02 ஜூலை, 2013

போன்சாய்

 குட்டி மரம்..... போன்சாய்

குட்டி குட்டி தட்டுகளில் குட்டி குட்டி மரங்களாக இருப்பவைதான் போன்சாய் மரங்கள். போன்சாய் என்பது சீன மொழியிலிருந்து வந்த ஜப்பானிய வார்த்தை. அழகுக்காகவே வளர்க்கப்படும் மிக பெரிய கலையாக இருக்கின்றது. இதனை வளர்க்க பொறுமை மிக அவசியம். 30 முதல் 100 ஆண்டுகள் வரையிலான மரங்கள் ஒரு குட்டி தட்டுகளில் வளர்க்கப்படுவது பார்க்க அழகாக இருக்கும். ரசித்து ரசித்து செய்யவேண்டிய கலை.

உண்மையில் போன்சாய் மரங்கள் குட்டையான மரங்கள் அல்ல, குட்டையாக வளர்க்கப்படுகின்றது. அதற்காக அந்த மரங்களை கொடுமை படுத்துவதாக இல்லை மாறக அதற்காக பக்குவ படுத்தப்படுகின்றது. எல்லா மரங்களைப்போல நீர், காற்று, உரம் எல்லாம் இடப்படும் ஆனால் வளர்ச்சியை மட்டும் கட்டுப்படுத்தி வளர்க்கப்படுகின்றது. இலைகளையும் வேர்களையும் அதற்காக அதிகமாகாமல் வெட்டி சீர் செய்யப்படுகின்றது. சிங்கப்பூரில் உள்ள சீனத்தோட்டத்தில் இதற்காக ஒரு சிறப்பு இடம் ஒதுக்கி வளர்க்கப்படுகின்றது. அனுமதி இலவசம் வாய்புள்ளவர்கள் சென்று பார்க்கலாம்...... புகைப்படங்கள் சிங்கப்பூர் சீனத்தோட்டத்தில் எடுத்தது.