். அதற்க்கான ஆதாரங்கள் அடங்கி உள்ள ஆவனங்களே ஹோலி கிரைல் என்று அழைக்கைப் படுகிறது என்றும் கூறுகிறார். அதை அடையுதற்காகவே ஜாக்குவஸ் கொலை செய்யப்பட்டுருக்கிறார் என்பதையும் கூறுகிறார். இதன் பிறகு ராபர்டும், சோபியாவும் ஹோலி கிரைலை எதிரிகள் அடையும் முன் எவ்வாறு ஜாக்குவஸ் அமைத்திருக்கும் ஒவ்வொரு புதிருக்கும் விடை கண்டு பிடித்து அடைகிறார் என்பதுதான் நாவல்.
இந்த நாவல் மற்ற சஸ்பென்ஸ் நாவல்களில் இருந்து வித்தியாசப்பட்டுருப்பதற்க்கு கிறிஸ்துவின் வாழ்க்கை நாவலில் பின் புலமாக சொல்லப்பட்டுருப்பது ஒரு காரணம்.
மற்ற காரணம் என்னவென்றால் இந்த நாவலின் கதையை ஒட்டி பல சுவாரஸ்யமான தகவல்களும் சொல்லப்பட்டுருப்பதுதான். உதாரணமாக தெய்வீக எண் என்று அழைக்கப்படும் 1.618ன் ஆச்சர்யமான விஷேசங்கள் நாவலில் கதையின் போக்கிலேயே சொல்லப்படுகிறது.
நைட்ஸ் டெம்ப்லர்(Knights Templar)( இங்கிலாந்து நாட்டில் 1500ல் இருந்த ஒரு குழுவினர் இவர்கள் திடிரென்று சில வருடங்களில் பணம், அதிகாரம் பெற்று போபைவிட பலம் வாய்ந்தவர்களாகிவிட்டர்கள். இவர்களின் பண பலம், அதிகார பலம் கண்டு பயந்த போப் இவர்களை கொலை செய்ய ஏற்பாடு செய்தார் என்று பல வதந்திகள் இவர்களைப் பற்றி உண்டு. இன்றும் அவர்கள் எவ்வாறு பணம், அதிகாரம் அனைத்தியும் அடைந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது.) போன்ற சரித்திரத்தில் புதிராக இருக்கும் பல விஷயங்கள் நாவல் முழுவதும் கதையின் ஒட்டத்தினிடயே சொல்லப்பட்டிருக்கிறது.
மேரி மக்தலாடின் விபச்சாரி அல்ல
பல வல்லுனர்களும் உறுதி செய்யும் தகவல் இது. கிறிஸ்து ஒரு விபச்சாரியை மக்கள் கல் கொண்டு அடிக்கும் சமயம் பாவம் செய்யாதவர் மட்டும் இந்த பெண்ணை அடிக்கலாம் என்று கூறியது உண்மை ஆனால் இந்தப் பெண் மேரி மக்தலாடின் அல்ல என்று பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்ட ஒரு விசயம். டாவின்வி கோட் நாவலில் மேரி மக்தலாடினின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகதான் அவரை விபச்சாரி என்று பிரச்சாரம் செய்யப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது இது ஒரு கோணத்தில் சரி என்றே சொல்லலாம் போப் கிரிகாரி என்பவர்தான் முதன் முதலில் மேரி மக்தலாடினை விபச்சாரி என்று கூறினார். 1969ம் வருடம் கிறிஸ்துவ தேவாலயம் மேரி மக்தலாடினும், அந்த விபச்சாரியும் வேறு வேறு நபர்கள் என்பதை தெளிவு படுத்தியுள்ளது.
பைபிள் 100 சதவீதகம் உண்மையை சொல்லவில்லை
இதை உறுதிபடுத்திக் கொள்ளப்பட்ட தகவல்களில் சேர்ப்பதே சர்ச்சைக்குரியதுதான். ஆனால் இதில் உண்மை உள்ளது என்பதை பலர் ஒப்புக் கொண்டுள்ளார்கள். பைபிளில் என்தெந்த பகுதிகள் வைக்கப் பட வேண்டும் என்பதை தீர்மானம் செய்தவர்கள் கிறிஸ்து கடவுள் என்று தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் ஆகவே அவர்கள் கிறிஸ்துவை தெய்வப் பிறவியாக காட்டும் பகுதிகளேயே வைத்தார்கள் என்பது உண்மை. பைபிளில் அவருடைய சீடர்கள் எழுதிய பல பகுதிகள் வைக்கப் படவில்லை. இன்று நமக்கு டெல் ஸீ ஸ்கூரொல் போன்றவை கிடைத்துள்ளன அவை கிறிஸ்துவின் போதனைகளை சொல்லும் அதே நேரத்தில் அவரை ஒரு தெய்வப் பிறவி என்ற நோக்கில் அல்லாமல் ஒரு தலை சிறந்த தலைவனாக சித்தரிகிறது. நாம் இந்த ஆவனங்களை பொய் என்று ஒதுக்கி தள்ளி விட முடியாது ஏனெனில் இதுவும் கிறிஸ்து அவர்களில் சீடர்களாலேயே எழுதப்பட்டது. இது பொய் எனில் பைபிள் மட்டும் எந்த அளவு உண்மை??
டாவின்சியின் லாஸ்ட் சப்பர் கிறிஸ்து பற்றிய உண்மைகளை வெளிப்படுத்திகிறது
டாவின்சி கோட் நாவலின் மிக முக்கிய கிறிஸ்துவின் திருமணத்திற்கு முக்கிய ஆதாரமாக காண்பிக்க படுவது டாவின்சியின் லாஸ்ட் சப்பர் ஓவியம்தான். Description: C:\Users\Admin\Desktop\ih1vnE5.jpg
இந்த ஓவியத்தில் கிறிஸ்துவின் இடது புறத்தில் உள்ளது ஒரு பெண் அது மேரி மங்லாடின் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுடைய ஆடைகளையும் கவனியுங்கள் கிறிஸ்துவின் ஷாலும், மேரியின் மேலாடையும் மேரியின் ஷாலும் கிறிஸ்துவின் சட்டையும் ஒத்திருப்பதைக் காணுங்கள். டாவின்சி அப்படி வரைந்தது இருவரும் கணவன் மனைவி என்பதைக் குறிக்கத்தான் என்று டாவின்சி கோட் நாவலில் கூறப்படுகிறது. மேலும் இருவருடைய ஷாலும் அதற்கு நடுவே உள்ள இடைவெளியும் M என்ற சொல் உருவாவது போல தோன்றுகிறது பாருங்கள் இந்த சொல் மேரியை குறிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தில் மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டிய விசயம் என்னவென்றால் தன்னுடய கடைசி உணவைக் கொண்ட சமயம் கிறிஸ்து ஒரு கோப்பையில் வைண் பருகிய பின் அந்த ஒரு கோப்பையில் இருந்தே அவருடய சீடர்கள் அனைவரும் பின் வைண் பருகினார்கள் என்றுதான் இன்று வரை கூறப்பட்டு வருகிறது. அந்த கோப்பையே புனிதக் கோப்பை என்று அழைக்கப்படுகிறது அதுவே இன்று உலகில் மிகவும் தேடப்பட்டு வரும் புதையல். ஆனால் இந்த படத்தில் அந்த கோப்பை இல்லவே இல்லை. டாவின்சி மேரி மக்தலாடினையே புனிதக் கோப்பையின் வடிவாக கருதி வரைந்துள்ளார் என்றும் டாவின்சி கோட் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
இதைப் பற்றி வல்லுனர்களிடம் பல கருத்துக்கள் நிலவுகின்றன. பலர் கிறிஸ்துவின் அருகில் உள்ளது ஜான் என்று கூறுகிறார்கள். ஆனால் M என்ற எழுத்திற்க்கும் புனிதக் கோப்பை பற்றியும் ஒரு விளக்கமும் இல்லை.
