02 ஜூலை, 2013

கம்ப்யூட்டர் டிப்ஸ்

.
வைரஸ்... ஜாக்கிரதை!
ஒருமுறை ஆன்டி வைரஸ் நிறுவிவிட்டால் அது எல்லா வைரஸ்களையும் தவிர்த்துவிடாது. அவ்வப்போது அப்டேட் செய்துகொண்டே இருக்கவேண்டும். காரணம், புதுப் புது வைரஸ்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலான வைரஸ்களை உற்பத்தி செய்வதே சில ஆன்டி வைரஸ் நிறுவனங்கள்தான் என்ற பேச்சும் உண்டு. வைரஸ் தடுப்புக்காக, ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்டி வைரஸ்களை நிறுவக்கூடாது. தரமான நிறுவனத்தின் ஆன்டி வைரஸ் மென்பொருளையே நிறுவுங்கள். வைரஸ் ஏதேனும் புகுந்திருக்கிறதா என்று தினசரி உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்யுங்கள்.

கம்ப்யூட்டரே கதியாக இருக்காதீர்!
சிலர், வேலை வேலை என்று கம்ப்யூட்டரிலேயே ஆழ்ந்து இருப்பார்கள். வேறு சிலர் ப்ளாக், ட்விட்டர், ஃபேஸ்புக் என நாள் முழுக்க மூழ்கி... குடும்பம், உறவு என அனைத்தையும் துறந்து, கம்ப்யூட்டருக்கே அடிமையாகிவிடுவார்கள். ஆரம்பத்திலேயே இதைக் கவனித்து நெறிமுறைப்படுத்தாவிட்டால், பலவிதமான சிக்கல்களும், தேவையற்ற மனஉளைச்சல்களும் ஏற்படக்கூடும். கம்ப்யூட்டருடன் அளவோடு உறவாடி, குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குவதே உத்தமம்.

அளவுக்கு மிஞ்சினால்  உடலுக்கு கேடு!
தொடர்ந்து கம்ப்யூட்டர் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குப் பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு  வாய்ப்புக்கள் உண்டு. பார்வைக் குறைபாடு, முதுகுவலி, தலைவலி போன்றவை அதிக நேரம் கம்ப்யூட்டர் திரையையே உற்றுப் பார்ப்பதாலும், ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதா லும் ஏற்படுகின்றன. இடைவெளி கொடுத்து, சற்றே நடமாடி, தூரத்தில் தெரியும் மரங்களிலோ அல்லது கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகளிலோ சற்று நேரம் கவனம் செலுத்துங்கள். புத்துணர்ச்சி கிடைக்கும்.

'எர்த்’ விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்!
சில கம்ப்யூட்டர்களின் இரும்புப் பகுதியைத் தொடும்போது 'சுரீர்’ என்று மெலிதான ஷாக் அடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். சரியான முறையில் 'எர்த்’ இணைப்பு கொடுக்காததே இதற்குக் காரணம். கவனிக்காமல் விட்டுவிட்டால்... மின்கசிவு ஏற்படவும், கூடுதல் மின்சாரம் உங்களது உடலில் பாயவும் நேரிடலாம். சரியான எலெக்ட்ரீஷியன் உதவியுடன் முறையாக எர்த் இணைப்பைக் கொடுப்பது அவசியம். 'லேசான ஷாக்’தானே என்று அசிரத்தையாக இருந்துவிட்டால், ஆபத்தான அளவு மின்சாரம் பாயவும் வாய்ப்பு உண்டு.

உயரம்... உஷார்!
 படிக்கும்போது வெளிச்சம் நமக்குப் பின்புறத்தில் இருந்து வருவது நல்லதல்லவா? ஆனால், கம்ப்யூட்டரில் பணிபுரியும்போது வெளிச்சம் நமக்கு முன்புறம் இருந்து வருமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதுதான் கண்ணுக்கு சிரமம் தராமல் இருக்கும். மேலும் ரேடியேஷனைத் தவிர்க்கும் திரையையும் மானிட்டருக்குப் பொருத்தலாம். திரையின் வெளிச்ச அளவு மற்றும் வண்ணங்களின் அடர்த்தி ஆகியவையும் தேவையான அளவிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உயரம் மற்றும் மேஜையின் உயரம் ஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு அதற்கேற்ற உயரம் உடைய நாற்காலிகளைத் தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் கணினியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணி புரிபவரா? உங்கள் கண்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்களைப் பார்ப்போம்.

