26 பிப்ரவரி, 2013

ஆண்களின் அழகு

           ஒரு பெண்ணுக்கு வரன் பார்க்க வேண்டும் என்று நினைத்தவுடன் என்ன செய்கிறார்கள். பையன் என்ன வேலை பார்க்கிறான். பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறானா மாதத்திற்க்கு எவ்வளவு சம்பாதிக்கிறான். லட்சத்தை தாண்டுமா என்று பார்க்கிறார்கள். லட்சத்தை பார்க்கிறார்களே தவிர ஆணுக்கு உடைய லட்சணத்தில் இருக்கிறானா என்று பார்ப்பதில்லை.

           நிறைய சம்பாதிப்பவன் என்ன செய்வான் வேலையை கட்டிக்கொண்டு அதனுடன் போராடிக்கொண்டிருப்பான் அவன் வீட்டிற்க்கு வந்தவுடன் எப்படா படுத்து தூங்கலாம் என்று தான் பார்ப்பான். மனைவியுடன் என்ன பேசபோகிறான்.
சம்பளம் எந்தளவுக்கு வாங்குகிறானோ அந்தளவுக்கு மன உளச்சல் கண்டிப்பாக அவனுக்கு இருக்கும் எவனும் சும்மா பணத்தை தரமாட்டான் அந்தளவுக்கு வேலையை வாங்கிகொண்டு தான் சம்பளத்தை கொடுப்பான்.
ஆண்களின் ஜாதகத்தில் மூன்றாவது வீடு என்பது முக்கியமான ஒன்று அதை நன்றாக பார்த்து தான் பெண் வீட்டார்கள் பெண்ணை கொடுக்க வேண்டும்.
           
           சுக்கிரனை சுக்கிலகாரகன் என்றும் சொல்லுவார்கள் சுக்கிரன் கெட்டால் ஆண்மை இழப்பு இருக்கும். மூன்றாம் வீட்டில் சுபகிரகங்களை விட தீயகிரகங்கள் இருந்தால் ஆண்மை தனம் மின்னும். இல்லற வாழ்க்கையில் தாம்பத்திய உறவு என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தாம்பத்திய உறவுக்கு நல்ல மனநிலை இருந்தால் தான் ஈடுபாடு இருக்கும். வேலையை கட்டிக்கொண்டு இருப்பவன் மனநிலை குறைபாடு இருக்க செய்யும். மனகாரகனாகிய சந்திரனும் நன்றாக இருந்தால் தான் முழு ஈடுபாட்டோடு ஈடுபடமுடியும்.

           ஆண்களின் ஜாதகத்தில் மூன்றாவது இடம், இனஉறுப்புகளை காட்டும் எட்டாம் இடம், படுக்கையறையை காட்டும் பனிரெண்டாம் இடம் ஆகியவற்றை நன்றாக ஆராய்ந்து பெண்ணை திருமணம் செய்து வைப்பது நல்லது. ஆண்களின் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் பலம் பெற்று நின்றால் ஆண்கள் பெண்கள் போல இருப்பார்கள் நடை பாவனை செயல்பாடு அனைத்தும் பெண்மை மின்னும்.

           ஆண்களின் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசி அவர் எந்த நட்சத்திரத்தில் செல்லுகிறார் அனைத்தையும் பார்த்து தான் ஆண்மை உடையவரா என்று பார்க்கமுடியும். அலிகிரகத்தில் நின்றால் அலிதன்மையை அதிகமாக தரும். சுக்கிரன் செல்லும் நட்சத்திரமும் முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

           இந்த மூன்றாவது வீடு என்பது உங்களின் இளைய சகோதரர் மற்றும் பக்கத்துவீட்டுகாரரை காட்டும் இடமும் கூட நீங்கள் இந்த விசயத்தில் வீக்காக இருந்தால் இவர்களின் பங்களிப்பு உங்களின் வாழ்க்கையில் வந்துவிடும் எச்சரிக்கை. எந்த கிரகம் எப்படி இருந்தாலும் உங்கள் லக்கானாதிபதி நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே தாம்பத்திலும் திருப்திகரமான வாழ்வு இருக்கும். 

           அந்த காலத்தில் பெண்ணை கொடுப்பதற்க்கு மாட்டை அடுக்குவது கல்லை தூக்க சொல்வது எல்லாம் இதற்கு தான் இருக்கும். இந்த காலத்தில் இந்த டெஸ்ட் வைத்தால் ஒரு பெண்ணுக்கு கூட திருமணம் நடைபெறாது. ஒருவன் எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு பெண்ணை திருப்திபடுத்தமுடியவில்லை என்றால் அவன் உயிரோடு இருந்தும் வீண்தான்.
           
           ஆண்களின் அழகு சம்பாதிப்பதில் விட ஆண்மையை காட்டுவதில் தான் இருக்கிறது.  தாம்பத்திய வாழ்வைப்பற்றி பார்க்க வேண்டும் என்றால் ஏகாபட்ட தகவல் சோதிடத்தில் இருக்கிறது அதை எல்லாம் அவ்வப்பொழுது பார்க்கலாம். இப்பொழுது இந்த தகவல் போதும்.

பரிகாரம்
மன்மதன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்.