கிறிஸ்து ஒரு யூதர் ஆகவே அவர் திருமணம் செய்திருக்க வேண்டும்.
கிறிஸ்து வாழ்ந்த கால கட்டத்தில் யூதர்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சூழ் நிலை நிழவியது ஆகவே அவருக்கும் திருமணம் நடந்திருக்க வேண்டும்.
இந்தக் கருத்து பற்றியும் வல்லுனர்கள் கிறிஸ்து ஒரு விதிவிலக்காக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள் ஆனால் கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யூதர்களின் பழக்க வழக்கங்கள் இருந்ததும் உண்மை.
கினாஸ்டிக் காஸ்பலிஸில்( Gnostic Gospels ) கிறிஸ்துவிற்க்கும் மேரிக்கும் காதல் இருந்திருக்கலாம் போன்று இருக்கும் பகுதிகள்.
கினாஸ்டிக் காஸ்பலிஸ் என்பது சில வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது இது கிறிஸ்துவின் போதனைகளை சொல்லும் அதே நேரத்தில் அவருக்கு மேரியுடன் காதல் இருந்தது என்பதைப் போன்று எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்து மேரியை முத்தமிடுவது போன்று சில பகுதிகளில் எழுதப்பட்டுள்ளது.
இதைப் பற்றி வல்லுனர்களிம் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இந்த ஆவனங்களை நம்ப முடியாது என்று கூறுகிறனர். சிலர் கிறிஸ்து தன்னுடய சீடர்கள் அனைவரையுமே முத்தமிடுவார் என்று கூறுகிறார்கள்.
இது வரை சேகரித்த தகவல் பற்றி…
டாவின்சி கோடில் ஒரு வசனம் பைபிள் சொர்க்கத்தில் இருந்து பேக்ஸில் வரவில்லை என்ற வசனம்.
பசி இல்லாமல் அனைத்து மக்களும் வாழ வேண்டும் என்று பாடு படும் அனைவரும் தெய்வப் பிறவிகள்தாம் அந்த வகையில் கிறிஸ்துவும் தெய்வப் பறவிதான்.
வாடிகன் நகரம் கிறிஸ்துவின் பெயராலே, போப் என்ற ஒருவரின் கருத்திக்களுக்கு ஏற்ப நடந்து கொண்டு வருகிறது. பல போப்புகள் மிக நன்றவர்களாகவே இருந்தாலும் சிலர் சூனியக்காரிகள் எரிப்பு என்று படித்த பெண்களை கொல்வது, சிலுவை யுத்தம் என்று நாடுகள் மேல் படை எடுப்பது என்று தவறான பல காரியங்களை செய்துள்ளார்கள். இன்று உள்ள மத தீவிரவாதம், நிறக் கொடுமை போன்ற விசயங்கள் தேவாலங்களில்தான் ஆரம்பித்தது.
இங்கு கூற வருவது என்னவெனில் கிறிஸ்து என்பவர் தெய்வப் பிறவியாக இருக்கலாம் ஆனால் வாடிகன் நகரத்தில் உள்ளவர்கள் அவ்வாறு இல்லை.
ஆகவே கிறிஸ்து உண்மையாக திருமணம் ஆனவராக இருந்தாலுமே அதை மறைக்க வேண்டும் என்று வாடிகன் முடிவு செய்திருந்தால் அது அவ்வாறே நடந்திருக்கும்.
கிறிஸ்து திருமணம் ஆனவாரா என்ற கேள்விக்கு பதில் ஆமாம் இல்லை என்று பதில் சொல்லக் கூடிய நிலை இல்லை என்று பதிவை முடிக்கவேண்டும்.
இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு
இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு (Unknown years of Jesus) என்பது, இயேசுவின் இளமைப் பருவத்திற்கும் (12 வயது) அவர் தமது 30ஆம் வயதில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கிய காலத்திற்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் அவர் என்ன செய்தார் என்ற மர்மத்தை விளக்குவதற்கான முயற்சியைக் குறிக்கும். கிறித்தவர்களின் புனித நூலாகிய விவிலியத்தில் காணப்படாத பல செய்திகளை உள்ளடக்கி, இயேசுவின்மறைந்த வாழ்வுபல விதங்களில் பல நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய புனைவுகளை மைய நீரோட்ட கிறித்தவ சபைகள் உண்மையென ஏற்பதில்லை.
இயேசு பற்றி முக்கியமான இருவகைக் கற்பனைக் கதைகள்
புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்கு நற்செய்தி நூல்களிலும் காணப்படாத செய்திகளைக் கூறுவதற்காக எழுந்த நூல்கள் பண்டைக் காலத்திலிருந்தே தோன்றியுள்ளன. இயேசுவைப் பற்றிக் குறிப்பாக இரண்டு காலக்கட்டங்கள்மர்மமாகஉள்ளன. அவை:
1) இயேசுவின் இளமைப் பருவம்பற்றி நற்செய்திச் செய்திகள் பல உள்ளன. ஆனால் அவர் பன்னிரண்டு வயதில் எருசலேம் கோவிலில் காணாமற்போய், பின்னர் பெற்றோரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களோடு நாசரேத்துக்குப் போய் அங்கே வாழ்ந்துவந்தார் என்று கூறுவதோடு அந்த இளமைப் பருவச் செய்திகள் நின்றுவிடுகின்றன. அதன் பிறகு 18 ஆண்டுகள் கழிந்து, இயேசுவுக்கு 30 வயது ஆனபோது அவர் திருமுழுக்கு யோவானிடம் யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றார் என்றும் தமது பணி வாழ்வைத் தொடங்கினார் என்றும் நற்செய்தி நூல்கள் கூறுகின்றன. அப்படி என்றால், 12 வயதிலிருந்து 30 வயது வரை இயேசு என்ன செய்தார்? தம் பெற்றோரோடு வாழ்ந்து வந்தாரா? என்ன தொழில் செய்தார்? வேறு இடங்களுக்கோ நாடுகளுக்கோ போனாரா? - இக்கேள்விகள் ஒரு தொகுப்பு. இவ்வகையான கேள்விகளுக்குப் பலரும் கற்பனைப் புனைவுகளான பதில்களை வரலாற்றில் கொடுத்துள்ளனர்.
