10 நவம்பர், 2016

மக்களை ஏமாற்றும் மத்திய அரசு

புழக்கத்திற்கு வரும் முன்பே கத்தைகத்தையாக புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: தஞ்சையில் பரபரப்பு
தஞ்சாவூரில் இரு வேறு இடங்களில் 9-11-2016 புதன்கிழமை இரவு தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில்                  ரூ. 8.23 கோடி சிக்கியது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ரூ. 7.20 கோடி மதிப்பில் புதிய ரூ. 2,000 நோட்டுகளும், ரூ. 65,000 மதிப்புள்ள பழைய ரூ. 100 நோட்டுகளும் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரிலிலிருந்து தஞ்சாவூர் கிளைக்குக் கொண்டு செல்வது தெரிய வந்தது. ஆனால், அதற்கான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வண்டியின் பதிவு எண், கொண்டு வரப்பட்ட வேனின் பதிவு எண்ணோடு வித்தியாசப்பட்டது.
(Thanks : Dinamani-10-11-2016)

ஏற்கனவே தேவையான அளவு 2000 மற்றும் 500 ரூபாய் புதிய நோட்டுக்களை அடித்து மாற்றிக் கொண்டு விட்டார்கள் அரசியல்வாதிகள் இப்போது மக்களின் கண்ணை துடைப்பதற்குத்தான் இவ்வளவு அவசர பணபரிமாற்றம் மற்றபடி இதில் சிக்குவது என்பது சாதாரண மக்களும் சிறு வியாபாரிகளும் முதலாளிகளும்தானே ஒழிய அரசியல்வாதிகள் பெருமுதலாளிகள் அல்ல இதற்கு தகுந்த சான்று மிகவிரைவில் தெரியும், இன்னும் 6 மாதத்திற்குள் மத்திய அரசு முழுமையாக கருப்பு பணத்தை முழுமையாக ஒழித்ததாக அறிக்கை வெளியிடும் பொருத்திருந்து பாருங்கள்.