13 பிப்ரவரி, 2013

மின்சார அடுப்பு!


மின்சார அடுப்பை பயன்படுத்துவது கேஸ் சிலிண்டருக்கு ஒரு சிறந் 
த மாற்று. ஒரு கேஸ் சிலிண்டர் குறைந்தது 45 நாள் வருகிறது என வைத்துக்கொள்வோம். ஒருகேஸ் சிலிண்டர் ரூ.386.50 விலை எனி ல், சராசரியாக ஒரு நாளைக்கு ரூ. 8.50 செலவாகும். அதே ஒரு கேஸ் சிலிண்டர் 733 ரூபாய்க்கு வாங்கி னால் ஒரு நாளைக்கு ரூ.16.28 செலவாகும்.
மின் அடுப்பின் மூலம் ஒரு நாளை க்கு ஒரு குடும்பத்திற்குத் தேவை யான சாதம், சாம்பார், பொரியல், டீ, பால் காய்ச்சுவது, இட்லி அல் லது தோசை என மூன்று வேளையும் செய்ய ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு மணி நேரம் ஆகும். ஒரு மணி நேரத்திற்கு மின் அடுப் பில் 1,000 வாட் பவரில் வைத்து தொடர்ந்து ஒரு மணி நேரம் சமை த்தால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதாவது, ஒரு நாளைக்கு 2 யூனிட் மின்சாரம் செலவாகும்.
உங்களின் வீட்டில் அதிக பட்ச மாக 500 யூனிட்டுக்குள் மின்சா ரம் பயன்படுத்தினால், நீங்கள் ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டியிருக்கும். அதாவது, மின் அடுப்பிற்காக ஒரு மாதத்திற்கு ரூ.180 உங்களுக்குச் செலவாகும். ஒரு வருடத்திற் கு அதிகபட்சமாக ரூ.2,160 செலவாகும். ஆனால், மானியம் மற்றும்மானியமில்லாத விலையில் ஆண்டு க்கு 10 கேஸ் சிலிண்டர் வாங்கினால் 5,251 ரூபாய் செலவாகும். இதனோடு ஒப்பிட்டால் மின் அடுப்புக்கு நீங்கள் செய்யும் செலவு  மிகக் குறைவுதான்.
ஆனால், நீங்கள் சொந்த வீட்டில் இரு ந்தால் மட்டுமே இந்த கணக்கு சரிவரும். நீங்கள் வாடகை வீட்டில் இருந்து, ஒரு யூனிட்டுக்கு 6 முதல் 8ரூபாய் தரும்பட்சத்தில், அதற்கா கும் செலவை நீங்கள் கேஸ் வாங்கி பயன்படுத்திவிடலாம்.
சாதம், பிரியாணி, பொங்கல் செய்ய மட்டுமே எலெக்ட்ரிக் குக்கர் பயன் படுத்தப்படுகிறது. இதில், சாதம் வேக குறைந்தபட்சம் 30 முதல் 45 நிமிடங் கள் ஆகின்றன. மின் அடுப்புக்குச் செலவாகும் அதே அளவு மின்சாரம் தான் இதற்கும் தேவைப்படும். ஆவி யில் வேக வை க்கும் பொருட்களை இதில் வேக வைத்து எடுத்துக் கொள் ளலாம்.