19 ஜூன், 2012

19-6-2012 இன்று ஜப்பானில் நிலநடுக்கம்

டோக்கியோ: ஜப்பானில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

ஜப்பானில் உள்ள ஹோன்ஷு கடற்கரை அருகே இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கடும் நிலநடுக்கும் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடு்ககம் 6.1க பதிவாகியிருந்தது என்று சீன பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் ரிக்டர் அளவுகோலில் 6.4க பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் கடலில் 40 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன மையமும், பசிபிக் கடற்கரையில் உள்ள மொரியோகோவில் 31 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க மையமும் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடல் அலைகள் உயர எழுந்தபோதிலும் சுனாமி எச்சரிக்கை