ஆயர்வேத மருத்துவ அடிப்படைத் தகவல்(Ayarveta Medical Basic Information) என்ன சொல்கிறதெனில், மனிதனின் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (Land, water, fire, air, space) என ஐம்பூதங்கள்.

இவையனைத்தும் ஒன்றாய் தொகுத்து உருவாக்கப்பட்டதே மனிதனின் உடல்.

உங்கள் கண்களுக்கும், உடலுக்கும் எப்படி பாதுகாப்பு

தொடர்ந்து இடைவிடாமல் கணினியில் உட்கார்ந்துகொண்டு வேலைப் பார்ப்பவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகும். உடல் சோர்வில் கண்களும் அடங்கும். கணினியால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்பு கண்கள்தான். 

அடிக்கடி computer Screen Blink ஆவதால்தான் கண்களுக்குப் பிரச்னையே உண்டாகிறது. தொடர்ந்து இவ்வாறான ஒளிகளை கண்கள் சந்திப்பதால் உடலில் உள்ள உயிர்த்துடிப்பை இயக்குகிற காற்று சிரமத்திற்கு ஆட்படுகிறது. அடிக்கடி ஒளிரும் கணினித் திரையால் உடலில் உள்ள உணர்ச்சி மண்டலம், புலன் உணர்வு மற்றும் மூளை போன்ற நரம்பு தொடர்பான இத்தியாதிகள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆட்படுத்தப்படுகின்றன.

உடலில் உள்ள பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று அதிக சிரமத்திற்கு உள்ளாவதால்தான் மனதும் சோர்வடைந்து மன இறுக்கம் ஏற்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு மூளைக்கு வேலை கொடுப்பதால் அதிக உடல்சோர்வும், மனச்சோர்வும் ஏற்படுகிறது.

மனச்சோர்வு, உடல் சோர்வு, கண்கள் சோர்வடைவதை எப்படி தடுப்பது?
அமெரிக்க மருத்துவரான ஜூடித் மாரிசன் இதற்கென சில வழிமுறைகளை நமக்கு கற்றுக்கொடுக்கிறார். பெண் மருத்துவரான இவர் ஆயுர்வேத முறைப்படி நல்லெண்ணையை முகம் முழுவதுமாக பூசி மசாஜ் செய்யச்சொல்கிறார்.

பிறகு முழங்கையில் தொடங்கி விரல் நுனிகள் வரை நல்லெண்ணையை (Sesame oil)தடவி நன்றாக மசாஜ் செய்யச் சொல்கிறார்.

சில நேரம் கணினியின் இயக்கத்தை நிறுத்திவிட்டோ, அல்லது எழுந்து வெளியில் சென்று ஒரு ஐந்து நிமிடமாவது அலவலாவச் சொல்கிறார். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது இப்படி ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தால் உடலும், மூளையும் ஒரு சீரான நிலைக்கு மீண்டும் திரும்பும்.

அவ்வப்போது உங்கள் கைவிரல்களை நீட்டி மடக்கலாம். நீங்கள் உங்கள் கை விரல்கள், மற்றும் கைகளை இலேசாக அழுத்தி மசாஜ் செய்துகொள்ளலாம். இதனால் நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராகும்.

கணினி இருக்கையில் உட்கார்ந்தவாறே கூட உங்கள் கண்களுக்கு நீங்கள் ஓய்வளிக்கலாம் (You can rest your eyes) . உள்ளங்கை கொண்டு உங்கள் கண்களை மூடிக்கொண்டு. நான்கு புறமும் கண்களை சுழற்றுவதன் மூலம், ஒரு நேர்க்கோட்டுப் பார்வையில் வேலை செய்த உங்கள் கண்களும், கண் தசை நார்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வைக்கலாம். இயல்பு நிலைக்கு கண் தசைநார்கள்(Eye ligaments) திரும்புவதால் கண்களுக்கு ஏற்படும் சோர்வு, அயற்சி நீங்கும்.

கணினி முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்யும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், அக்கவுண்டன்ட், முழுநேர பதிவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மற்றும் மாணவர்கள் (Data entry operators, accountant, full-time bloggers, software engineers, and students) ஆகியோர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி நல்ல பலனைப் பெறலாம். இரவில் இந்த நல்லெண்ணை மசாஜ் செய்துகொள்ளலாம்.

