15 ஜூலை, 2013

விரைவான இணைய உலாவல்

அனைவருக்கும் இணைய இணைப்பு கிடைத்தாலும் பெரும்பாலான இடங்களில் அதன் தரம் குறைவானதே.. இதனால் அனைவரும் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனை காணொளிகளை காண முடியாமை. இதை விட பெரும் பிரச்சனை இணைய பக்கங்கள் துண்டாட படுத்தல். அதாவது முழுவதுமாக தோன்றாமல் அறிகுறையாக வருதல். comment box போன்றவை தோன்றாமல் விடுதல், படங்கள் மறைதல் இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.இணைய இணைப்பு வேகம் அதிகரிக்காத வரை இவற்றை நேரடியாக சீர் செய்ய முடியாது. ஆனால் இணைய பக்கங்களை servers மூலம் வேறு ஒரு இடத்தில் தரவிறக்கி optimize மீள நீங்கள் காணும் ஒரு நுட்பம் பற்றி காண்போம்.

இதற்கு முன் மிக மெதுவான இணைப்பிலும் youtube காணொளிகளை காணும் நுட்பத்தை பகிர்ந்து இருந்தேன். இப்போதும் அதே நுட்பத்தில் அதாவது mobile இல் தரவிறக்குவது போன்ற முறையில் கணனியில் இணைய பக்கங்களை காணும் முறையை காண்போம்.


மெதுவான இணைப்பிலும் இயங்கும் ஒரு உலாவி என்றால் அது opera தான். ஆனால் opera கையடக்க தொலைபேசிகளிலே இயங்குவதில் பிரபலம் மிக்கது. java வினை கொண்ட எந்த mobile இலும் இயங்குவது இதன் சிறப்பு.

இதே opera நிறுவனம் developing தேவைகளுக்காக அறிமுகப்படுத்திய Opera Mobile Emulator என்ற மென்பொருள் மூலமே மெதுவான இணைய இணைப்பிலும் விரைவான இணைய உலாவல் மேற்கொள்வது பற்றி பார்ப்போம்.

உண்மையில் Opera Mobile Emulator நோக்கம், வெவ்வேறு mobile இல் உள்ள opera mini இல் இணைய பக்கம் எப்படி தோன்றும் என்பதை கணனியில் காண்பதே ஆகும்.

Opera Mobile Emulator நேரடியாக இணைய பக்கத்தை தரவிறக்காமல் தனது serverகளில் தரவிறக்கி பக்கத்தை ஒழுங்காக்கி மிக விரைவாக உங்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் ஒரு விரைவான உலாவல் அனுபவத்தை 2G (2.5G) வலையமைப்பிலும் பெற முடியும்.

இதன் மூலம் இன்னும் பல நன்மைகள் உள்ளன.


விரைவான உலாவல்
Tracking இல் இருந்து பாதுகாப்பு
பல வித mobile களிலும் உலாவும் அனுபவம் 
mobile இல் மட்டுமே காண கூடிய பக்கங்களை கணனியில் காண முடிகின்றமை.
Adsense tricks
Product Site: opera.com/


சில வேலைகளில் பக்கங்கள் வேறு விதமாக தோன்றினால் Setting > User Agent > Desktop ஆக மாற்றி விடுங்கள்.
மிக விரைவாக வேண்டும் என்றால் அல்லது இணைப்பு மிக மெதுவானது ஆயின் Setting> opera turbo > always on இல் மாற்றி விடுங்கள்.


கவனிக்க: Opera Desktop Browser வேறு , Opera Mobile Emulator வேறு