2) இன்னொரு கேள்வித் தொகுப்பும் உள்ளது. அதாவது இயேசு உண்மையிலேயே சிலுவையில் இறந்தாரா? அவர் இறந்திருந்தால் அதன் பின் உயிர்பெற்றெழுந்தாரா? வேறு யாராவது இயேசுவின் இடத்தில் சிலுவையில் இறந்திருந்தால் இயேசுவுக்கு என்ன ஆயிற்று? அதன் பிறகு அவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? என்ன செய்தார்? - இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளும் உள்ளன. இவற்றிற்கும் கற்பனைப் புனைவுகளான பதில்கள் பல காலமாகவே தரப்பட்டுள்ளன.
இயேசுவின் மறைந்த வாழ்வுஎன்று சொல்லும்போது மேலே கூறப்பட்ட முதல் தொகுதிக் கேள்விகளுக்கு என்ன பதில்கள் தரப்பட்டுள்ளன என்று ஆய்வதுதான் நோக்கமே ஒழிய, இரண்டாம் வகைத் தொகுதி சார்ந்த கேள்விகள் அதில் உள்ளடங்கா
பிற்காலப் புனைவுகள்
இயேசு தம் இளமைக் காலத்தில் பிரித்தானியாவுக்குச் சென்றார் என்றொரு புனைவுஆர்த்தர் மன்னன் புனைவுகளில்” (Arthurian legends) உண்டு. இப்புனைவுகள் ஐரோப்பிய நடுக்காலத்தைச் சேர்ந்தவை.
கி.பி. 19-20 நூற்றாண்டுகளில் வேறுசில புனைவுகள் எழுந்தன. அதாவது இயேசு தமது 12ஆம் வயதிற்கும் 30ஆம் வயதிற்கும் இடையே இந்தியாவுக்குப் பயணமாகச் சென்றார் என்றொரு புனைவு; அல்லது யூதேயா பாலைநிலத்தில்எஸ்ஸேனியர்கள்” (Essenes) என்ற துறவியர் கூட்டத்தில் சேர்ந்து பயின்றார் என்று மற்றொரு புனைவு.
இன்று விவிலிய ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்களுள் மிகப் பெரும்பான்மையோர் மேற்கூறிய புனைவுகளுக்கு எந்தவொரு ஆதாரமும் கிடையாது என்று அப்புனைவுகளை ஒதுக்குகின்றனர். இயேசு தம் 12 வயதிலிருந்து 30 வயது வரை என்ன செய்தார் என்பது பற்றி நமக்குத் தெரியவில்லை என்பது மட்டுமே அவர்களுடைய பதிலாக உள்ளது.
இயேசு சிலுவையில் இறக்கவில்லை என்றும், அவருக்குப் பதிலாக வேறொருவரே இறந்தார் என்றும், அந்நிகழ்ச்சிக்குப் பிறகு இயேசு இன்னும் பல ஆண்டுகள் உயிர்வாழ்ந்தார் என்றும் அமைந்த புனைவுளையும் விவிலிய அறிஞர்கள் ஆதாரமற்றவை என்று தள்ளிவிடுகிறார்கள்.
இத்தகைய கதைகள் எல்லாம் வெறும் புனைவுகளே என்றும், அவற்றிற்கு யாதொரு வரலாற்று அடிப்படையும் இல்லை என்றும் அவர்கள் எண்பிக்கிறார்கள்.
இயேசுவின் 18 ஆண்டுகள் மறைந்த வாழ்வில் நடந்தது என்ன?
காணாமற்போன இயேசுவை அவருடைய பெற்றோர் எருசலேம் கோவிலில் கண்டுபிடிக்கிறார்கள். ஓவியர்: ஜேம்சு டிசோ. ஆண்டு: சுமார் 1890. காப்பிடம்: புரூக்ளின் காட்சியகம்
Description: C:\Users\Admin\Desktop\Brooklyn_Museum_-_Jesus_Found_in_the_Temple_(Jesus_retrouvé_dans_le_temple)_-_James_Tissot_-_overall.jpg
இயேசுவின் குழந்தைப் பருவம்குறித்து விரிவான செய்திகளைத் தருகின்ற நற்செய்தி நூல்கள், அவருக்கு 12 வயது நிரம்பியது வரையும்தாம் தகவல்கள் தருகின்றன. அதன் பிறகு அவருக்கு 30 வயது ஆகும் வரையிலான 18 ஆண்டுகள்பற்றி எந்தத் தகவலும் ஆங்கு இல்லை.
இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனதும் என்ன நடந்தது என்பதை மிகச் சுருக்கமாக லூக்கா நற்செய்தி எடுத்துக் கூறுகிறது:
பின்பு இயேசு தம் பெற்றோர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளை யெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்” (லூக்கா 2:51-52)              ”
கிறித்தவ மரபுப்படி, இயேசு தம் பெற்றோரோடு கலிலேயாவில் வாழ்ந்துவந்தார்.[14]அந்தக் காலக்கட்டத்தில் இயேசு என்ன செய்தார் என்பது பற்றி நமக்கு உறுதியாக எதுவும் சொல்ல வரலாற்று அடிப்படி இல்லை என்றுதான் விவிலிய அறிஞர் கூறுகின்றனர்.[4]
யூத சடங்குகள்
யூத சமயத்தில் சிறுவர்கள் தம் சிறுபருவத்தைத் தாண்டி, இளமைப் பருவத்தை எட்டுவது 12 வயதைத் தாண்டும்போது ஆகும். அதிலிருந்து அவர்கள் யூத சமயச் சடங்குகளை நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள். இதற்கான சடங்குபார் மிட்ஸ்வா” (bar mitzvah) என்று அழைக்கப்படுகிறது. அதுபோலவே 30 வயது ஆகும்போது ஓர் ஆண், குருத்துவப் பணி ஆற்றும் வயதை அடைகிறார். இயேசுவின் வாழ்வில் இந்த இரு ஆண்டுகளும் (12, 30) குறிக்கப்படுவது அவருடைய குருத்துவப் பணியைக் காட்டுவதற்காக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.[2]இவ்வாறு இந்த இரு எண்களும் சிறப்புப் பொருள் கொண்டனவாகலாம்.[15]
இயேசு தச்சுத் தொழில் செய்தாரா?
