01 ஆகஸ்ட், 2015

பிரம காயத்ரி

சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் வரிசையில் "பிரம காயத்ரி” மந்திரத்தினையும் அவற்றினைப் பயன்படும் வழிமுறைகளையும் இன்றைய பதிவில் காண்போம். இந்த தகவல்கள் அகத்தியரின் “அகத்தியர் 12000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.


பிரம காயத்ரி
"ஓம் அங்உங் மகா லம்வம் நசிமசி பிர்மதேவாய சுவாகா"


இந்த பிரம காயத்ரியை செபிப்பவர்களுக்கு சகல கலைகளில் தேர்ச்சியும் அட்டாங்க சித்தியும் கிடைக்கும் என்கிறார்அகத்தியர்.
எல்லாம் சரிதான்! இந்தக் காயத்ரி மந்திரங்களை எவ்வாறு செபிப்பது?

அதனையும் அகத்தியர் தனது நூலில் பின்வருமாறு விவரித்திருக்கிறார்.

தினந்தோறு மவுனமதால் தியானஞ்செய்ய
திறமான ரகசியமா மந்திரந்தன்னை
ஓதுவது நூத்தெட்டு உருவேதானும்
அய்யனே மண்டலம்தான் சொல்லக்கேளு
கூவிமன மசையாமல் மவுனமாக
கூர்மையுடன் னந்திசந்தி உருசெய்யே


இந்த இரகசிய காயத்ரி மந்திரங்களை தினமும் அந்தி சந்தி வேளைகளில் நூற்றியெட்டு தடவைகள் வீதம் ஒரு மண்டலத்திற்கு செபிக்க வேண்டும் என்கிறார். முக்கியமாக இந்த மந்திரங்களை உதடுகள் அசையாமல் உள்ளுக்குள் செபிக்க வேண்டும் என்கிறார். அவர் மேலும் ஒரு காயத்ரி மந்திரத்தினை ஒரு மண்டலகாலம் செபித்து முடித்தபின்னரே மற்றைய காயத்ரி மந்திரத்தினை செபிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் பற்றிய தொடர் இத்துடன் தற்காலிகமாய் நிறைவுற்றது. பிரிதொரு தருணத்தில் சித்தர் பெருமக்கள் அருளிய மற்ற பிற காயத்ரி மந்திரங்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.