15 ஜூலை, 2013

ஊழியர்கள் சும்மா வாம்

ஒரு மென்பொருள் கம்பனியின் உரிமையாளர் நிர்வாணமாகப் பணிபுரிய பெண் ஊழியர்கள் தேவை எனக் கேட்டு விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கிறிஸ்டேலர் என்ற 63 வயது முதலாளியே வெப்கோடர்ஸ் மற்றும் விற்பனை நிறைவேற்று அதிகாரிகள் பதவிகளில் பணியாற்ற ஆள் தேவை எனக் கேட்டு விளம்பரம் செய்துள்ளார்.

சம்பளமாக வருடாந்தம் 24000 பவுண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கம்பனியின் பெயர் “நியுட் ஹவுஸ்” அதாவது நிர்வாண இல்லம் என்பதாகும்.

உலகிலேயே இந்த ஒரேயொரு கம்பனியில் மட்டும் தான் தொழில் புரியும் எல்லோருமே ஆடைகள் இன்றி தொழில் புரிகின்றனர்.

மூன்று வருடங்களுக்கு முன் இந்தக் கம்பனி தொடங்கப்பட்டது. இந்தக் கம்பனி வழங்கும் சேவையின் தொனிப்பொருள் “மூவ் யுவர் மௌஸ்”

என்பதாகும்.

வாடிக்கையாளர்களுக்கு தமது சொந்த இணையத்தில் படப்பிடிப்பு பற்றிய மேலதிகத் தகவல்களை வழங்குவது தான் இந்தச் சேவை.

எமது அலுவலகச் சுற்றாடல் இயல்பான போக்கை விரும்புகின்றவர்களுக்கு மிகவும் உகந்தது. இதமானது, தனிப்பட்டது, மகிழ்ச்சி மிக்கது என்று

தற்போது வெளியாகியுள்ள விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஏழு பெண்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தனது அலுவலகம் ஆண் ஆதிக்கம் குறைந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தான் பெண்களை விண்ணப்பிக்குமாறு கேட்டுள்ளதாகவும் அவர்

கூறியுள்ளார்.

தற்போது இந்தக் கம்பனியில் பல ஆண்களின் நடுவே ஒரேயொரு பெண் மட்டுமே தொழில்புரிகின்றார். இதை சமப்படுத்த வேண்டும் என்கிறார் டேலர்