மாற்கு நற்செய்தியில் வரும் ஒரு சிறு பகுதி இயேசுவின் தொழில்பற்றி ஒரு குறிப்பைத் தருகிறது. இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்து சென்று அங்கு தொழுகைக் கூடத்தில் கற்பித்தார். அப்போது மக்கள் அவருடைய பேச்சுத் திறனைக் கண்டு வியப்புற்று,
என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! ”
என்று கூறினார்கள் (மாற்கு 6:2-3)[16]இயேசு தமது பணிக்காலத்தின் தொடக்கத்தில் தச்சுத்தொழில் செய்திருக்கலாம் என்றும் அத்தொழிலில் அவருக்குப் போதிய அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்றும் இதிலிருந்து தெரிகிறது. [16]
மேலும் மத்தேயு நற்செய்தி 13:55இல் இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அவருடைய ஞானத்தையும் பேச்சுத்திறனையும் கண்டு வியந்து கூறியது கீழ்வருமாறு உள்ளது:
அவர்கள், ‘எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா?                ”
என்று கேட்டார்கள்.[17][18]இதிலிருந்து, தச்சுத் தொழில் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பின் தொழிலாக இருந்தது என்றும், இயேசுவும் அத்தொழிலை நன்கு அறிந்தவரே என்றும் ஊகிக்க முடிகிறது.
இயேசுவின் மறைந்த வாழ்வுக் காலத்தில் கலிலேயாவும் யூதேயாவும்
நாசரேத்து சிறிய ஊராக இருந்தாலும் அதை அடுத்து இருந்தசெப்போரிசு” (Sepphoris) என்ற நகரத்தை மீளவும் கட்டி எழுப்பும் பணியில் பேரளவிலான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்று கூறுகின்ற வரலாற்று ஏடுகள் உள்ளன. எனவே, இயேசுவின் இளமைப் பருவத்திலும் அவர் 20-30 வயதினாராக இருந்தபோதும் கட்டடங்களுக்குத் தேவையான மர வேலைகளில் ஈடுபட்டிருந்ததற்கு அடிப்படை உள்ளது என்று பேட்டி என்னும் அறிஞரும் பிற அறிஞர்களும் கூறுகின்றனர்.[19]
எஸ்ஸேனியர் குழுவினரோடு இயேசு பயின்றாரா?
1940-50களில் பாலத்தீனத்தின் சாக்கடல் அருகே சில குகைகளில் பண்டைக்கால ஏட்டுச் சுருள்களின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. தோல், பப்பைரசு போன்ற ஊடகங்களில் எழுதப்பட்ட அந்த ஏட்டுப் பகுதிகள்சாக்கடல் சுருளேடுகள்” (Dead Sea Scrolls) என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஏடுகளில் சில, இயேசு வாழ்ந்த காலத்தைச் சார்ந்த எஸ்ஸேனியர்கள் என்ற யூத குழுவினரின் படைப்பாக்கமாக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இக்குழுவினரிடம் இயேசு ஒரு வேளை கல்வி பயின்றிருக்கக்கூடும் என்றொரு கருத்து உள்ளது. எட்மண்ட் வில்சன் என்பவர் தாம் எழுதிய ஒரு புதினத்தில் இக்கருத்தை முதன்முறையாக 1955இல் வெளியிட்டார்.[20]வேறுசில அறிஞரும் இதே கருத்தை வெளியிட்டனர்.[21]
பரிசேயர் குழுவோடு இயேசு பயின்றாரா?
இன்னும் சில ஆசிரியர்கள் இயேசு அக்கால யூதேயாவில் பெரும்பான்மையினராக வாழ்ந்த பரிசேயர் குழுவினரிடம் கல்வியறிவு பெற்றிருக்கலாம் என்று நினைக்கின்றனர். அதற்கு அவர்கள் தருகின்ற விளக்கம் என்னவென்றால், ஏறக்குறைய இயேசுவுக்கு சமகாலத்து வரலாற்றாசிரியரான பிளாவியுஸ் ஜோசேஃபஸ் என்பவர் பரிசேயர், சதுசேயர், எஸ்ஸேனியர் ஆகிய மூன்று குழுக்களைச் சார்ந்தவர்களிடமும் கல்வி பயின்றார். இயேசு பரிசேயர்களின் இயக்கத்தை நன்கு அறிந்திருந்தார். தம் பணிக்காலத்தில் பரிசேயரோடு பல முறை விவாதங்களில் ஈடுபட்டார். எனவே அவர் கல்வி பெற்ற நாள்களில் பரிசேயரைப் பற்றி அவர் பலவற்றைத் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறுவர்.[22]
இயேசுவின் மறைந்த வாழ்வை விளக்குகின்ற பிற மூலங்கள்
கிறித்தவ திருச்சபைகள் அதிகாரப்பூர்வமான நற்செய்தி நூல்களாக ஏற்பவை நான்கு மட்டுமே. அவை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவை ஆகும். இவை தவிர கி.பி. முதல் நூற்றாண்டுகளில் இயேசுவின் போதனை மற்றும் வாழ்க்கை பற்றி எடுத்துக் கூறுகின்ற வேறுசில நுல்களும் எழுந்தன. அவற்றைக் கிறித்தவ திருச்சபைகள் அதிகாரப்பூர்வமானவை என்று ஏற்பதில்லை. இவைபுற நூல்கள்” (apocrypha) என்று அழைக்கப்படுகின்றன. ஏற்கப்பட்ட நான்கு நற்செய்திகளிலும் இயேசு 12 வயதுமுதல் 30ஆம் வயதுவரை என்ன செய்தார் என்பது பதிவுசெய்யப்படாததால், அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில்புற நூல்கள்பல புனைவுகளை உருவாக்கின.[23]
இளமைப் பருவத்தில் இயேசு பிரித்தானியாவுக்குச் சென்றாரா?
இயேசு தம் இளமைப் பருவத்தில் பிரித்தானியாவுக்குச் சென்றார் என்று சில புனைவுகள் எழுந்தன. அவை தரும் தகவல்கள் தமக்குள் வேறுபடுகின்றன. ஒரு கதை இயேசு பிரித்தானிய சென்றதை நற்செய்திகளில் வருகின்ற அரிமத்தியா யோசேப்பு என்பவரோடு தொடர்பு படுத்துகின்றது.இயேசு சிலுவையில் இறந்ததும் அவருடைய உடலைப் பிலாத்துவின் அனுமதியோடு ஒரு கல்லறையில் அடக்கம் செய்தவர்தான் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர். இத்தகவல் மத்தேயு 27:57-61, மாற்கு 15:42-47, லூக்கா 23:30-35, யோவான் 19:38-42 ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.

இந்த அரிமத்தியா யோசேப்பு என்பவர், இயேசு சிலுவையில் தொங்கியபோது சிந்திய இரத்தத்தை ஒரு கிண்ணத்தில் பிடித்தாராம். அந்தக் கிண்ணத்தை ஒருசிலரிடம் கொடுத்துப் பிரித்தானியாவுக்கு அனுப்பிவைத்தாராம். இவ்வாறு பிரித்தானியா சென்ற இக்கிண்ணம் 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானி யாவில் எழுந்த ஆர்த்தர் மன்னன் புனை கதைகளோடு (Arthurian cycle) தொடர்புபடுத்தப்பட்டது.
