14 பிப்ரவரி, 2013

உங்கள் வீடு

வீட்டின் நீளத்தையும் அகலத்தையும் பெருக்கி வரும் தொகையை மீண்டும் ஒன்பதால் பெருக்க வேண்டும்.

அந்த தொகையை எட்டால் வகுத்து வரும் மீதியை கொண்டு வீட்டின் வாஸ்து பலன் அறியலாம்.

மீதி பூஜ்யம் வந்தால் :

அதற்கு பெயர் காக்கை கர்ப்பம்

பலன் : வீட்டில் உள்ளவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டும்.மீதி ஒன்று வந்தால் :

அதற்கு பெயர் த்வஜ கர்ப்பம்

பலன் : வீட்டில் செல்வம் செழித்தோங்கும்

மீதி இரண்டு வந்தால் :

அதற்கு பெயர் தூம கர்ப்பம்

பலன் : வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்

மீதி மூன்று வந்தால் :

அதற்கு பெயர் சிம்ம கர்ப்பம்

பலன் : நோய்கள் அண்டாது ,செல்வம் விரைவாக சேரும்.

மீதி நான்கு வந்தால் :

அதற்கு பெயர் நாய் கர்ப்பம்

பலன் :  குடும்பத்தில் அனைவரும் வியாதியால் பாதிக்கபடுவார்கள்

மீதி ஐந்து வந்தால் :

அதற்கு பெயர் விருஷப கர்ப்பம்

பலன் : வாழ்க்கையில் முன்னேற கடுமையாக போராட வேண்டி  இருக்கும்.

மீதி ஆறு வந்தால் :

அதற்கு பெயர் கழுதை கர்ப்பம்

பலன் : பணம் சம்பாதிக்க படாத பாடு பட வேண்டி இருக்கும். வீட்டில் ஏதாவது கவலை வந்து கொண்டே இருக்கும்.

மீதி ஏழு வந்தால் :

அதற்கு பெயர் யானை கர்ப்பம்

பலன்: சொகுசான வாழ்கை கிடைக்கும்