16 செப்டம்பர், 2013

எச்.ஐ.வி தொற்றுக்கு புதிய மருந்து விரைவில்...

அமெரிக்க ஆய்வாளர்கள் எச்.ஐ.வி தொற்றை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த எஸ்.ஐ. வி தொற்றை முற்றிலுமாக அழிக்க ஒரு புதிய மருந்தினை கண்டுப்பிடித்துள்ளனர். 

அமெரிக்காவில் உள்ள ஆய்வாளர்கள் குரங்குகளை பாதிக்கும் எச்.ஐ.வி போன்ற எஸ். ஐ, வி தொற்றை முற்றிலுமாக அழிக்க ஒரு புதிய மருந்தினை கண்டுப்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த மருந்து அளிக்கப்பட்ட 16 குரங்குகளில் 9 குரங்குகளின் உடலில் இருந்து இந்த எஸ்.ஐ.வி தொற்று முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது
.
நேச்சர் ஜர்னலில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் லூயிஸ் பிக்கர் தெரிவித்தபோது, எங்களின் ஆய்வில் நாங்கள் உபயோகப்படுத்திய மருந்தை செலுத்தியப்போது, சில செல்களை நாங்கள் தவறுதலாக விட்டிருக்கலாம், ஆனால், இந்த மருந்து குரங்குகளின் உடலில் ஒரு செல்லில் கூட அந்த தொற்று இல்லாதவாறு செயல்பட்டது எனக் கூறியுள்ளார்.

இந்த மருந்து முதற்கட்ட சோதனைக்கு பின்னர் மனிதர்களின் உடலில் செலுத்தப்பட்டு எச்.ஐ.வி தொற்றினை எவ்வாறு அழிக்கிறது என்பது அராயப்படுமென தெரிகிறது. 

தற்போது அமெரிக்க ஆய்வாளர்கள் மருந்து கண்டுப்பிடித்தது எச்.ஐ.வி தொற்றை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த தொற்றுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.