பகலில் கைவிரல்கள், தோள்பட்டை, பின்னங்கழுத்து, முதுகுத் தண்டு (Fingers, shoulder, hind neck, spinal cord) ஆகியவற்றை நீங்களே பிடித்துவிட்டுக்கொள்வதன் மூலம் இலேசாக நீவிக்கொள்வதன் மூலம் முதுகு வலி, கழுத்து வலி, முழங்கை வலி (Back pain, neck pain, elbow pain) ஆகிய வலிகளிலிருந்து நீங்கள் தற்காத்துக்கொள்ள முடியும். அடிக்கடி கண்களுக்கு பயிற்சி அளித்துக்கொள்வதன் மூலம் கண்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.


1. சேப் மோட்:
உங்களுடைய கம்ப்யூட்டரை இன்டர்நெட் இணைப்பி லிருந்து நீக்கவும். கம்ப்யூட்டரை சுத்தப் படுத்த நீங்கள் தயாராகும்வரை இன்டர்நெட் இணைப்பினைத் தர வேண்டாம். இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர், பரவுவதையும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்புவதனையும் தடுக்கலாம்.

உங்களுடைய கம்ப்யூட்டரில் மால்வேர் இருப்பதாக உணர்ந்தால், சேப் மோடில் (Safe Mode) பூட் செய்திடவும். இதற்கு கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, பின்னர் எப்8 கீயின் இடம் அறியவும். பின்னர், பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்கி, திரையில் ஏதேனும் தென்பட்டவுடன், எப்8 கீயினைத் தட்டிக் கொண்டே இருக்கவும்.

இதனால், Advanced Boot Options என்ற மெனு கிடைக்கும். அதில் Safe Mode with Networking என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். சேப் மோடில் உங்கள் கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் சற்று வேகமாக இயங்கு வதனைக் காணலாம். அவ்வாறு இயங்கி னால், மால்வேர் நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது.

2. தற்காலிக பைல் நீக்கம்:
சேப் மோடில் இருந்தபடி, வைரஸ் ஸ்கேன் செய் திட நீங்கள் விரும்பலாம். அதற்கு முன்னர், தற்காலிக பைல்களை நீக்கவும். இதனால், டிஸ்க் இடம் சற்று கூடுதலாகக் கிடைக்கும்; வைரஸ் ஸ்கேனிங் வேகமாக நடைபெறும். விண்டோஸ் இயக்கத்துடன் வரும் Disk Cleanup utility என்பதைப் பயன்படுத்த, Start, All Programs (or just Programs), Accessories, System Tools, Disk Cleanu எனச் செல்லவும்.

3. மால்வேர் ஸ்கேனர் தரவிறக்கம்:
உங்கள் கம்ப்யூட்டரில் செட் செய்து வைத்திருந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்குப் பதிலாக, வேறொரு மால்வேர் ஸ்கேனிங் அல்லது எதிர்ப்பு புரோகிராமினை இயக்கவும். இதற்காக, இணையத்திலிருந்தும் இறக்கிக் கொள்ளலாம். லட்சக் கணக்கில் மால்வேர் புரோகிராம்கள் மற்றும் வைரஸ்கள் இருப்பதால், எந்த ஒரு ஆண்ட்டி வைரஸ் மற்றும் மால்வேர் எதிர்ப்பு புரோகிராம்கள் அவை அனைத்தையும் நீக்கும் என எண்ண வேண்டாம்.

நாம் எப்போது நாமாக இயக்குகிறோமோ, அப்போது இயங்கத் தொடங்கி, மால்வேர்களை அழிக்கும் புரோகிராம்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றை தரவிறக்கம் செய்து பயன் படுத்தவும். அதனை அடுத்து, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். கீழ்க்காணும் புரோகிராம்கள் இந்த வகையில் அதிகப் பயனுள்ளவை. ஆBitDefender Free Edition, Kaspersky Virus Removal Tool, Malwarebytes, Norman Malware Cleaner, மற்றும் Super Anti Spyware.

4. மால்வேர் பைட்ஸுடன் (Malwarebytes) ஸ்கேன்:
இந்தவகையில் மிகச் சிறந்த Malwarebytes புரோகிராமினை இயக்குவது நல்லது. உங்களிடம் இந்த புரோகிராம் இல்லை என்றால், http://www.malwarebytes. org/ என்ற இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பின்னர், இணைய இணைப்பினை நிறுத்திவிட்டு, ஸ்கேன் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இதனை தரவிறக்கம் செய்திட முடியாத போது, மற்றொரு கம்ப்யூட்டரின் இணைய இணைப்பில் பெற்று, இதில் இன்ஸ்டால் செய்திடலாம்.