இயேசு தம் இளமைப் பருவத்தில் பிரித்தானியாவுக்குச் சென்றதாகக் கூறும் இப்புனை கதைப்படி, இயேசு மெண்டிப் பகுதியில் ப்ரிடி என்னும் இடத்தில் வாழ்ந்தாராம். அன்கு கிளாஸ்டன்பரி என்னும் இடத்தில் ஒரு குடிசை கட்டி அங்குத் தங்கியிருந்தாரம். இக்கதையை உள்ளடக்கி, வில்லியம் பிளேக் என்ற 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிஞர் ஒரு கவிதை எழுதினார்.
இக்கதையின் மற்றொரு பாடம் இவ்வாறு உள்ளது: யோசேப்பு என்ற பெயருடைய ஒரு தகர வியாபாரி இருந்தாராம். இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பின் மரணத்திற்குப் பிறகு அந்த யோசேப்பு என்பவர் சிறுவன் இயேசுவைத் தம் பாதுகாப்பில் வைத்திருந்தாராம். இவ்வாறு இயேசுவின் பிரித்தானியப் பயணம் புனை கதையில் உறுதி பெற்றது.
வேறு சிலர், இயேசு பிரித்தானியாவுக்குச் சென்று அங்கு, ”த்ரூயிட்” (Druids) என்ற துறவியர் குழுவிடம் கல்வி பயின்றார் என்று புனை கதைகள் எழுதினார்கள்.
சிலுவையில் அறையப்படுமுன் இயேசு இந்தியா சென்றார் என்னும் புனைவு
லூயி ஜாக்கோலியோ, 1869
லூயி ஜாக்கோலியோ என்பவர் (Jacolliot) 1869இல் இயேசுவின் வாழ்க்கை பற்றி La Bible dans l'Inde, Vie de Iezeus Christna என்றொரு நூலைப் பிரஞ்சு மொழியில் எழுதினார். அந்நூலில் அவர் இயேசு இந்தியாவுக்குச் சென்றார் என்று வெளிப்படையாகக் கூறாவிடினும், இயேசு இந்தியாவுக்குச் சென்றிருக்கக்கூடும் என்ற தம் ஊகத்தைத் தெரிவித்தார்.
ஜாக்கோலியோ இயேசுவின் வரலாற்று நிகழ்ச்சிகளையும் கிருஷ்ணரின் வரலாற்று நிகழ்ச்சிகளையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த இரு வரலாறுகளிலும் வருகின்ற நிகழ்ச்சிகளுக்கிடையே மிகப் பெரும் ஒற்றுமை உள்ளதை அவர் கண்டார். அதிலிருந்து ஜாக்கோலியோ கீழ்வரும் முடிவுக்கு வந்தார்: அதாவது, கிருஷ்ணரின் வராலாறு என்பது ஒரு புனைகதை அல்ல. அக்கதையையின் அடிப்படையில் இயேசு பற்றிய கதையும் உருவானது.
மேற்கூறிய கருத்து ஏற்கத்தகாதது என்று அறிஞர் முடிவுசெய்கின்றனர். முதன்முதலில்கிறிஸ்துஎன்ற பெயர்கிறிஸ்த்ணா” (Christna) என்ற பெயரின் திரிபு என்று ஜாக்கோலியோ கூறுவது தவறு என்றும், அவர் Krishna என்ற பெயரைத் தம் விருப்பம்போல் மாற்றியுள்ளார் என்றும் தெரிகிறது. மேலும் அவர், “கிறிஸ்த்ணாவைஅவருடைய சீடர்கள்இயேசேயுஸ்” (Jezeus) என்று அழைத்ததாகவும் அதற்குதூய்மையே உருவானவர்என்று பொருள் என்றும் கூறுகிறார்.இதை மறுத்து, மாக்ஸ் முல்லர் என்னும் சமசுக்கிருத அறிஞர்இயேசேயுஸ்என்ற சொல் சமசுக்கிருத மொழியிலேயே இல்லை என்றும், அச்சொல்லை ஜாக்கோலியோ தம் சொந்த விருப்பப்படி உருவாக்கிக்கொண்டார் என்றும் நிரூபித்துள்ளார்.  மேலும், கிருஷ்ணர் வாழ்ந்ததாகக் கூறப்படும் காலமும், இயேசுவின் காலமும் ஒன்றன்று.
நிக்கோலாசு நோட்டோவிச், 1887
நிக்கோலாசு நோட்டோவிச் (Nicolas Notovich) என்பவர் உருசிய நாட்டவர். 1887இல் அவர் போர்ச் செய்திகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பும் பணியைச் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் ஜம்மு-காஷ்மீரில் உள்ள லடாக் பகுதில் அமைந்துள்ள ஹேமிஸ் (Hemis Monastery) என்ற திபெத்திய-புத்த மடத்தில்மனிதருள் மாமனிதர்:புனித இஸ்ஸாவின் வரலாறு” (Life of Saint Issa, Best of the Sons of Men) என்ற பழைய ஏடு ஒன்றினைக் கண்டுபிடித்ததாகவும் அதில் இயேசுவின் வாழ்க்கை பற்றி அரிய செய்திகள் அடங்கியிருந்ததாகவும் உலகுக்கு அறிவித்தார். “ஈசாஎன்பது அரபி மொழியில் இயேசுவைக் குறிக்கும் சொல்.
நோட்டோவிச் தாம் லடாக் பகுதியின் திபெத்திய-புத்த மடத்தில் கண்டுபிடித்ததாகக் கூறிய பழைய ஏட்டின் மொழிபெயர்ப்பு என்று கூறி பிரஞ்சு மொழியில் La vie inconnue de Jesus Christ (ஆங்கிலம்: Unknown Life of Jesus Christ) என்ற நூலை 1894இல் வெளியிட்டு, அதில் அவர் அந்த ஏட்டை எவ்வாறு கண்டிபிடித்தார் என்பதையும்உண்மையான வரலாற்று நிகழ்ச்சியாகஎடுத்துரைத்தார்.
