16 செப்டம்பர், 2013

4411 மீட்டர் உயரத்தில் விமான நிலையம்

உலகின் மிக உயரமான இடத்தில் கட்டப்பட்டுள்ள விமான நிலையம், சீனாவில் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபெத்தில், ஏற்கனவே, ஐந்து விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது, திபெத்தில் டாவுசெங் யாடிங் என்ற இடத்தில், கடல் மட்டத்திலிருந்து 4411 மீட்டர் உயரத்தில் புதிய விமான நிலையம், கட்டப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில், இந்த விமான நிலையம் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள விமான நிலையம் என்ற பெருமையை இந்த விமான நிலையம் பெறவுள்ளது.

இதனிடையே, அதே பகுதியில் 3,780 மீட்டர் உயரத்தில் மற்றொரு புதிய விமான நிலையம் அமைக்க, சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக, 76,000 சதுர கிலோ மீட்டர் இடம் தேர்வு செய்யப்பட்டு, முழு வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது.