13 பிப்ரவரி, 2013

விண்கற்களால் மொபைலுக்கு ஆபத்து

புதுடில்லி: பிப்ரவரி 15ம் தேதி புவி வட்டப்பாதைக்கு அருகே வந்து செல்லும் விண்கற்களால் மொபைல் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வினாடிக்கு 8 மைல் வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கற்கள் தொலைத்தொடர்பு செயற்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்த விண்கற்களால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.