நோட்டோவிச் வெளியிட்ட நூலும் அதில் அவர் தாமாகவே திபெத்திய-புத்த மடத்தில் கண்டுடித்ததாகக் கூறியபழைய ஏடுபற்றிய செய்தியும் பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. அந்நூலை வாசித்த இந்தியவியல் அறிஞரான மாக்ஸ் முல்லர் உடனடியாக அதற்கு மறுப்புத் தெரிவித்தார். அதாவது, முல்லர் கருத்துப்படி, ஒன்றில் லடாக் புத்த மடத்துத் துறவிகள் நோட்டோவிச்சை ஏமாற்றியிருக்க வேண்டும் அல்லது நோட்டோவிச் தாமே இயேசு பற்றி ஒரு கதை புனைந்திருக்க வேண்டும்[33][34]
நோட்டோவிச் நுலின் சுருக்கம் இது: இயேசுவின் வரலாறு இசுரயேல் மக்கள் எகிப்துக்குச் சென்றதிலிருந்து தொடங்குகிறது. அவர்களை மோசே எகிப்திய அடிமைத் தளையினின்று விடுவித்தார். பின்னர் உரோமையர் அவர்கள்மேல் வெற்றிகொண்டு அவர்களுடைய நிலத்தை ஆக்கிரமித்தார்கள். அக்காலக் கட்டத்தில் இயேசு பிறந்தார். 12 வயதுவரை தம் பெற்றோரோடு வாழ்ந்த இயேசு, 13 வயதில் ஒரு வர்த்தகக் குழுவினரோடு சேர்ந்து கவுதம புத்தரின் போதனைகளை அறிந்துகொள்ளும் பொருட்டு இந்தியாவின் சிந்து பகுதிக்கு வந்தார். முதலில் அவர் சமணத் துறவிகளைச் சந்தித்தார். அக்காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த மகத பேரரசின் நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்றார் என்றின்றனர். ஏனெனில் அக்காலகட்டத்தில் உலகின் பல பகுதியில் இருந்து இந்தியாவிற்கு வந்து பயிற்றனர். இந்தியா ஒரு பெரிய ஆன்மிக மற்றும் அறிவி சார்ந்த கல்வியை தந்திருந்தது. மேலும் இந்த நாளந்தா பல்கலைக்கழகம் தான் உலகின் முதல் மற்றும் மிகப் பெரிய கல்வி மையமாக செயல்பட்டது. மேலும் பிற்காலத்தில் இங்கு சமண கல்வி சேர்ந்தே பயிற்று வித்தனர் புத்தரின் பல கொள்கைகளை அடிப்படையாக வைத்தே கிறிஸ்து தன் போதனைகளை செய்திருக்கின்றார் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. இயேசு இங்கு பாளி மொழி கற்று, பவுத்த துறவிகளோடு 6 ஆண்டுகள் பயின்றார். தொடர்ந்து 6 ஆண்டுகள் இயேசு இந்தியாவின் பல புண்ணியத் தலங்களைச் சந்தித்து அங்கு பயிற்றுவித்தார். தமது 29ஆம் வயதில் அவர் தம் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று அங்கு போதிக்கலானார். பின்னர் அவர் எருசலேம் நகருக்குச் சென்றார். ஆனால் உரோமை ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து, மற்றும் யூத மதத்தலைவர்கள் இயேசுவைக் கலகக்காரராகப் பார்த்தார்கள். அவர் தம்மைக்கடவுளின் மகன்என்று கூறியதாகக் காட்டி, அவர் இறைநிந்தை செய்ததாகக் குற்றம் சாட்டி, அவரைக் கைதுசெய்து அவரைக் கொன்றுபோட்டார்கள். அவரைப் பின்பற்றியவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அவருடைய சீடர்கள் அவருடைய போதனைகளை எல்லா இடங்களுக்கும் சென்று பரப்பினார்கள்.
நோட்டோவிச், இயேசு பற்றிய மேற்கூறிய செய்திகளை லடாக் பகுதி புத்த மடத்தில் கண்டுபிடித்த ஏட்டிலிருந்தும் புத்த துறவிகளிடமிருந்தும் பெற்றதாகக் கூறியது உண்மைதானா என்று அறிய பல ஆய்வாளர்கள் முனைந்தனர். அவர்களுள் ஒருவர் மாக்ஸ் முல்லர். அவர் லடாக்கின் ஹேமிஸ் புத்த மடத்தின் தலைவருக்குக் கடிதம் எழுதி, நோட்டோவிச் பற்றியும் அவர் கண்டெடுத்ததாகக் கூறிய ஏடுபற்றியும் விசாரித்தார். அதற்கு மடத் தலைவர், தாம் பொறுப்பேற்று பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன என்றும், அக்காலக் கட்டத்தில் வெளிநாட்டைச் சார்ந்த எவரும் தங்கள் மடத்திற்கு வந்ததில்லை என்றும், நோட்டோவிச் குறிப்பிட்டஇயேசு பற்றிய பழைய ஏடுதம் மடத்தில் கிடையாது என்றும் பதில் எழுதினார்.
ஆர்ச்சிபால்டு டக்ளஸ் (J. Archibald Douglas) என்ற மற்றொரு ஆய்வாளரும் ஹேமிஸ் இதுபற்றிய ஆய்வில் இறங்கினார். அவர். நேரடியா அந்த மடத்திற்கே சென்று தலைமைத் துறவியைச் சந்தித்து உரையாடியானார். அப்போதும் அத்துறவி மாக்ஸ் முல்லருக்குக் கடிதத்தில் எழுதியதையே டக்ளசிடமும் எடுத்துக் கூறினார். அதாவது நோட்டோவிச் ஒருபோதும் லடாக் புத்தமடத்திற்குச் சென்றதில்லை.
நோட்டோவிச் சொன்ன அனைத்துமே கட்டுக்கதை என்பது தெளிவாயிற்று. இந்தியவியல் அறிஞர் லியோப்போல்டு ஃபோன் ஷ்ரேடர் (Leopold von Schroeder) என்பவர் நோட்டோவிச் கூறியதுமாபெரும் புளுகு” (big fat lie) என்று வர்ணித்தார். வில்கெல்ம் ஷ்னேமெல்கெர் (Wilhelm Schneemelcher என்பவரும் அவ்வாறே கூறியுள்ளார்.
நோட்டோவிச் வேண்டுமெனறே கதை எடுத்துக்கட்டி, தம் நூலில் உண்மைபோல் வெளியிட்டதை அறிஞர்கள் வெளிச்சமிட்டுக் காட்டிய பிறகும், அவர் முதலில் தாம் சொன்னது உண்மையே என்று கூறினார்.
ஆனால் வரலாற்றாளர்கள் நோட்டோவிச்சின் கதை கட்டுக்கதையே என்று காட்டிய சிறிது காலத்துக்குப் பின்பு நோட்டோவிச் தம் நூலுக்கான ஆதாரங்கள் போலி என்று ஒத்துக்கொண்டார்.
லடாக் புத்த மடத்தில் இயேசு பற்றிய ஆவணத்தை நோட்டோவிச் கண்டெடுத்தார் என்பது முற்றிலும் பொய் என்றும், அத்தகைய ஆவணம் ஒன்று அங்கு கிடையாது என்றும் எல்லா அறிஞர்களும் ஒத்துக்கொள்கின்றனர். தமது போலிக் கதையை வெளியிட்டு அவர் பெரும் செல்வம் சேர்த்தார். பிரபலியமும் அடைந்தார்என்று பார்ட் ஏர்மான் (Bart D. Ehrman) என்ற அறிஞர் கூறுகிறார்.
