15 ஜூலை, 2013

இளமை

முகம்,சரும பகுதிகளில் சுருக்கம் விழுகிறதா? வயதான தோற்றம் தருகிறதா?.கவலையேபடாதீங்க;தினமும் தக்காளி சாப்பிடுங்க,போதும்;இளமை ஊஞ்சலாடும்!அமெரிக்க நிபுணர் மார்க் பிர்க்மேகின் தலைமையிலான நிபுணர்கள் குழு,இது பற்றி ஆராய்ந்து புதிய உண்மைகளை கண்டுபிடித்துள்ளது.இவர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பது... 
ஆப்பிள் மட்டுமல்ல;தக்காளியும் உடலுக்கு மிக நல்லது.தினமும் எந்த வகையிலாவது உணவில் தக்காளி சேர்த்துக் கொண்டால் போதும்,வயதான தோற்றமே தெரியாமல் இளமை நீடிக்கும்.முகத்தில் சுருக்கம் விழாது;சருமம் பளபளவென இருக்கும்.

தக்காளி சாப்பிட்டு வந்தால்,உடலில் "கொல்லெஜன்" என்ற ப்ரோட்டீன் உற்பத்தி அதிகரிக்கிறது.சருமம் சுருங்காமல் ,வழவழப்புத் தன்மை தருவது இந்த ப்ரோட்டீன் தான்.

நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணம் செய்து,அவற்றில் இருந்து சத்துகளை பிரித்து பல உறுப்புகளுக்கும் அனுப்பும் வேலையை செய்வது,"மிடோசோன்ட்ரியா" என்ற செல் பகுதி தான்.வயதான தோற்றம் தெரியாமல் இருக்க இந்த செல் மிகவும் பயன்படுகிறது.தக்காளி சாப்பிட்டால் ,இந்த செல் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில் முக்கிய பங்காற்றுகிறது,"இக்டோபென்" என்ற,"ஆன்டி-ஆக்சிடன்ட்!" மார்பக புற்றுநோய் உட்பட பல வகை புற்றுநோய்கள் வராமல் தடுப்பதில் இதன் பங்கு அதிகம்.ஆண்களின் மலட்டுத்தன்மையை அறவே போக்குவதும் இதன் வேலை. தினமும் தக்காளி சாப்பிடுவதால் இந்த,"ஆன்டி-ஆக்சிடென்ட்"டும் அதிகரிக்கிறது.தக்காளியை பச்சையாக சாப்பிடுவதை விட சமைத்து சாப்பிடுவதில் தான் அதிக சத்துகள் கிடைக்கும்.மற்ற காய்கறிகள் போல சமைத்த பின் தக்காளியில் சத்துக்கள் குறைவதில்லை;அதனால்,உடலுக்கு முழு சத்துக்கள் கிடைக்கின்றன.