19 ஜூன், 2012

உலக அழிவை பற்றி...


மாயர்களின் நாட்காட்டியின் அடிப்படையில் 2012 ம் ஆண்டிறுதியில் உலக அழிவு ஏற்படும் என இதற்கு முன்னர் பல தடவைகள் கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தன.
இதற்கான காரணமாக மாயர்கள் தயாரித்த நாட்காட்டி 2012 ம் ஆண்டில் நிறைவடைகின்றமையையே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இருந்த போதும், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மாயர்களுக்கு உரித்தான நாட்காட்டியின் அடிப்படையில் உலக அழிவு தாமதமடையும் என குறிப்பிடப்பட்டள்ளது.
இதனடிப்படையில் 2300 ம் ஆண்டு காலப்பகுதி என்ற நீண்ட எதிர்காலத்தின் பின்னர் இயற்கை அழிவுகள் ஏற்படும் என எதிர்வு கூறுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இருந்தபோதும் இலங்கையிலும், அதற்கு வெளியிலும் இடம்பெறும் சம்பவங்களை நோக்குமிடத்து விரைவில் உலக அழிவு ஏற்படும் தமக்கு தோன்றுவதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.