லேவி எச். டவுலிங், 1908
இவர் 1908இல்இயேசு கிறித்து பற்றிய கும்ப கால நற்செய்தி” (Aquarian Gospel of Jesus the Christ என்றொரு நூலை வெளியிட்டார். அந்நூலில் டவுலிங்குக்கு வானவெளியிலிருந்து வழங்கப்பட்ட ஏடுகளில் இயேசு பற்றி எழுதப்பட்டிருந்தவை அடங்கியிருந்தன என்று அவர் கூறினார். குறிப்பாக, இயேசு தம் 12 வயதிலிருந்து 30 வயது வரை எந்தெந்த இடங்களுக்குப் பயணம் செய்து, கல்வி பயின்று, போதித்தார் என்பது தமக்கு வெளிப்படுத்தப் பட்டதாக அவர் கூறினார். மேலும் இயேசு தம் இளமைப் பருவத்தில் இந்தியா, திபெத்து, பெர்சியா, அசீரியா, கிரீசு, எகிப்து ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று அங்கு கல்வியறிவு பெற்றார் என்றும் அங்கிருந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார் என்றும் டவுலிங் தம் நூலில் கூறுகிறார்.
டவுலிங் எழுதிய நூலில் உள்ள சில கருத்துகளை எடுத்து, அவற்றை அகமதியா கருத்துகளோடும் பிற சமய இயக்கங்களின் கருத்துகளோடும் இணைத்து ஹோல்கர் கெர்ஸ்டென் (Holger Kersten) என்பவர் இயேசு பற்றிப் புதியதொரு பார்வையை முன்வைத்தார்.
மேற்கூறிய எதனையும் விவிலிய அறிஞர்கள் ஏற்கவில்லை

இயேசு தம் இளமைப் பருவத்தில் இந்தியா, திபெத்து போன்ற தூர இடங்களுக்குச் சென்று கல்வி பயின்றார் என்றும் அங்கு போதித்தார் என்றும் கூறுவதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடையாது என்று விவிலிய அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே, விவிலிய அறிஞர்கள், மேலே கூறிய ஜாக்கோலியோ, நோட்டோவிச், டவுலிங் போன்றோர் இயேசு இந்தியாவுக்குச் சென்றார் அல்லது வேறு நாடுகளுக்குப் போனார் என்று கூறுவது வெறும் கற்பனையே என்ற முடிவுக்கு வருகின்றனர். இதற்கு எடுத்துகாட்டாக, கீழ்வரும் ஆசிரியர்களைக் குறிப்பிடலாம்: இராபர்ட் ஃபான் ஃபூர்ஸ்ட், மாற்கஸ் போர்க்[9]ஜான் டோமினிக் க்ரோசான் [, லெஸ்லி ஹூல்டென். [40], பவுலா ஃப்ரெட்ரிக்சென்.
சிலுவையில் உயிர்துறக்காமல் இயேசு செலவிட்ட ஆண்டுகள்பற்றிய புனைவுகள்
சில நூலாசிரியர்கள் இயேசுவின் வரலாற்றைக் கூறும்போது, இயேசு சிலுவையில் அறையப்பட்டது, உயிர்துறந்தது போன்ற பொருள்கள் பற்றியும், அவர் சிலுவையில் உயிர்துறக்கவில்லை என்றால் பின்னர் வேறு எங்காவது சென்றாரா என்பது பற்றியும் பல புனைகதைகளை உருவாக்கியுள்ளனர்.
சிலர் இயேசு உண்மையிலேயே சிலுவையில் அறையப்படவில்லை என்கின்றனர். வேறு சிலர் அவர் சிலுவையில் அறையப்பட்டாலும் உயிர் துறக்கவில்லை என்கின்றனர். அதன் பிறகு அவர் இயற்கை மரணம் எய்துமுன் அவர் காஷ்மீர் சென்றார் என்றொரு கருத்தும், உரோமை சென்றார் என்றொரு கருத்தும், யூதேயாவின் மசாதா முற்றுகையின்போது அங்கு சென்றார் என்றொரு கருத்தும் வெளியிடப்பட்டுள்ளன.
திருக்குரான் கருத்து
குரான் 4:157-158 பகுதியின் அடிப்படையில் பெரும்பான்மையான முசுலிம்கள் இயேசு உண்மையிலேயே சிலுவையில் அறையப்படவில்லை என்கின்றனர். வேறொருவரை கடவுள் இயேசுபோல் தோற்றமளிக்கச் செய்தார் என்றும், அந்த மனிதரையே சிலுவையில் அறைந்தார்கள் என்பதும் அவர்கள் கருத்து. அவ்வாறு உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டவர் யூதாசாகவோ சிரேன் ஊர் சீமோனாகவோ இருந்திருக்கலாம். மேலும், இயேசு கடவுளின் வல்லமையால் நேரடியாக விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும், அவர் மீண்டும் வருவாரென்றும் முசுலிம்கள் நம்புகின்றனர்.[42]
மிர்சா குலாம் அகமத், 1899
இசுலாம் சமயத்தின் பிரிவான அகமதியா இயக்கத்தைத் தோற்றுவித்தவர் மிர்சா குலாம் அஹ்மத். முசுலிம்கள் பொதுவாகத் திருக்குரானின் பகுதிகள் என்று ஏற்பனவற்றிற்கும் மேலதிகமான சில பகுதிகளையும் அகமதியா இயக்கத்தினர் திருக்குரானாகவே கருதுகின்றனர். அதன்படி, இயேசு காஷ்மீர் சென்றார் என்றும், அங்கு நூற்று இருபது வயதில் இறந்தார் என்றும் உளதாம். காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 1747இல் இசுலாம் சமயத்து சுபி புலவர்களுள் ஒருவரான குவாஜா முகம்மது ஆசாம் திதமாரி என்பவர்காஷ்மீரின் வரலாறுஎன்றொரு நூல் எழுதினார். அதில் அவர், “வெளிநாட்டைச் சேர்ந்த ஓர் இறைவாக்கினர்” “யூஸ் ஆசாஃப்என்னும் பெயர் குறிப்பிட்ட கல்லறையில் காஷ்மீரின் சிறிநகரில் உள்ள ரோசா பால் என்னும் திருத்தலத்தில் கல்லறையில் வைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார். அக்கல்லறை இயேசுவின் கல்லறைதான் என்றொரு புனைவு வரலாறு எழுந்தது. அதாவது, “யூஸ் ஆசாஃப்என்பதுஇயேசுதான் என்ற கருத்து எழுந்தது. ஆனால் இக்கருத்துக்கு வரலாற்று அடிப்படை இல்லை என்றும், இது ஒரு கட்டுக்கதை என்றும் பவுல் பாப்பாஸ் என்னும் அறிஞர் எழுதுகிறார்.[44]
மேகர் பாபா (1894-1969)