மால்வேர் பைட்ஸ் ஸ்கேன் செய்திடுகையில் ‘Perform quick scan’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து இயக்கவும். அதிக பட்சம் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை இந்த ஸ்கேன் பணி செயல்படுத்தப்படும். இந்த பணி நடைபெறுகையில், இந்த ஸ்கேனர் மறைந்து பின்னர் அதனை மீண்டும் பெற இயலவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டரில் ரூட்கிட் என்ற வைரஸ் அல்லது அதனைப் போன்று செயல்படும் வைரஸ் உள்ளது என்பது உறுதி.

ஏனென்றால், இந்த வகை வைரஸ்கள், எந்த ஸ்கேனரையும் இயங்கவிடாமல், அவற்றையும் முடக்கி விடும் தன்மை கொண்டன. அப்படிப்பட்ட வைரஸ் இருந்தால், உங்கள் பைல்கள் அனைத்தையும் பேக் அப் செய்த பின்னர், விண்டோஸ் இயக்கத்தை மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்வதே சிறந்த வழியாகும்.

மால்வேர் பைட்ஸ் வெற்றிகரமாக இயங்கி முடித்த பின்னர், பைல்களின் நிலை குறித்த அறிக்கை ஒன்று டெக்ஸ்ட் பைலாகக் கிடைக்கும். சந்தேகப்படும் படியான பைல்களையும், பாதிக்கப்பட்ட பைல்களையும் பட்டியலிட்டுக் காட்டும். இவற்றை நீக்கவா என்ற கேள்வியும் கேட்கப்படும். இவற்றை நீக்குவதே நல்லது.

இவை நீக்கப்பட்டவுடன் மால்வேர் பைட்ஸ் உங்கள் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குமாறு கேட்கும். ஓகே கிளிக் செய்து இயக்கவும். மால்வேர் புரோகிராம்கள் நீக்கப்பட்டு, கம்ப்யூட்டர் மறுபடியும் இயங்கத் தொடங்கியவுடன், வழக்கமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மூலம், கம்ப்யூட்டரின் அனைத்து ட்ரைவ்களையும் சோதனை செய்திடவும்.

5. பிரவுசரை சரி செய்க:
மால்வேர் தொகுப்புகள், விண்டோஸ் சிஸ்டம் பைல்களைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் நம் பிரவுசரில் மாற்றங்களை ஏற்படுத்தி, தொடர்ந்து கம்ப்யூட்டரில் இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் நுழைந்திட வழி வகுக்கின்றன. எனவே அடுத்த இணைய இணைப்புக்கு முன்னர், பிரவுசரின் அனைத்து செட்டிங்கு களையும் ஒருமுறை சோதனை செய்து பார்த்துவிடுவது நல்லது.

6. சிஸ்டம் பைல் சரி செய்தல்:
ஒன்றும் செயல்படுத்த முடியாமல் போய், விண்டோஸ் இயக்க பைல்களை மீண்டும் பதிப்பதுதான் ஒரே வழி என்றால், அனைத்து பைல்கள், ட்ரைவர்களை பேக் அப் எடுக்க வேண்டும். இதற்கு Double Driver என்ற புரோகிராம் உதவும். உங்களிடம் ட்ரைவர் டிஸ்க்குகள் இல்லை என்றாலும், இந்த புரோகிராம் உங்களுக்கு உதவிடும்.

7. கம்ப்யூட்டரை "சுத்தமாக' வைத்திடுக:
கம்ப்யூட்டரில் எப்போதும் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோ கிராம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். கட்டணம் செலுத்தி இதனை வாங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க இயலாவிட்டால், இலவசமாகக் கிடைக்கும் Avast, AVG, Comodo, மற்றும் Microsoft Security Essentials போன்ற தொகுப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

வழக்கமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் OpenDNS போன்ற புரோகிராம் களைப் பயன்படுத்துவதும், மால்வேர் புரோகிராம்களிடமிருந்து கம்ப்யூட்டரைக் காப்பாற்றும். நம் பணிகளுக்கு என்றும் கம்ப்யூட்டரையே நம்பி இருப்பதால், நம் முக்கிய ஆவணங்களை அதில் மட்டுமே பல வேளைகளில் பதிந்து வைத்திருப்ப தால், கம்ப்யூட்டரை வெளித் தாக்குதல் களில் இருந்து காப்பாற்றுவது நல்லது.