இந்திய ஆன்மிகவாதியான மேகர் பாபா (Meher Baba) என்பவரும் இயேசுவின் இறுதி நாட்கள்பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்துப்படி, இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது உண்மையிலேயே இறக்கவில்லையாம். மாறாக, நிர்விகல்ப சமாதி நிலையை அடைந்தாராம். அதாவது சாதாரண நினைவு நிலையைக் கடந்து கடவுளோடு ஐக்கியமானாராம். மூன்று நாள்களுக்குப் பின் மீண்டும் நினைவு நிலைக்குத் திரும்பினாராம். பிறகு இயேசு தம் சீடர்களான பர்த்தலமேயு, யூதா போன்ற சிலரோடு தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் இரகசியமாகக் கிழக்கு நோக்கிப் புறப்பட்டாரம். இதுவேஇயேசுவின் உயிர்த்தெழுதல்என்று அழைக்கப்படுகிறது என்று மேகர் பாபா கூறுகிறார். மேலும் அவர் கூற்றுப்படி, இயேசு இரகசியமாக இந்தியா வந்தபின் மேலும் கிழக்கு நோக்கிச் சென்று பர்மாவின் ரங்கூன் சென்று அங்கு சிறிதுகாலம் தங்கியிருந்தார். பின் வடக்காகச் சென்று காஷ்மீர் போய் அங்கே நிலையாகத் தங்கினார் இயேசு என்று மேகர் பாபா கூறுகிறார். இயேசு தம் ஆன்மிகப் பணி முடிவடைந்ததும் தம் உடலை விட்டுச் சென்றாராம். பன்னிரு திருத்தூதர்களும் இயேசுவின் உடலைக் காஷ்மீரின் கான் யார் மாவட்டத்தில் ஹார்வான் என்ற இடத்தில் அடக்கம் செய்தார்களாம். இயேசு பற்றி மேகர் பாபா புனைந்த இக்கதையை சுவாமி அபேனாந்தா, சங்கராச்சாரியார், சத்ய சாயி பாபா போன்றோரும் வேறு சிலரும் ஏற்கின்றனர்.
ஹோல்கர் கெர்ஸ்ட்டன், 1981
1981ஆம் ஆண்டு ஹோல்கெர் கெர்ஸ்டன் என்னும் செருமானிய எழுத்தாளர்இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்என்ற நூலில் தம் கருத்தைத் தெரிவித்தார். அவருடைய கருத்து புதிதன்று. மாறாக, ஏற்கெனவே நோட்டோவிச், மேகர் பாபா போன்றவர்கள் கூறியவற்றைச் சற்றே விரித்து அவர் இயேசுவின் மறைந்த வாழ்வைக் கதையாகப் புனைந்துள்ளார். அதைக் குந்தெர் க்ரேன்போல்ட் என்பவர் தமதுஇந்தியாவில் இயேசு என்னும் கட்டுக்கதைக்கு முற்றுப்புள்ளி” (Jesus in Indien. Das Ende einer Legende (Munich, 1985)) என்னும் நூலில் ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். வில்ஹெல்ம் ஷ்னேமெல்கெர் என்பவரும் மறுப்பு அளித்துள்ளார்.[11]இக்கதைக்கு அடித்தளம் இல்லை என்பதே அறிஞர் கருத்து. ஜெரால்டு ஒகாலின்சு (Gerald O'Collins) என்னும் அறிஞர் கூற்றுப்படி, கெர்ஸ்டன் புனைந்த கதை ஒரு ஏமாற்று வித்தை.
வேறுசில…
இயேசு பற்றி மேலே விளக்கப்பட்ட புனைவுகள் தவிர வேறுசில கதைகளும் உருவாக்கப் பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பார்பரா தீரிங் (Barbara Thiering) என்பவர் தாம் 1992இல் எழுதிய Jesus the Man என்ற நூலில் கீழ்வரும் புனைவைத் தருகிறார்: அதாவது, சிலுவையில் இயேசுவும் யூதாசு இஸ்காரியோத்தும் அறையப்பட்டனராம். யூதாஸ் இறந்துபோக, இயேசு சிலுவையில் உயிர்நீக்கவில்லை. பின் அவர் மகதலா மரியாவை மணந்து கொண்டாராம். மத்தியதரைக் கடல் பகுதிகளில் பயணம் செய்தாராம் உரோமையில் இறந்தாராம்.
1995இல் கென்னத் ஹோஸ்கிங் என்பவரும் இயேசு சிலுவையில் அறையப்பட்டாலும் உயிர் துறக்கவில்லை என்று கூறுகிறார். சாக்கடல் சுவடிகள் குறிக்கின்றநீதி ஆசிரியர்என்பவர் இயேசுவே என்கிறார் அவர். அவர் கருத்துப்படி, இயேசு உரோமையருக்கு எதிராக நிகழ்ந்த போரில் (கி.பி. 73-73) யூதர்களின் படைக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு இறந்தாராம்.
விவிலிய மர்மங்கள்” (Mysteries of the Bible) என்ற தலைப்பில் 1996இல் உருவாக்கப்பட்ட செய்திப் படத்தில் இயேசு இந்தியா சென்றார் என்ற கருத்தைப் பற்றிய நேர்காணலில் பல அறிஞர்கள் பங்கேற்றனர்.
எட்வர்டு டி. மார்ட்டின் என்பவர் 2008இல் King of Travelers: Jesus' Lost Years in India என்றொரு நூல் எழுதினார். அது Jesus in India என்ற பெயரில் 2008 இல் திரைப்படமாக்கப்பட்டது.
இயேசு பற்றிய மற்றொரு புனைவு Lamb: The Gospel According to Biff, Christ's Childhood Pal என்ற தலைப்பில் கிறிஸ்தோபர் மூர் என்பவரால் வெளியிடப்பட்டது. அப்புதினத்தில் ஆசிரியர், இயேசுவுக்கு மிக நெருக்கமான சிறுவயது நண்பராக பிஃப் (Biff) இருந்ததாகவும், அந்த நண்பரே இயேசுவின் கதையை எடுத்துக்கூறுவதாகவும் கற்பனை செய்துள்ளார். இயேசு இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்றதாக பிஃப் என்னும் நண்பர் கூறுவதாக நூலாசிரியர் கூறியுள்ளார்.

ஆக. இயேசுவும் கிருஸ்த்துவ மதமும் மர்மங்கள் நிறைந்த ஒன்றாகவே இன்றுவரை இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றன. இயேசுவின் வாழ்க்கை வரலாறு முழுமையாக வெளிப்பட்டால் ஒழிய இந்த மர்மங்கள் முடிச்சி அவிழ்க்கப்படாமலேயே இருக்கும்.